Saturday, December 30, 2006

குழந்தைகள் பிணக்குவியல்

டெல்லி: 30 குழந்தைகளை கொன்ற கொடூரன்

டிசம்பர் 30, 2006

டெல்லி: டெல்லி அருகே மர்ம பங்களாவுக்குள் 30 சிறுமிகளின் எலும்புக் கூடுகள் குவியல் குவியலாக தோண்டி எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி புறநகர்ப் பகுதியான நோய்டா அருகே உள்ள நிதாரி என்ற கிராமத்தில் மொஹீந்தர் சிங் என்பவருக்குச் சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது. இவர் கிரேன் டீலராக இருக்கிறார். இவரது வீட்டில் சதீஷ் என்ற சுரேந்திரா என்பவர் வேலைக்காரராக இருந்து வந்தார். சதீஷ் உத்தராஞ்சல் மாநிலம் அல்மோரா நகரைச் சேர்ந்தவர்.

நோய்டா 19வது செக்டார் பகுதியில் வசித்து வந்த பாயல் என்ற 20 வயதுப் பெண்ணை கடந்த மே மாதம் முதல் காணவில்லை. இதுகுறித்து கௌதம் புத்தா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பாயல் வைத்திருந்த செல்போனை தற்போது யார் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சுரேந்திரா வேலை பார்த்து வந்த வீட்டின் சாக்கடைக் கால்வாயிலிருந்து பெரும் துர்நாற்றம் நேற்று வீசியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து சாக்கடையை தோண்ட உத்தரவிட்டனர். அப்படித் தோண்டியபோது எலும்புக் கூடுகள் சில சிக்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் சுரேந்திராவை தீவிரமாக விசாரித்தனர்.

அந்த விசாரணையில் நெஞ்சை உறைய வைக்கும் தகவல்களை வெளியிட்டான் சுரேந்திரா. 30 வயதாகும் சுரேந்திரா, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுமிகளை சாக்லேட் கொடுத்தும், விளையாட்டுப் பொருட்களை கொடுத்தும் வரவழைப்பானாம்.

மொஹீந்தர் சிங்கின் வீட்டுக்குள் அழைத்துச் சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விடுவானாம். பிறகு அவர்ளின் உடல்களை சாக்குப் பையில் வைத்துக் கட்டி வீட்டுக்குள் புதைத்து விடுவானாம்.

சமீபத்தில் அவன் பாலியல் பலாத்காரம் செய்த 6 சிறுமிகளின் உடல்களை சாக்குப் பையில் கட்டி சாக்கடைக்குள் போட்டு விட்டான். அந்த உடல்களிலிருந்து வந்த துர்நாற்றம்தான் இப்போது சுரேந்திராவைக் காட்டிக் கொடுத்து விட்டது.

காணாமல் போன பாயலையும் இவன்தான் கடத்தி வந்து கற்பழித்துக் கொலை செய்துள்ளான். பாயலின் செல்போனையும் இவனே பயன்படுத்தி வந்துள்ளான்.

சுரேந்திரா கொடுத்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து போலீஸார் மொஹீந்தர் சிங்கின் வீடு முழுவதும் தோண்டி சோதனை போட்டனர். அப்போது குவியல் குவியலாக எலும்புக் கூடுகள் வரவே போலீஸாருக்கு அதிர்ச்சி அதிகரித்தது. வீட்டு வளாகம் முழுவதும் பிணக் குவியல்களாக உள்ளன.

இதுவரை 30 பேரின் எலும்புக் கூடுகள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அனைவருமே 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் கொடூரம். அத்தனை பேரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த பயங்கர சம்பவத்தைத் தொடர்ந்து சுரேந்திரா மற்றும் மொஹீந்தர் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட சில ஆயுதங்களையும் வீட்டிலிருந்து போலீஸார் மீட்டுள்ளனர்.

சில உடல்கள் முற்றிலும் உருக்குலையாமல் பாதி அழுகிய நிலையில் கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்துள்ள எலும்புக் கூடுகள், அழுகிய உடல்களை வைத்துப் பார்க்கும்போது 30 பேரின் உடல்களாக அவை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மரபணு சோதனைக்குப் பிறகே எத்தனை பேரின் உடல்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என நோய்டா எஸ்.பி. ரத்தோர் கூறியுள்ளார்.

நிதாரி கிராமத்திலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் 21 சிறுவர், சிறுமியர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் சிறுமிகள்தான் அதிகம். ஆனால் போலீஸார் பதிவு செய்யாமல் விட்ட புகார்களையும் சேர்த்து 31 பேர் காணாமல் போயுள்ளதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.

இவர்கள் அனைவரையும் சுரேந்திராதான் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. எலும்புக் கூடு குவியல் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பரவியதும் நிதாரி கிராமத்தினர் கூட்டம் கூட்டமாக மொஹீந்தர் சிங் வீட்டு முன்பு கூடி கலாட்டாவில் இறங்கினர்.

வீட்டின் மீது கல்வீசியும், கட்டைகளால் அடித்தும் தாக்குதல் நடத்தினர். வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் தாக்குதலில் சேதமடைந்தது.

எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சிறுவர், சிறுமியர் அணியும் செருப்புகள் அதிக அளவில் கிடைத்தன. அதேபோல சீருடைகள், டிபன் பாக்ஸ், பள்ளிக்கூட பைகள் உள்ளிட்டவையும் குவியல் குவியலாக கிடைத்துள்ளன.

நோய்டாவில் சிறார்களின் எலும்புக் கூடுகள் குவியல் குவியலாக சிக்கியுள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி : தட்ஸ்தமிழ்

Friday, December 29, 2006

மதிமுகவிலிருந்து வைகோ நீக்கம்

வைகோவை நீக்கியது போட்டி பொதுக் குழு:
செஞ்சி ராமச்சந்திரன் புதிய பொ.செ!


டிசம்பர் 29, 2006

சேலம்: மதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வைகோவை நீக்கி சேலத்தில் நடந்து வரும் போட்டி மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலத்தில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டிய மதிமுக போட்டி பொதுக்குழு இன்று காலை கூடியது. சுமங்கலி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆட்கள் வர தாமதமானதால் 12.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதுவரை எல்.ஜியும் செஞ்சியும் காத்திருந்தனர்.

இக் கூட்டத்திற்கு விழுப்புரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர். அவர்களில் எத்தனை பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பது தெரியவில்லை. திரளாக வந்தவர்களை போலீஸார் சோதனை நடத்திய பின்னர் உள்ளே அனுமதித்தனர்.

இக்கூட்டத்தில் வைகோவை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படுவதாக எல்.கணேசன் அறிவித்தார்.

மேலும், புதிய பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரனை நியமித்தும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இனிமேல் எக்காரணம் கொண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில்லை என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுக் கூட்டத்தையொட்டி கல்யாண மண்டபம் உள்ள பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடப்பதைத் தடுக்க சீருடையிலும், மாறு வேடத்திலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டள்ளனர்.

கூட்டத்துக்கு எல்.கணேசன் தலைமை தாங்குகிறார். செஞ்சி ராமச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார்.

கூட்டம் நடக்கும் கல்யாண மண்டபப் பகுதியிலும் ஐந்து ரோடு, நாலு ரோடு உள்ளிட்ட பல இடங்களிலும் மதிமுக கொடிகள், கட் அவுட்கள்,தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

பொதுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து இன்று மாலை அம்மாப்பேட்டை காந்தி மைதானத்தில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.

இதற்கிடையே, சேலம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்புடன் சேலத்தை விட்டு வெளியேறி (வெளியேற்றப்பட்டு?) விட்டனர். இதனால் அவர்களில் ஒருவர் கூட எல்.ஜி கூட்டியுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.

முன்னதாக சேலம் வந்த எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுக்குழுக் கூட்டத்தில், 500 முதல் 600, 700 உறுப்பினர்கள் வரை கலந்து கொள்வார்கள். பொதுக்குழுக் கூட்டத்தில், 13 ஆண்டு கால மதிமுக தேர்தல் கூட்டணி, அரசியல் பணிகள், திராவிடர் கொள்கையிலிருந்து வைகோ வழி தவறியது குறித்துப் பேசவுள்ளோம் என்றனர்.

கூட்டத்தில் வைகோவை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான தீர்மானமும் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.

எல்ஜி நடத்தும் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வழக்குப் போடுவோம், சிறையில் தள்ளுவோம் என காவல்துறை மூலம் மதிமுக பொதுக் குழு உறுப்பினர்களை திமுக மிரட்டி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் தாமரைக்கண்ணன் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோ பக்கமே உள்ளனர். இதில் ஒருவர் கூட போட்டி எல்.ஜி. கூட்டிய பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனது ஆட்களை மதிமுகவினர் என்று கூறி போட்டி பொதுக் குழுவிற்கு ஆட்களை அனுப்பியுள்ளார். இது பொதுகுழுக் கூட்டமும் அல்ல, அதில் எடுக்கும் எந்த முடிவும் வைகோவை கட்டுப்படுத்தப் போவதும் இல்லை என்றார்.

செய்தி: தட்ஸ்தமிழ்

Friday, December 22, 2006

மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி

கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது: பிப்ரவரி 20-ந் தேதி வழங்கப்படுகிறது

புதுடெல்லி, டிச.22-

சிறந்த இலக்கிய படைப்புகளை வழங்கியவர்களுக்கு, உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்க, 23 இந்திய மொழிகளை சேர்ந்த வல்லுனர்கள் அடங்கிய தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

தமிழ் மொழி சார்பில் ஈ.சுந்தரமூர்த்தி, ஆர்.எம்.பெரிய கருப்பன் (தமிழண்ணன்), புவியரசு ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றனர். இக்குழு, பல்வேறு இலக்கிய படைப்புகளை ஆய்வு செய்து விருதுக்கு உரியவர்களை சிபாரிசு செய்தது.

7 கவிதைகள், 4 நாவல்கள், 4 சிறுகதை தொகுப்புகள், 3 நாடகங்கள், 3 கட்டுரைகள், ஒரு பயணக்கட்டுரை, ஒரு சுயசரிதை ஆகியவை விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டன. இந்த தேர்வுக்கு சாகித்ய அகாடமி போர்டு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நேற்று விருதுக்கு உரியவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு பிரபல கவிஞர் மு.மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். `ஆகாயத்துக்கு அடுத்த வீடு' என்ற கவிதை நூலுக்காக இவருக்கு விருது வழங்கப்படுகிறது. மு.மேத்தா ஏராளமான கவிதைகள் மற்றும் நாவல்களை எழுதி உள்ளார். நிறைய சினிமா பாடல்களையும் எழுதி உள்ளார்.

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற இலக்கியவாதிகள் வருமாறு:-

கவிஞர்கள் தர்ஷன் தர்ஷி (டோக்ரி மொழி), ஞானேந்திரபதி (இந்தி), ஷபி ஷாக் (காஷ்மீரி), பன்ஷிதர் சாரங்கி (ஒரியா), ஹர்ஷ்தேவ் மாதவ் (சமஸ்கிருதம்),

நாவலாசிரியர் அமர் மித்ரா (வங்காளம்), ஆஷா போகே (மராத்தி), நாடக ஆசிரியர்கள் அஜ்மீர் சிங் அலக் (பஞ்சாபி), கிரத் பப்தி (சிந்தி),

சிறுகதை ஆசிரியர்கள் அதல்நந்தா கோஸ்வாமி (அசாமி), விபுதி ஆனந்த் (மைதிலி), எம்.சுகுமாரன் (மலையாளம்), பயண கட்டுரைக்காக சரத்சந்த் தியாம், சுயசரிதைக்காக ஸ்ரீராம் சந்திர மர்மு.

ஆங்கில படைப்புக்கான சாகித்ய அகாடமி விருது, பின்னர் அறிவிக்கப்படும்.

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பிப்ரவரி 20-ந் தேதி நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும். இவ்விருது தாமிர பட்டயமும், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் அடங்கியது ஆகும்.

செய்தி: மாலைமலர்

Sunday, December 17, 2006

பதக்கம் பறிப்பு?


பாலின பிரச்னையில் சாந்தி!* ஆசிய விளையாட்டு பதக்கம் பறிப்பு?

புதுடில்லி: சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்கு இன்னொரு அதிர்ச்சி. ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை சாந்தி பாலினம் தொடர்பான பிரச்னையில் சிக்கிக் கொண்டுள்ளார். இவரிடம் பாலின ரீதியாக பெண்ணுக்கான குணாதிசயங்கள் இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் இவர் வென்ற வெள்ளிப் பதக்கம் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் 15வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் மின்னல் வேகத்தில் ஓடிய இந்தியாவின் சாந்தி 2 நிமிடம் 3.16 வினாடிகளில் கடந்து வெள்ளி வன்றார். பதக்கம் வென்ற பிறகு இவர் பெண் தானா...? என்ற சந்தேகத்தை ஒரு வீராங்கனை கிளப்பியுள்ளார். இதையடுத்து பாலின வேறுபாட்டை கண்டறியும் சோதனை நடத்தப் பட்டுள்ளது. ஊக்க மருந்து சோதனை போல் அல்லாமல் யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே பாலினத்தை கண்டறியும் சோதனை நடத்தப்படும். இதில் பெண்களுக்கான குணயியல்புகள் இல்லை என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சாந்தி வென்ற வெள்ளி பதக்கம் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ரூ.15 லட்சம்: மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் சாந்தி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர்கள் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார்கள். இப் படி வறுமையை வென்று சாதித்ததால் பாராட்டு மழையில் நனைந்தார் சாந்தி. ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றதும் தமிழக அரசு கூட ரூ. 15 லட்சத்தை பரிசுத் தொகையாக அளித்தது. இந்திய தடகளத்துக்கு இன்னொரு நட்சத்திரம் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியில் இருந்தவர்களுக்கு சாந்தி சோதனையில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஊக்க மருந்து: இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியின் துவக்கத்தில் வட்டு எறிதல் வீராங்கனை சீமாஅன்டில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். பின்னர் இந்திய விளையாட்டு ஆணையம் விசாரணை நடத்தியதில் இவர் ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என தெரிவித்தது. இதையடுத்து பெரும் சிக்கலில் இருந்து தப்பினார். ஆனாலும் மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறி போட்டியில் இருந்து விலகுவதாக சீமா அறிவித்தார். இந்த பிரச்னை ஓய்வதற்குள் சாந்தி சர்ச்சை மிகப் பெரும் புயலை இந்திய விளையாட்டு அரங்கில் கிளப்பியுள்ளது. சர்வதேச போட்டிகளுக்கு வீராங்கனைகளை அனுப்பும் போது இனி அனைத்து வகையான சோதனைகளையும் செய்ய வேண்டும். அப்போது தான் பிரச்னைகளுக்கு விமோசனம் பிறக்கும்.

சாந்தி சர்ச்சையின் பின்னணி!: ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை சாந்தியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. புகழின் உச்சியில் இருந்த இவர், பாலின சோதனையில் சிக்கிக் கொள்ள பதக்கம் பறிக்கப்படும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் 15வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் சாந்தி வெள்ளி வென்றார். அப்போது இவர் பெண் தானா என்ற சந்தேகம் மற்ற வீராங்கனைகள் உள்ளிட்ட போட்டி அதிகாரிகளின் மனதில் எழுந்துள்ளது. இதையடுத்து பாலின வேறுபாட்டை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பெண்களுக்கான குணவியல்புகள் இல்லை என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இந்த விபரம் ஏற்கனவே இந்திய விளையாட்டு அதிகாரிகளுக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் அஷ்வின் குமார் கூறுகையில்,""எங்களது காலத்தில் இது போன்ற சோதனைகள் எல்லாம் இல்லை. தற்போது பரிசுத் தொகை அதிகம் என்பதால் தடகள வீரர், வீராங்கனைகள் குறுக்கு வழியில் பதக்கம் வெல்ல முயல்கின்றனர். இதற்காக சிலர் ஊக்க சக்தியை அதிகப்படுத்த பல்வேறு மருந்து பொருட்களை பயன்படுத்துகின்றனர். இது ஹார்மோனில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. தற்போது பாலினத்தை வேறுபடுத்தி காட்டும் சோதனைகள் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார். எந்த அடிப்படை: பாலினம் தொடர்பான சோதனையில் பிறப்பில் பிரச்னை, குரோமோசோம் மாற்றம், ஹார்மோன்களில் குழப்பம் போன்ற வகைகளில் ஆய்வு செய்யப்படும். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீராங்கனை சில நேரங்களில் தப்பலாம்.

சாந்தி மீது எந்த விதமான சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது என்ற விபரம் தெளிவாக தெரியவில்லை. திருச்சியில் இருந்து: சாந்தியின் கிராமம் திருச்சியிலிருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ளது. வறுமையை கடந்து சாதித்த இவர், புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் வணிக நிர்வாகத்தில் பட்டப் படிப்பை முடித்தார். தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் எம்.சி.ஏ., முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரியில் படித்த காலத்திலும் தடகளம், ஹாக்கி, ஈட்டி எறிதல் முதலான விளையாட்டுகளில் ஜொலித்தார். 200506ல் நடந்த தமிழக அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று நம்பிக்கை அளித்த இவர், இப்போது மிகப் பெரும் சோதனையில் சிக்கியுள்ளார். இதில் இருந்து மீள்வாரா சாந்தி...?

பயிற்சியாளர் நழுவல் :

சாந்தியின் பயிற்சியாளர் நாகராஜ் பிரச்னையில் இருந்து நழுவ பார்த்தார். பிரபல "டிவி'க்கு பேட்டி அளித்த இவர்,""கடந்த இரண்டு வருடங்களாக தான் சாந்தியின் பயிற்சியாளராக இருக்கிறேன். இவர் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்றுள்ளார். அப்போது எல்லாம் இது போன்ற பிரச்னை எழவில்லை. பாலின சோதனையில் மாட்டிக் கொண்ட விபரம் எதுவும் தெரியாது,''என்றார்.

செய்தி: தினமலர்

Friday, December 15, 2006

பாலசிங்கம் மரணம்

புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் மரணம்

லண்டன்: விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவருமான ஆண்டன் பாலசிங்கம்(68) லண்டனில் நேற்று மரணமடைந்தார்.

சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் யுத்திகளை வகுப்பதிலும், முக்கிய முடிவுகள் மேற்கொள்வதிலும் பிரதான பங்களிப்பு அளித்து வந்தவர் ஆண்டன் பாலசிங்கம். இவர் விடுதலைப் புலிகளின் சட்டத் தூணாக கருதப்பட்டவர். ராஜிவ் காந்தி கொலை சம்பவத்துக்கு பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் முதல்முறையாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உடனிருந்த பாலசிங்கம் சர்வதேச நிருபர்களிடம் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் அளித்து சமாளித்தார்.

கடந்த 1985ம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையில் துவங்கி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த பாலசிங்கம், சில ஆண்டுகளாக உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பாலசிங்கத்துக்கு 35 ஆண்டுகளாக நீரிழிவு நோய் உள்ளது. கடந்த 90ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். சமீப காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம் உடல் நிலை கடுமையாக மோசமடைந்தது. இவரின் பித்த நாளத்தில் புற்றுநோய் அதிகரித்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், நுரையீரல், கல்லீரல், அடிவயிறு மற்றும் எலும்புகளில் புற்றுநோய் வேகமாக பரவியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்றிரவு ஆண்டன் பாலசிங்கம் லண்டனில் மரணமடைந்தார். லண்டனில் உள்ள அவரின் வீட்டில் பாலசிங்கம் மரணமடைந்ததாக அவரது நெருங்கிய உறவினர் தெரிவித்தார். பாலசிங்கத்தின் இறுதிச் சடங்கு லண்டனிலேயே நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலசிங்கத்தின் மனைவி ஆடெல். ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். இருவரும் புலிகளின் விடுதலை இயக்கம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளனர்.

உடல் நிலை மோசம் அடைந்ததால் கடந்த அக்டோபர் மாதம் ஜெனிவாவில் நடந்த புலிகள் இலங்கை அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் அவர் பங்கேற்கவில்லை.

ஆரம்ப காலத்தில் இலங்கையில் தமிழ் பத்திரிகையில் பணியாற்றினார். பின்னர் பிரிட்டிஷ் துõதரகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் லண்டனில் வசித்து வந்தார். பல ஆண்டுகளாக இலங்கைக்கு வராமல் இருந்த பாலசிங்கம் 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் இலங்கை வந்தார். அப்போது தான் இலங்கையில் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இருப்பினும், தொடர்ந்து இலங்கையில் தங்கியிருக்கவில்லை. மீண்டும் லண்டன் திரும்பினார். பின்னர் ஜப்பான், தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

கடந்த 1985ம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சுவார்த்தை முதல் கடந்த பிப்ரவரி மாதம் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை வரை புலிகள் தரப்பின் குழுவிற்கு பாலசிங்கமே தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: தினமலர்

Wednesday, December 13, 2006

பாராளுமன்ற தாக்குதல் நினைவு!

அப்சல் தூக்கு தண்டனையை தாமதப்படுத்துவதா? பாராளுமன்ற தாக்குதலில் உயிர் இழந்த குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் பதக்கத்தை திருப்பி கொடுத்தனர்

புதுடெல்லி, டிச. 13-

டெல்லி பாராளுமன்றத்துக் குள் கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 9 பாதுகாப்பு படையினர் பலியானார்கள். பாராளுமன்றத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் புகைப்பட கலைஞர் ஒருவரும் பலியானார்கள்.

இந்த தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் தீவிரவாதி முகமது அப்சலுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. தூக்கில் போடுவதற்கு கோர்ட்டு நாள்குறித்த நிலை யில் அப்சல் மற்றும் அவனது குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியதால் தண்டனை நிறைவேற்றப்பட வில்லை. கருணை மனு மீது இன்னும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்காமல் உள்ளது.

பாராளுமன்ற தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது. அப் சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதற்கு பாராளுமன்ற தாக்குதலில் பலியானவர்களின் மனைவி மார்கள் மற்றும் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இன்று அவர்கள் டெல்லி யில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்றனர். உயிர்நீத்த போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய "அமர்ஜோதி ஜவான்'' விருதையும், பதக்கத்தையும் ஜனாதிபதி மாளிகையில் திரும்ப ஒப்படைத்தனர்.

தீவிரவாதிகளை எதிர்த்து போராடி உயிர்நீத்த டெல்லி போலீஸ் உதவி சப்-இன்ஸ் பெக்டர் நானக் சந்த்தின் மனைவி கங்கா தேவி. விதவையான இவர் ஆவேசத்துடன் கூறியதாவது:-

எனது கணவர் இந்த நாட் டுக்காக தீவிரவாதிகளை எதிர்த்து போராடி உயிர் நீத் தார். அவரது தியாகத்தை மத்திய அரசு நினைத்துப் பார்க்க வேண்டும். எனது கணவரின் தியாகத்துக்காக `அமர் ஜவான் ஜோதி' விருதும் மெடலும் வழங்கப்பட்டுள்ளது. மெடல் வழங்கினால் மட்டும் போதாது. உயிர் நீத்தவர்களின் தியாகத்தை மதிக்க வேண்டும். தீவிரவாதி அப்சலை உடனே தூக்கில் போட வேண்டும் என்றார்.

கணவரை இழந்த மேலும் ஒரு பெண் கூறும்போது, என் கணவரது தியாகத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும், அப்சலின் தூக்கு தண்ட னையை நிறைவேற்றுவது தொடர்பாக முடிவு எடுப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்தக் கூடாது. சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகி விட்டன. இதில் முடிவு எடுக்க தாமதிப்பதால் எங்களுக்கு வழங்கப்பட்ட மெடல்களை அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறோம் என்றார்.

பலியான போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக தீவிரவாத தடுப்பு முன்னணி தலைவரான மனீந்தர் சிங் பிட்டா, முன்னாள் உளவுத்துறை இயக்குனர் அஜீத் கே.டோவல் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பிட்டா கூறுகையில், அப்ச லுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. அவர்கள் அப்சலை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். அதற்கு ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

அப்சலை தூக்கில் போடுவது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுப்பதில் தேவையில்லாமல் காலம் கடத்து வதாக பலியான போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் பலர் குறை கூறினார்கள்.

இதற்கிடையே அப்சல் தூக்கு தண்டனை விவாகரம் குறித்து டெல்லி மேல்- சபையில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பினார்கள். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பிற்பகல் வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக டெல்லி மேல்-சபையிலும், பாராளுமன்றத்திலும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

செய்தி: மாலைமலர்

என்கவுண்டரில் 'பங்க்'குமார்.

பிரபல ரவுடி "பங்க்' குமார் "என்கவுன்டரில்' சுட்டுக்கொலை

சென்னை: கொலை, ஆளை கடத்தி பணம் பறிப்பு, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி "பங்க்' குமார் நேற்றிரவு சென்னையில் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். இவன் மீது நாற்பது வழக்குகள் உள்ளன. சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் குமார் என்ற "பங்க்' குமார் என்ற கொத்தவால் சாவடி குமார்(36). சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., பட்டதாரியான பங்க் குமார், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி கும்பலை உருவாக்கினான்.

கட்டப் பஞ்சாயத்து உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான். கடந்த 1992ம் ஆண்டில் பரமசிவம் என்பவரை மாம்பலம் பகுதியில் கொலை செய்தான். இவ்வழக்கில் அவன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். இதையடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான். பிரபல ரவுடியாக வளர்ந்து வந்த "பங்க்'குமார் தென் சென்னை பகுதியில் சைதாப்பேட்டை, தாம்பரம், குமரன் நகர், வேளச்சேரி உட்பட்ட பகுதியில் தனது ஆதிக்கத்தை வளர்த்தான். கடந்த 1993ம் ஆண்டில் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வெளியே இரண்டு கைதிகளை வெட்டிக் கொலை செய்தான். இந்த இரட்டை கொலை தான் "பங்க்' குமாருக்கு தென் சென்னை தாதா என்ற பெயரை பெற்று தந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக ரவுடி ஆதிக்கத்தை தென் சென்னை பகுதியில் நடத்தி வந்தான். அ.தி.மு.க., ஆட்சியில் "பங்க்' குமாரை என்கவுன்டரில் தீர்த்துக் கட்ட போலீசார் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அப்போது மத்திய அமைச்சரின் காரிலேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்ததால், தப்பித்துக் கொண்டான். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் "பங்க்' குமாரின் செயல்கள் மீண்டும் தலையெடுத்தன. மயிலாப்பூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள "ஷாப்பிங்' கட்டடத்தை அடிமாட்டு விலைக்கு ஏலத்தில் வாங்கிய நபருக்கு ஆதரவாக களம் இறங்கினான். இந்த ஏலத்தில் வேறு யாரும் கலந்து கொள்ளாதபடி "பங்க்' குமார் இருபது கார்களில் 60 அடியாட்களுடன் வந்து மயிலாப்பூரை கலக்கினான். இதுவே தி.மு.க., ஆட்சிக்கு பெரும் கெட்ட பெயரை தேடிக் கொடுத்தது. போலீஸ் அதிகாரிகளுக்கும் அவன் பயப்படாமல் தனது வேலைகளை நடத்திக் கொண்டிருந்தான். ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் வசூல் செய்து வந்தான். கடந்த 9ம் தேதி மேற்கு மாம்பலத்தில் ரியல் எஸ்÷ட் தொழில் செய்து வரும் பஷீர் என்பவரை மிரட்டி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டான். இது தொடர்பாக அவர் கமிஷன் லத்திகா சரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோரிடம் புகார் கொடுத்தார். புகாரை வாங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் "பங்க்' குமார் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர். திருநீர்மலைக்கு உட்பட்ட சீனிவாசன் நகர் பைபாஸ் சாலையில் நேற்று மாலை 7 மணிக்கு "பங்க்' குமார் மற்றும் அவனது கூட்டாளிகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், சப்இன்ஸ்பெக்டர்கள் பூமாறன், ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் சென்ற போலீஸ் படையினர் "பங்க்' குமாரை மடக்கி பிடிக்க முற்பட்டனர். அப்போது தப்பி ஓடிய "பங்க்' குமார் நான்கு வெடிகுண்டுகளை போலீசார் மீது வீசினான். அதில் இரண்டு குண்டுகள் வெடித்தது. மற்ற இரண்டு குண்டுகளையும் அதே இடத்தில் போட்டு விட்டு டாடா சுமோ காரில் "பங்க்' குமார் தப்பினான். பின் தொடர்ந்த போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தினான். அப்போது இன்ஸ்பெக்டர் நடராஜன் தனது துப்பாக்கியால் "பங்க்' குமார் மீது சுட்டார். மயங்கி விழுந்த "பங்க்' குமாரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு "பங்க்' குமாரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ.,வுக்கு போலீசார் தகவல் அறிக்கையை அனுப்பியுள்ளனர். காயம் அடைந்த சப்இன்ஸ்பெக்டர்கள் இருவரும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பா.ம.க.,வில் எம்.எல்.ஏ., "சீட்' கேட்ட "பங்க்' குமார் சென்னையைச் சேர்ந்த பங்க் குமார் ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பங்க் குமார் பா.ம.க., கட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்தான். பா.ம.க.,வில் உள்ள முக்கிய தலைவர்களுடன் நெருக்கமானான். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. ரவுடியாக இருந்த பங்க் குமார் அரசியலில் பெரிய ஆளாக வர வேண்டும் விரும்பி "சீட்' கேட்டான். ஆனால், பா.ம.க., தலைமை பங்க் குமாருக்கு "சீட்' கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பங்க் குமாரின் ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தி.நகர், சைதாப்பேட்டை போன்ற பல சட்டசபை தொகுதிகளில் கள்ள ஓட்டுகள் போட்டு பிரச்னை செய்தனர். "பங்க்' குமாரின் கொடூர கொலைகள்... நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் படித்தவன் "பங்க்' குமார். இவனது நண்பன் உமர். கடந்த 1991ம் ஆண்டு சம்பத் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் உமரை வெட்டிக் கொலை செய்தனர். உயிர் நண்பனை வெட்டிக் கொன்றதும் ஆத்திரமடைந்தான் "பங்க்' குமார். உமர் சமாதிக்கு சென்றவன் "உன்னை வெட்டிக் கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்குவேன்' என்று ரத்த சபதம் செய்தான். அந்த சபதத்தை நிறைவேற்ற 1992ம் ஆண்டு உமரை வெட்டிக் கொன்ற கொலை கும்பலில் இடம் பெற்ற பரமசிவம் என்ற ரவுடியை "பங்க்' குமார் கொலை செய்தான். இது தான் அவனது முதல் கொலை. தாம்பரத்தில் மனைவியுடன் இருந்தான் பரமசிவம். அந்த வீட்டிற்குள் ஓட்டை பிரிந்து "பங்க்' குமாரும் அவனது நண்பர்களும் குதித்தனர். வீட்டில் இருந்த மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே பரமசிவத்தை வெட்டிக் கொலை செய்தான் "பங்க்' குமார். அந்த ரத்தத்தை எடுத்து, பரமசிவன் மனைவி வாயில் ஊற்றினான். உமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பத்தையும் புருஷோத்தமனையும் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வெளியே 1994ம் ஆண்டு "பங்க்' குமார் வெட்டி சாய்த்தான். போலீஸ் பாதுகாப்போடு வந்த இரண்டு பேரையும் கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட "பங்க்' குமாருக்கு எதிராக யாரும் சாட்சி சொல்லாத காரணத்தால், கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட "பங்க்' குமாருக்கு எதிராக யாரும் சாட்சி சொல்லாத காரணத்தால், விடுதலை செய்யப்பட்டான். அடுத்து 95ம் ஆண்டு, முருகன் என்ற பரட்டை முருகனை "பங்க்' குமாரும் அவனது நண்பர்களும் தீர்த்துக் கட்டினர். இதன் பின்னர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டான். பின்னர் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கினான். அடுத்து தி.மு.க., ஆட்சி வந்ததும் தி.மு.க.,வினரை கடுமையாக எதிர்த்தான். தி.மு.க., ஆட்சியில் கான்ட்ராக்டர் தெய்வசிகாமணி என்பவரை கடத்தி பணம் பறிக்க முற்பட்ட வழக்கிலும் போலீசார் அவனை தேடினர். மீண்டும் 2001ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் தனது செயல்களை குறைத்துக் கொண்டான். அ.தி.மு.க., ஆட்சியில் "பங்க்' குமாருக்கு இரண்டு முறை போலீசார் குறி வைத்தனர். சைதாப்பேட்டை கோர்ட் அருகே அவனை மடக்கிப்பிடிக்க போலீசார் காத்திருந்த போது, ஜட்டியுடன் ஆற்றில் குதித்து ஓடிவிட்டான். "பங்க்' குமார் ஏழு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை சென்றவன். அவன் மீது மொத்தம் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ரவுடிகள் மீதான நடவடிக்கை தொடரும் * கமிஷனர் லத்திகா சரண் பேட்டி பிரபல ரவுடி "பங்க்' குமார் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவனது உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மருத்துவமனைக்கு வந்த போலீஸ் கமிஷனர் லத்திகா சரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோர் கூறுகையில், ""பிரபல ரவுடி பங்க் குமார் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவன் ஏழு முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை சென்று வந்துள்ளான். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான பஷீர் என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளான். பணத்தை கொடுக்க தாமதமாகவே மேலும் ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளான். இதையடுத்து, பஷீர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில் "பங்க்' குமாரை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், எஸ்.ஐ., சுகுமாறன், ரவிக்குமார் மற்றும் நான்கு ஏட்டுக்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அனகாபுத்துõர் சீனிவாசபுரம் விரிவு அருகே பங்க் குமாரை கைது செய்ய முயன்ற போது இன்ஸ்பெக்டர் தில்லைநடராஜனை அரிவாளால் அவன் வெட்ட முயன்றான். இதை தொடர்ந்து அவனுடன் இருந்த கூட்டாளி மூன்று பேரும் நாட்டு வெடிகுண்டை வீசி போலீசாரை தாக்கினர். இதில், மூன்று போலீசார் காயமடைந்தனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தில்லைநடராஜன் தற்காப்பிற்காக தனது துப்பாக்கியால் பங்க் குமாரை சுட்டுள்ளார். சென்னையில் மொத்தம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். அவர்கள் மீதான நடவடிக்கை தொடரும்,'' என்றார்.

ஜாங்கிட் தனிப்படையின் தளபதி தில்லை நடராஜன் தமிழகத்தில் வடமாநில கொள்ளை கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டது. வடக்கு மண்டல ஐ.ஜி.,யான ஜாங்கிட் வடமாநில கொள்ளை கும்பலை பிடிக்க வியூகம் வகுத்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.ஐ.,யாக இருந்தவர் தில்லை நடராஜன். துப்பாக்கி சுடுவதில் கெட்டிக்காரர். இவரை தனிப்படையில் சேர்த்தார் ஜாங்கிட். வடமாநில கொள்ளைக்காரன் பவாரியா என்கவுன்டரில் முக்கிய பங்காற்றியவர் தில்லை நடராஜன். பதவி உயர்வில் இன்ஸ்பெக்டரான தில்லை நடராஜன் புறநகரில் வேலை பார்த்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள மாநகர ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். நேற்று பங்க் குமாரை என் கவுன்டர் செய்தவரும் தில்லை நடராஜன் தான்.

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவன்... "பங்க்' குமாரின் கொலைகளும், கட்டப்பஞ்சாயத்து விவகாரங்களும் வெளியே தெரிந்தன. ஆனால், அவனது பல அட்டூழியங்கள் வெளியே வரவில்லை. சைதாப்பேட்டை மற்றும் மாம்பலம் பகுதியில் வசித்தவர்களுக்கு மட்டுமே இது தெரிந்த விஷயம். அழகான பெண்களை கண்டால், தனது வேலைகளை காட்டத் தொடங்கிவிடுவான். அந்த பெண்ணின் வீட்டை கண்டுபிடித்து, ராத்திரியில் அந்த வீட்டுக்கு போய்விடுவான். இப்படி பல பெண்களை மானப்பங்கம் செய்தவன் "பங்க்' குமார். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் யாருமே புகார் கொடுத்தது கிடையாது. காரணம், குடும்ப மானம் போய்விடும் என்பதால். மாம்பலத்தில் ஒரு நபரின் வீட்டில் இருந்த பெண் மீது கண் வைத்த இவன், பல ராத்திரியில் அந்த வீட்டிற்கு சென்றுவிட்டான். அந்த குடும்பத்தில் இருப்பவர்களால் வெளியே சொல்லவும் முடியவில்லை. அவனை எதிர்த்து போராடவோ, புகார் கொடுக்கவோ தைரியம் இல்லாதவர்கள். அந்த குடும்பம் கடைசியில் வீட்டை காலி செய்து கொண்டு, எங்கோ சென்றுவிட்டது. இப்படி பல பெண்களின் வாழ்வை சீரழித்தவன் தான் "பங்க்' குமார். கடைசியில் மனைவியின் தங்கையான ஹேமாவையும் துப்பாக்கி முனையில் பெங்களூருக்கு கடத்திச் சென்று கற்பழித்தான். இது தொடர்பாக மட்டுமே விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று பதிவானது. மற்றபடி அவனால், பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தது இல்லை.

செய்தி: தினமலர்

Wednesday, December 06, 2006

சிபுசோரனுக்கு ஆயுள்சிறை!

கொலை வழக்கில் கைதான முன்னாள் மத்திய மந்திரி
சிபுசோரனுக்கு ஆயுள் தண்டனை
ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு


கொலை வழக்கில் கைதான முன்னாள் மத்திய மந்திரி சிபுசோரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி கோர்ட்டு தீர்ப்பு கூறியது. மேலும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

புதுடெல்லி, டிச.6-

முன்னாள் மத்திய மந்திரியும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபுசோரனிடம் உதவியாளராக இருந்தவர் சசிநாத் ஜா.

இவர் கடந்த 1994-ம் ஆண்டு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இக்கொலை குறித்து சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தியது.

5 பேர் மீது வழக்கு

கொலையில் சிபுசோரனுக்கு முக்கிய பங்கு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. அவர் தீட்டிய சதித்திட்டப்படி, நந்தகிஷோர் மேத்தா, சைலேந்திர பட்டாச்சார்யா, பசுபதிநாத் மேத்தா, அஜய்குமார் மேத்தா ஆகியோர் இந்த கொலையை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1998-ம் ஆண்டு சிபுசோரன் உள்பட 5 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது.

குற்றவாளி

இதற்கிடையே, மன்மோகன்சிங் அரசில் சிபுசோரன் மத்திய மந்திரியாக பதவி ஏற்றார். இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடந்தது. கடந்த 28-ந் தேதி இவ்வழக்கில் நீதிபதி பி.ஆர்.கேதியா தீர்ப்பு அளித்தார். சிபுசோரன் உள்பட 5 பேரும் குற்றவாளிகள் என்று அவர் தீர்ப்பு அளித்தார். தீர்ப்பை கேட்பதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த சிபுசோரனை கோர்ட்டு வளாகத்திலேயே போலீசார் கைது செய்தனர். அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டார்.

கைது செய்யப்பட்ட சிபுசோரன், நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு தண்டனை விவரம் அறிவிப்பதில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டது. சிகிச்சை முடிவடைந்து சிபுசோரன், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பரபரப்பு விவாதம்

அதையடுத்து, நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் சிபுசோரன் உள்ளிட்ட 5 பேருக்கு தண்டனை வழங்குவது குறித்து பரபரப்பு விவாதம் நடைபெற்றது. சிபுசோரன், கோர்ட்டில் ஆஜர்படுëத்தப்பட்டார். சிபுசோரன் தரப்பு வக்கீல் ஆனந்த், சிபுசோரனுக்கு குறைந்த தண்டனை அளிக்குமாறு வாதாடினார். அவர் வாதிடுகையில் கூறியதாவது:-

சிபுசோரன், ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக பாடுபட்டவர். அம்மாநிலத்தின் பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர். எனவே தண்டனையை நிர்ணயிக்கும்போது அவரது தகுதியையும், பின்னணியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார். எனவே அவரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்யலாம்.

இவ்வாறு ஆனந்த் வாதாடினார்.

சி.பி.ஐ. வக்கீல் கோரிக்கை

ஆனால் சி.பி.ஐ. வக்கீல் ஏ.கே.சிங் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

சிபுசோரன் உத்தரவின் பேரில் நந்தகிஷோர் மேத்தா இந்த படுகொலையை செய்தார். சிபுசோரனிடமிருந்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்தில் கொலை செய்ய நந்தகிஷோர் மேத்தா சம்மதித்தார். அவர் சசிநாத் ஜாவை தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்தார். அங்கு வந்த சசிநாத் ஜாவை ரகசியமாக கொலை செய்தார். இதற்காக அவருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட சிபுசோரன் டிக்கெட் கொடுத்தார்.

மேலும், நரசிம்மராவ் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்கள் லஞ்சம் வாங்கியது, சசிநாத் ஜாவுக்கு தெரிந்து விட்டதால்தான் அவர் கொல்லப்பட்டு உள்ளார். எனவே, இது சாதாரண குற்றம் அல்ல. அசாதாரண சூழ்நிலையில் சசிநாத் ஜா கொலை செய்யப்பட்டு இருப்பதால், சிபுசோரனை விடுவிக்க கோருவது ஏற்புடையது அல்ல.

மரண தண்டனை அளிக்க வேண்டும்

தன் மீது சசிநாத் ஜா வைத்திருந்த நம்பிக்கையை சிபுசோரன் சீர்குலைத்து விட்டார். எனவே இந்த வழக்கு அரிதினும், அரிதான வழக்காக இருப்பதால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதில் சிபுசோரன் முக்கியப்பங்கு வகித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு, பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றில் நேரடியாக காரியத்தில் ஈடுபட்டவர்களுக்கு அளித்த அதே தண்டனை, சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டிய சிபுசோரனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் வாதாடினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.ஆர்.கேதியா, மாலை 4.30 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றார். அதன்படி தண்டனை விவரத்தை அறிய மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர்கள் கோர்ட்டு முன்பு திரண்டனர். ஆனால் மாலை 5.30 மணிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

ஆயுள் தண்டனை

அதன்படி, மாலை 5.30 மணிக்கு நீதிபதி பி.ஆர்.கேதியா தண்டனை விவரத்தை அறிவித்தார். சிபுசோரன் உள்பட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக அவர் அறிவித்தார். மேலும், சிபுசோரனுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தார். இந்த தொகையில் ரூ.1 லட்சத்தை சசிநாத் ஜாவின் தாயாருக்கும், தலா ரூ.2 லட்சத்தை சசிநாத் ஜாவின் 2 மகள்களுக்கும் பிரித்து அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றவாளிகளான மற்ற 4 பேரும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பை கேட்டவுடன் சிபுசோரன் அதிர்ச்சி அடைந்தார்.

அப்பீல்

இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய சிபுசோரன் உள்ளிட்ட 5 பேருக்கும் 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. சிபுசோரன் தற்போது எம்.பி. ஆக உள்ளார். இருப்பினும் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தால், அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து இல்லை.

தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாக சிபுசோரனின் வக்கீல் நிருபர்களிடம் கூறினார்.

செய்தி: தினத்தந்தி.

Friday, November 24, 2006

கருணாநிதிக்கு சால்வை போட்ட சரத்-ராதாரவி

Image and video hosting by TinyPicநவம்பர் 24, 2006

சென்னை: சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் சால்வை அணிவித்து வணங்கினார்.

தனது மனைவி ராதிகா சகிதமாக திமுகவை விட்டு அதிமுகவில் இணைந்த சரத்குமார் சமீபத்தில் அங்கிருந்து விலகினார். அவரை தனிக் கட்சி ஆரம்பிக்கக் கோரி நாடார் இன பிரமுகர்கள் நெருக்கி வருகின்றனர்.

நாடார் சமூகப் பிரமுகர்கள் பலருடன் அவர் ரகசிய ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

இந் நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் கே.ஆர். சுரேஷ் திருமணம் சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடந்தது. தி.நகரில் உள்ள நடிகர் சங்க சுவாமி சங்கரதாஸ் கலையரங்கில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் முதல்வர் கருணாநதி கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார். அப்போது அங்கு வந்த நடிகர் சரத்குமாரும், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவியும் (இவர் அதிமுகவில் ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்) கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

அதி¬கவிலிருந்து விலகிய சரத்குமாரும், ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்ட்டில் இருப்பவருமான ராதாரவியும் கருணாநிதிக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் ராதாரவிக்கு அதிமுக ஆப்பு வைக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ராதாரவியும் திமுகவில் சேர நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் சரத்துடன் போய் கருணாநிதிக்கு அவரும் பொன்னாடை போர்த்தியிருக்கிறார்.

திமுகவிலிருந்து விலகிய பின்னர் கருணாநிதியை சரத்குமார் சந்திக்கவில்லை. சமீபத்தில் திரையுலகம் சார்பில் நடந்த கருணாநதிக்குப் பாராட்டு விழாவிலும் ராதிகா தான் கலந்து கொண்டாரே (இதனால் தான் அவரை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா) தவிர சரத்குமார் கலந்து கொள்ளவில்லை.

இந் நிலையில் முதல் முறையாக அவர் கருணாநிதியை சந்தித்து பொன்னாடை போர்த்தியுள்ளார்.

செய்தி: தட்ஸ்தமிழ்

முல்லைப் பெரியாறு!

தமிழக அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பெரியாறு அணையை ஆய்வு செய்யாமல் பாதியிலேயே திரும்பிய கடற்படை

பெரியாறு அணையை வியாழக்கிழமை ஆய்வு செய்ய வந்த கொச்சி கடற்படை நிபுணர் குழுவினர்.

தேனி, நவ. 24: முல்லைப் பெரியாறு அணையை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளச் சென்ற கொச்சி (கேரளம்) கடற்படை நிபுணர் குழுவுக்கு, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்தனர். இதையடுத்து, முழுமையாக ஆய்வு செய்யாமல் அந்தக் குழுவினர் பாதியிலேயே திரும்பினர்.

பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த மறுத்து, கேரள அரசு மறு பரிசீலனை செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தது. அம்மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி, தில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் முன்னிலையில் தமிழக, கேரள முதல்வர்கள் நவ. 29-ம் தேதி பேச்சு நடத்த உள்ளனர்.

இந்நிலையில் கேரள அரசு திடீரென கொச்சி கடற்படை நிபுணர்கள் குழுவை அனுப்பி அணையை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.

இதையடுத்து, கடற்படை கமாண்டர் கே.என். ரெட்டி தலைமையில் உதவி கமாண்டர் தினேஷ் சிங்கர் உள்பட நீர்மூழ்கி வீரர்களுடன், கடற்படை அலுவலர்கள் வியாழக்கிழமை பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்றனர்.

அப்போது, தமிழக பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அணை செயற் பொறியாளர் பாஸ்கரன், கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் ஆகியோரின் கேமராவை கேரள போலீஸôர் பறித்துள்ளனர்.

அணைப் பகுதியில் நீர்க்கசிவு ஏற்படும் அளவைக் குறிக்கும், காலரி பகுதியை பார்வையிடச் சென்றபோது, தமிழகப் பொறியாளர்கள் முன் அனுமதியின்றி ஆய்வு செய்யக் கூடாது எனக் கூறி காலரியை திறந்துவிட மறுத்துள்ளனர்.

இதனால் கேரள, தமிழக அலுவலர்களிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, ஆய்வு செய்வதை கடற்படையினர் பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பி விட்டனர்.

கடற்படையினருடன் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ராஜன், காவல்துறை கண்காணிப்பாளர் செல்லப்பன் மற்றும் உயர் அலுவலர்கள் சென்றிருந்தனர்.

oOo

பெரியாறு - கேரள அரசின் அத்துமீறல் தொடர்ந்தால் தில்லி பேச்சு புறக்கணிப்பு: கருணாநிதி எச்சரிக்கை

சென்னை, நவ. 24: கேரள அரசின் அத்துமீறல் தொடர்ந்தால் தில்லியில் வரும் 29-ம் தேதி நடைபெறும் பேச்சில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு எல்லை மீறி நடந்துகொள்கிறது. இதை பிரதமர் தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் தில்லியில் இம்மாதம் 29-ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நிலையை ஆராய மத்திய கப்பல் படை அலுவலர்கள் குழுவை கேரள அரசு அனுப்பியுள்ளதாக வியாழக்கிழமை செய்தி வெளியானது. இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுக்கு ஒப்புக் கொண்டு விட்டு அறிக்கை விடுவது மற்றும் கப்பல்படை அலுவலர்கள் குழுவை ஆய்வு நடத்த அனுப்புவது போன்ற எல்லை மீறிய செயல்களில் கேரள அரசு ஈடுபடுவதாக முதலமைச்சர் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு இரண்டு பக்க கடிதத்தை ஃபேக்ஸ் மூலம் முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ளார். அதன் விவரம்:

கேரள அரசின் வேண்டுகோளின்படி மத்திய கடற்படை அலுவலர்கள் 17 பேர் கொண்ட குழு கேரள மாநில காவல்துறைத் தலைவர் மேற்பார்வையில் முல்லைப் பெரியாறு அணையை சோதனையிட வியாழக்கிழமை சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசுக்குச் சொந்தமானதும், தமிழக அரசின் பராமரிப்பில் இருப்பதுமாகும். தமிழக அரசின் எந்தவித அனுமதியும் இன்றி தன்னிச்சையாக கேரள அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்குரியதாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி தண்ணீரை முல்லைப் பெரியாறு அணையில், தேக்கி வைத்துக் கொள்ள அனுமதியளித்து கடந்த பிப்.27-ம் தேதி உத்தரவிட்ட பிறகும், இத்தகைய செயல்களில் கேரள அரசு ஈடுபட்டிருப்பது முறையானதல்ல.

இரு மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த அழைப்பு விடுத்து, நாளும் குறிக்கப்பட்ட நிலையில், கேரள அரசின் இத்தகைய அத்துமீறிய செயல் தேவையற்றதும், இரு மாநிலங்களின் சுமுக உறவுக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியதுமாகும்.

தொடர்ந்து இத்தகைய தவறான வகையில் மற்றும் தமிழக மக்களிடையே மனக் கொந்தளிப்பை அதிகமாக்கிடும் வகையில் கேரள அரசின் நடவடிக்கைகள் இருக்குமானால், இம்மாதம் 29-ம் தேதி தில்லியில் நடைபெறவிருக்கும் பேச்சில் தமிழக அரசு கலந்துகொள்ள இயலாமல் போகக் கூடும் என்பதுடன் நடைபெற்ற சம்பவங்களை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி நிவாரணம் தேட வேண்டி வரும். எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு கேரள அரசினுடைய சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

oOo

கருணாநிதியின் கருத்து ஆத்திரமூட்டுவதாகும்: கேரள முதல்வர் பதில்

திருவனந்தபுரம், நவ. 24:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக 29 ம் தேதி நடைபெறவுள்ள பேச்சு வார்த்தையிலிருந்து விலக நேரும் என தமிழக முதல்வர் கருணாநிதி பேசியிருப்பது ஆத்திரமூட்டுவதாகும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.

பெரியாறு அணையை கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்வதுகுறித்து தேனிமாவட்ட ஆட்சியருக்கு தெரியும். கேரளத்துக்கு சொந்தமான நிலத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது அணையின் பாதுகாப்பை மதிப்பிட தமிழகத்தின் அனுமதியைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

செய்ய்திகள் : தினமணி

Thursday, November 16, 2006

இலங்கை தமிழர்களுக்கு உதவி

இலங்கை தமிழர்களுக்கு 7000 டன் அரிசி- சர்க்கரை; பால் பவுடர்:
பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு


சென்னை, நவ. 16-

இலங்கையில் சிங்கள ராணுவம் அப்பாவி தமிழர்கள் மீது குண்டு வீசி தாக்கி வருகிறது. இதில் ஏராளமானோர் பலியானார்கள்.

குண்டுவீச்சுக்கு பயந்து தமிழர்கள் ஊரை காலி செய்துவிட்டு காடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். தமிழர்கள் பகுதிக்கு செல்லும் சாலைகளையும் சிங்கள ராணுவம் துண்டித்து விட்டது. இதனால் அவர்கள் உணவு கிடைக்காமல் பசி-பட்டினியால் தவிக்கின்றனர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன் மோகன்சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். பள்ளிகளில் தங்கும் தமிழர்களுக்கு உணவு பொருடங்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன்சிங் கருணாநிதிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அன்புள்ள டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு, இலங்கை இராணுவத் தினரால் இலங்கையில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றியும், படுகாயப்படுத்தப்படுவது பற்றியும் 10.11.2006 அன்று தாங்கள் வெளியிட்ட அறிக்கையின் நகல் ஒன்றை - நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவரும், என்னுடைய சகாவுமான டி.ஆர்.பாலு என்னை நேரில் சந்தித்துக் கொடுத்தார். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான அப்பாவித் தமிழர்களின் உயிரிழப்பு இத்தகைய கொடிய நிகழ்ச்சிகளால் ஏற்பட்டுள்ளது. அப்பாவிப் பெண் களையும், குழந்தைகளையும் கொல்வதற்கு எந்தவிதமான நியாயமும் கிடையாது.

இலங்கையில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் வன்முறையின் காரணமாக தமிழ் மக்கள் உயிரிழப்பது பற்றி எங்களுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளோம்.

கடந்த காலங்களில் செய்ததைப் போலவே இலங்கை அரசுக்கு இந்த முறையும் எங்களுடைய உணர்வுகளை திரும்பவும் எடுத்துரைப் போம்.

இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்பதையும் பேச்சுவார்த்தை மூலம் தான் அரசியல் தீர்வு காண முடியும் என்பதையும் அதன் மூலமாகத் தான் தமிழர்களுடைய உண்மையான உரிமைகளைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அதிகாரப் பங்கீடு செய்து கொள்ள முடியுமென்பதையும் நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு 5200 மெட்ரிக் டன் அரிசியையும், 1500 மெட்ரிக் டன் சர்க்கரையையும், 300 மெட்ரிக் டன் பால் பவுடரையும் அனுப்பி வைக்கவுள்ளது.

ஒருங்கிணைந்த கூட்டாட்சி அடிப்படையிலான இலங்கையில் தமிழர் களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்குரிய வகையில் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்ற எங்களுடைய எண்ணம் ஆழ மானதும், தொடர்ந்து இருந்து வருவதுமாகும்.

எனினும் இப்பொழுது அப்பாவி மக்கள் கொல்லப் படுவது நிறுத்தப்பட்டு, மனிதாபிமான அடிப்படை நிலை நிறுத்தப்பட வேண்டு மென்பதுதான் முதன்மையானதாகும்.

இந்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் கொழும்பு செல்லவிருக்கிறார். அப்பொழுது இலங்கை அரசுக்கு நமது ஆழ்ந்த கவலைகளை தெரிவிப்பார்.

இலங்கையில் மற்ற குடிமக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள உரிமைகளையும், சலுகை களையும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்துவார். அடுத்து, இலங்கைக் குடியரசு தலைவர் ராஜபக்சேயை நான் சந்திக்கும்போது, உரிய முறையில் இவற்றை அவருக்குத் தெரிவிப்பேன்.

இவ்வாறு பிரதமர் கூறி உள்ளார்.

செய்தி: மாலைமலர்

கட்டணமில்லா தொலைபேசி

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்

சென்னை, நவ. 16: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை இலவசமாக போனில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான கட்டணமில்லா தொலைபேசியை எண் 1056-ஐ தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார அலுவலகங்கள் ஆகியவை தகவல் தொடர்புகளால் இணைந்த "மருத்துவக் கட்டுப்பாட்டு அவசர சேவை மையங்கள்' தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்கள் மூலமாகக் கர்ப்பிணிப் பெண்கள், விபத்தில் சிக்கியோர், பிற அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஆகியோருக்கான முதலுதவி மருந்துகளையும், பிற மருத்துவ சாதனங்களையும் கொண்ட ஆம்புலன்ஸ் வாகன வசதி, ரத்தம் வழங்கும் தகவல், தேவைப்படும் சிகிச்சைக்கு ஏற்ப உடனடியாகச் செல்ல வேண்டிய மருத்துவமனை பற்றிய தகவல்கள் ஆகியவை மக்களுக்கு உடனுக்குடன் அளிக்கப்பட உள்ளன.

மருத்துவக் கட்டுப்பாட்டு அவசர சேவை மையங்களைப் மக்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ள காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல் மூன்று அல்லது நான்கு இலக்க இலவசத் தொலைபேசி எண்ணை ஒதுக்க கடந்த 27-ம் தேதி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.

இந்தக் கோரிக்கையை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஏற்று, தமிழகத்தில் நிறுவப்பட உள்ள மருத்துவக் கட்டுப்பாட்டு அவசரச் சேவை மையங்களைத் தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி தொடர்பு எண்ணை ஒதுக்கீடு செய்துள்ளது.

செய்தி: தினமணி

தலைப்புகள்-11/16

தினமலர்

* சீல்!* கர்நாடக, ஆந்திர எல்லை பகுதிகளில் போலீஸ் குவிப்பு* தமிழகத்துக்குள் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுக்க அதிரடி
# சென்னை : எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் நக்சல்கள் ஊடுருவக் கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளதால், தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடக, ஆந்திர எல்லைப் பகுதிகளில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் ; அபாயம் நீங்கியது
# டோக்கியோ : ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

* பயங்கரவாத தடுப்பு அமைப்பை உருவாக்க இந்தியா பாக்.,சம்மதம்! *இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்கு பின் கூட்டறிக்கை வெளியீடு
# புதுடில்லி:இந்தியா பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் பயங்கரவாத தடுப்பு அமைப் பை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பில் இரு தரப்பிலும் தலா மூன்று அதிகாரிகள் இடம் பெறுவர். இரு நாடுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் அணு ஆயுத அபாயத்தை தவிர்ப்பது என்றும், அடுத்த கட்ட பேச்சுவார்த் தையை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது. இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டன.

* மேட்டூர் மலையில் நக்சல் பயிற்சி முகாம்? * மலை உச்சியில் இரண்டு "டென்ட்' * மர்ம மனிதர்கள் நடமாட்டத்தால் பீதி
# மேட்டூர்: மேட்டூர் அருகே பாலமலை உச்சியில் இரு டென்ட்டுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, இரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் நடமாட்டம் இருப்பது பாலமலை அடிவார கிராம மக்களை பீதியடைய வைத்துள்ளது.

* உள்நாட்டு விமான கட்டணம் ஏறுது
# புதுடில்லி:போட்டா போட்டியை சமாளிக்க என்னதான் விலை குறைத்தாலும், செலவு கணக்குகள் "கையை' கடிப்பதால், உள்நாட்டு விமான கட்டணங்களை ஏற்ற வேண்டிய நிலைக்கு பல தனியார் நிறுவனங்கள் வந்துள்ளன என்று தெரிகிறது.

* இந்திய அணுசக்தி உடன்பாடு மசோதா :அமெரிக்க செனட் சபையில் இன்று விவாதம்
# வாஷிங்டன்:அமெரிக்க செனட் சபையில் நேற்று இந்திய அணுசக்தி உடன்பாடு குறித்தான மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக இருந்தது கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று நடக்கும் கூட்டத்தில் இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

* வெற்றியுடன் துவக்குமா இந்தியா?* இன்று தெ.ஆ., "ஏ' அணியுடன் மோதல்
# பெனோனி : தென் ஆப்ரிக்க பயணத்தை இந்திய அணி வெற்றியுடன் துவக்க காத்திருக்கிறது. இன்று தனது முதல் பயிற்சி போட்டியில் தென் ஆப்ரிக்க "ஏ' அணியை சந்திக்கிறது.

மாலைமலர்

* இலங்கை தமிழர்களுக்கு 7000 டன் அரிசி- சர்க்கரை; பால் பவுடர்: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
* தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும்
* முல்லைபெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை
* தடையை மீறி நாளை இலங்கை தூதரகம் முன் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: வைகோ தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
* நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட பாலங்கள் சீரமைப்பு: மழை பெய்வதால் மீட்பு பணி தாமதம்
* ஜனநாயக படுகொலை என்று விமர்சித்து உள்ளாட்சி தேர்தலை குறை சொல்வதா? காங்.தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம்
* வக்கீல் தொழிலுக்கு எந்த வயதிலும் பதிவு செய்யலாம்: ஐகோர்ட்டு தீர்ப்பு
* நீர்மட்டம் 138 அடியை தாண்டியது; முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பா? தயார் நிலையில் ராணுவம்-கப்பல் படை
* முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புக்கு 650 ஆயுதப்படை போலீசார்
* தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 3700 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்

Wednesday, November 15, 2006

நிலச்சரிவு

பலத்த மழையால் திடீர் காட்டாற்று வெள்ளம்
ஊட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் நிலச்சரிவு

7 பாலங்கள் அடித்து செல்லப்பட்டன
2 லாரிகளை வெள்ளம் இழுத்து சென்றது: ஒருவர் பலி-பலர் உயிருடன் மீட்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக காட்டாறுகளில் திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் ஊட்டி மலைப்பாதையில் உள்ள 7 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 2 லாரிகளை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதில் ஒருவர் பலி ஆனார். 10 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஊட்டிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கோவை, நவ.15-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

பலத்த மழை பெய்யும் போது மலைப்பகுதியில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்படுவது உண்டு. ஊட்டிக்கு செல்லும் மலை ரெயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், கடந்த 1-ந் தேதி முதல் அந்த ரெயில் நிறுத்தப்பட்டது.

பயங்கர மழை

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து பர்லியார் வழியாகவும், கோத்தகிரி வழியாகவும் உள்ள இரு சாலை மார்க்கங்களில் மட்டும் ஊட்டிக்கு போக்குவரத்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பயங்கர மழை கொட்டியது.

பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன

இதனால் மலைப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. திடீரென பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்தில் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் உள்ள கல்லாறு அருகே உள்ள வெள்ளைப்பாலம் உள்ளிட்ட 7 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

காட்டாற்று வெள்ளம் சில இடங்களில் சாலையையும் அரித்தது.

நிலச்சரிவு

மேலும் பலத்த மழையின் காரணமாக கோவை மாவட்டம் கல்லாறு-நீலகிரி மாவட்டம் பர்லியார் இடையே சாலையில் 10 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மண்ணுடன் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. ஏராளமான மரங்களும் வேறோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் சாலை அப்படியே மூடி நாசமானது.

இந்த நிலச்சரிவில் 2-வது கொண்டை ஊசி வளைவு முற்றிலுமாக அழிந்தது. 10 அடி பாலம் அருகே 2 இடங்களில் ரோடு அரிக்கப்பட்டு துண்டானது.

பலத்த மழை பெய்து கொண்டு இருந்ததால் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

அடித்துச் செல்லப்பட்ட லாரிகள்

திடீரென்று பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 2 லாரிகள் பள்ளத்தில் விழுந்தன.

கல்லாறு-பர்லியார் இடையே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய ஒரு லாரி 500 அடி கிடுகிடு பள்ளத்தில் விழுந்தது. அப்போது லாரி டிரைவர் ஜாபர் தூக்கி வீசப்பட்டார். ஒரு மரக்கிளையை பிடித்தபடி உயிருக்கு போராடிய அவர் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினார்.

பின்னர் அவரை மீட்டு தொட்டில் கட்டி வெளியே தூக்கி வந்தனர். மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கிளீனர் சாவு

இந்த விபத்தில் கிளீனர் வினோத் குமார் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக செத்தார். அவரது உடல் மீட்கப்பட்டது.

மற்றொரு லாரி வெள்ளத்தில் நாசமான இரும்பு பாலத்தில் சிக்கி தொங்கிக் கொண்டு இருந்தது. அதில் இருந்த 5 பேரை நேற்று அதிகாலை தீயணைப்பு படையினரும் மீட்புகுழுவினரும் மீட்டனர்.

சோதனைச் சாவடி நாசம்

பர்லியாரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி நிலச்சரிவில் சிக்கி நாசமானது. மலையில் இருந்து மண்ணுடன் உருண்டு விழுந்த பாறைகளும் கற்களும் அந்த சோதனைச் சாவடியை அமுக்கின.

பலத்த சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டதை அறிந்ததும் அங்கு இருந்த கவிதா என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டரும் கண்ணையன் என்ற போலீஸ் ஏட்டும், சங்கர் என்ற போலீஸ்காரரும் வெளியே ஓடிவ ந்து உயிர் தப்பினார்கள்.

அப்போது ஏட்டு கண்ணையன் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். மரக்கிளை ஒன்றை பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்த அவரை பின்னர் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

அந்த சோதனைச் சாவடி காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

மாணவர்கள் மீட்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் இருந்து பஸ்சில் சுற்றுலா வந்த சுமார் 19 கல்லூரி மாணவர்களும் மற்றும் வேனில் வந்த சில சுற்றுலா பயணிகளும் மலைப்பாதையில் நிலச்சரிவில் சிக்கி நடுவழியில் தவித்தனர். அவர்களை போலீசார் மீட்டு மேட்டுப்பாளையத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

ஊட்டியைச் சேர்ந்த காதர்கனி என்ற வியாபாரியின் 3 மாத குழந்தை இர்பானை சிகிச்சைக்காக அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேனில் கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அந்த வேன் பர்லியார் அருகே நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் குன்னூர் போக்கு வரத்து சப்-இன்ஸ்பெக்டர் முரளி அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு வேறொரு வாகனத்தில் அனுப்பி வைத்தார்.

நாசமான சாலை

நிலச்சரிவின் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் பல இடங்களில் ரோட்டில் பாறைகளும் சேறும் சகதியுமாக உள்ளது. அவற்றை `பொக்லைன்' இயந்திரம் மூலம் அகற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

பெரிய பெரிய பாறைகள் சாலையில் கிடப்பதால் அவற்றை அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. 50 டன் எடை கொண்ட ராட்சத பாறையை துளை போட்டு உடைத்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் முழு மூச்சுடன் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

சில இடங்களுக்கு மீட்புக்குழுவினரால் இன்னும் போய்ச் சேர முடியவில்லை.

பர்லியாரில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை தமிழக கதர் வாரிய துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ் கே.மிஸ்ரா ஆகியோர் பார்வையிட்டு, மீட்புப்பணியை முடுக்கி விட்டனர்.

போக்குவரத்து துண்டிப்பு

நிலச்சரிவின் காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே போக்கு வரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. சாலையில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அதில் இருப்பவர்கள் எங்கும் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் தொட்டப்பெட்டா பிரிவு, கட்டப்பட்டு, குஞ்சப்பனை வழியாக வருகின்றன.

செய்தி: தினத்தந்தி

தலைப்புகள்-11/15

.ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்} சுனாமி எச்சரிக்கை
.அருணாச்சலம் சர்ச்சைக்குரிய பகுதி: சீனத் தூதர் பிடிவாதம்
.குறைந்தபட்ச தேவை அளவுக்கு அணு ஆயுதங்களை
வைத்திருக்க ஜப்பான் முடிவு
.நெதர்லாந்திலிருந்து ஐஸ்வர்யாவுக்கு டாலர்: விசாரணைக்கு கஸ்டம்ஸ் அழைப்பு
.ஜோகன்னஸ்பர்கில் இந்திய கிரிக்கெட் அணி
.அருணாசல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம்: சீன தூதருக்கு பிரணப் காட்டமான பதில்
.புதுச்சேரி: பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தக் கோரி கையெழுத்து இயக்கம்
.பெங்களூர்: முதல்வர் மீது ரூ. 150 கோடி லஞ்சப்புகார்: சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு
.இலங்கை: இலங்கை அரசு-புலிகள் அமைதிப் பேச்சு: பிரிட்டன் புது முயற்சி
.சிறப்பு பக்கம்: இந்த ஆண்டு இறுதிக்குள் சதாம் தூக்கிலிடப்படுவார்: இராக் பிரதமர்
தமிழகம்
.வரும் கூட்டத்தொடரில் 'வாட்' மசோதா: தமிழக அரசு
.இலங்கை அதிபர் இந்தியா வரும் முன்பாக யாழ்ப்பாண நெடுஞ்சாலையை திறக்க நிர்பந்திக்க வேண்டும்: ராமதாஸ்
.கூட்டுறவுத் தேர்தலும் நியாயமாக நடக்காது: ஜெ.
.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விரிசலை சீரமைக்க நிபுணர் குழு அமைக்கக் கோரி மனு
.கன மழையால் மண் சரிவு: பாறைகள் உருண்டன மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை துண்டிப்பு
.நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு உள்ளாட்சிகளுக்கு நேரடியாக தேர்தல் நடத்த தயாரா?: வைகோ

Tuesday, November 14, 2006

ஆபாச படம்

ரெயில் நிலையத்தில் ஆபாச படம் எடுத்தவர் காதல் ஜோடியை ரகசிய காமிராவில் படம் பிடித்தார்

சென்னையில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு வரும் பெண் பயணிகளை செல்போன் மூலம் ஆபாசமாக படம் பிடித்து வக்கிர கும்பல் ஒன்று இன்டர்நெட்டில் பரப்புவதை மாலைமலர் அம்பலப்படுத்தியது.

இதையடுத்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா தலைமையில் பெண் போலீசார் சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் காமிரா செல்போனுடன் சுற்றி திரிந்த வாலிபர்களை பிடித்து செல்போனை சோதனை செய்தனர். தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

ரெயில் நிலையம் வரும் பெண் பயணிகளை செல்போன் மூலம் ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் பரவவிடுவது குறித்து விசாரிக்க கமிஷனர் லத்திகா சரண் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் பெண்களை செல்போன் மூலம் படம் பிடித்தது இண்டர்நெட் மைய உரிமையாளர் என்பது தெரிய வந்தது.

அவர் தனது இண்டர்நெட் மையத்துக்கு வரும் சில மாணவிகளை அவர்களுக்கு தெரியாமலேயே செல்போன் மூலம் ஆபாசமாக படம் பிடித்ததும் அந்த படங்களை தான் உருவாக்கிய `இண்டியன் மசாலா மிக்ஸ்டு டாட் ரிப்போடு டாட்காம்' என்ற இணைய தள முகவரி மூலம் பரவ விட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது இணைய தள முகவரியை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கினர். இதில் அவர் தனது இண்டர்நெட் மையத்துக்கு வரும் காதல் ஜோடிகளை ரகசிய வீடியோ காமிரா மூலம் ஆபாச படம் பிடித்தது தெரிய வந்துள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

பெண்களை செல்போன் காமிரா மூலம் ஆபாசமாக படமெடுத்தவரின் இண்டர் நெட் மையத்தில் பிரவுசிங் செய்ய வரும் ஜோடிகளுக்கு என்று தனி தனி கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இந்த கேபினில் வலது ஓரத்தில் ரகசிய கேமிரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இங்கு பிரவுசிங் செய்வதற்கு என்று வரும் இளம் ஜோடிகளுக்கு சம்பந்தப்பட்ட கேபின்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

இந்த கேபின்கள் ஒவ்வொன்றும் தனி அறை போல் காட்சி அளிக்கிறது. இதில் 2 இருக்கைகளும் நவீன வசதியுடன் கூடிய கம்ப்ïட்டர்கள் உள்ளன. பிரவு சிங் செய்ய வரும் காதல் ஜோடிகள் கேபினுக்குள் வைத்து செய்யும் செக்ஸ் விளையாட்டுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகளுக்கு தெரியாமலேயே ரகசிய காமிராவில் படம் பிடிக்கப்படுகின்றன.

இதில் ஒரு சில காதல் ஜோடிகள் எல்லை மீறி ஒட்டுதல், உரசுதல், கட்டுதலை தொடர்ந்து `அந்த' விஷயத்தையும் கேபின் உள்ளேயே அரங்கேற்றுகின்றனர்.

இந்த காட்சிகளை அப்படியே காமிரா படம் பிடிக்கிறது. இதில் உள்ள ஆபாச காட்சிகளை தொகுத்து ஒரு முழு நீள `புளூ பிலிம்' ஆக தயாரித்து 1/2 நிமிடம் ஓடும் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வீடியோ காட்சிகளையும், இண்டர்நெட்டில் பரவவிட்டுள்ளனர். இண்டர்நெட்டில் பரப்பப்பட்ட வீடியோ காட்சி மூலம் மேற்படி தகவல் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட இணைய தள முகவரியில் இந்த புளூ பிலிம் வீடியோ காட்சிகள் 3 பிரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வீடியோவில் பிரவுசிங் செய்யும் காதல் ஜோடிகள் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபடுவது போலவும் அடுத்தடுத்த வீடியோவில் மேற்படி சமாச்சாரங்ள் நடப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இண்டர்நெட் மையத்தில் ரகசிய கேமிரா மூலம் படம் பிடித்து இண்டர்நெட்டில் பரவவிடுவது என்றால் அதன் உரிமையாருக்கு தெரியாமல் நடைபெற வாய்ப்பில்லை என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே ரகசிய காமிராவில் பதிவாகி உள்ளது போல் சென்னையில் எங்கெல்லாம் இண்டர்நெட் மைய கேபின் உள்ளது என போலீசார் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட கேபின் அடையாளம் காணப்பட்டால் அதன் உரிமையாளர் யார்? என்பது தெரிந்து விடும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செய்தி : மாலைமலர்

இளையராஜாவுக்கு கண்டனம்

'பெரியார்' படத்துக்கு இசை அமைக்க மறுப்பு: இளையராஜாவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம்

திருநெல்வேலி, நவ. 14: "பெரியார்' திரைப்படத்திற்கு இசை அமைக்க மறுத்த இளையராஜாவுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக, அதன் பொதுச் செயலர் ச. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இசை அமைப்பளர் இளையராஜா, "பெரியார்' திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்து கோபமாக பேசிய வார்த்தைகள் முற்போக்கு எண்ணம் கொண்ட அத்தனை தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் பெருத்த வேதனையை உண்டாக்கியுள்ளது.

அவர் ஆத்திகராக இருப்பதும், எந்த ஒரு படத்துக்கும் இசை அமைக்க மறுப்பதும் அவரது ஜனநாயக உரிமை. ஆனால், ஆத்திகராக இருப்பதால், "பெரியார்' படத்துக்கு இசை அமைக்க மாட்டேன் என கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

மேலும், அவரது கருத்துக்கு ஆதரவாக மதவாத சக்திகள் குரல் கொடுப்பது தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகுந்த கவலை அளிக்கிறது.

எனவே, நல்லெண்ணத்தின் அடிப்படையில் எங்களது வருத்தத்தை பகிரங்கமாக இளையராஜாவுக்கு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம் என்றார் தமிழ்ச்செல்வன்.

செய்தி : தினமணி

தலைப்புகள்-11/14

தினத்தந்தி

* 4 ஊராட்சிகளுக்கும் தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம்
# பாப்பாபட்டி, கீரிப்பட்டி, உ∙பட 4 ஊராட்சிகளுக்கும் தி.மு.க. சார்பில் தலாரூ.5லட்சம் வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவிப்பு.

* காளிமுத்துவை நான் மிரட்டவில்லை -ஜெயலலிதா
# கருணாநிதியின் திருக்குறள் உரையை காளிமுத்து வாசித்ததற்காக நான் அவரை மிரட்டியதாக சொல்வது முழு கற்பனை என்று ஜெயலலிதாகூறியுள்ளார்.

* மருத்துவம், என்ஜினீயரிங்நுழைவுத்தேர்வு ரத்து
# தமிழ்நாட்டில் தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர்க∙சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வை ரத்துசெய்யலாம் என்று வல்லுனர்குழு பரிந்துரை.

* முல்லைப்பெரியாறு பிரச்சினை: 23-ந் தேதி பேச்சுவார்த்தை
# முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக மாநிலமுதல்-மந்திரிகள் கூட்டம் வரும் 23-ந் தேதி டெல்லியில் நடக்கிறது.

* ஆண்டிப்பட்டி தேர்தல் :அ.தி.மு.க-தி.மு.க. மோதல்
# ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ïனியன் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு.

தினமலர்

* துண்டிப்பு! * மேட்டுப்பாளையம் குன்னூர் ரோட்டில் 12 இடங்களில் நிலச்சரிவு * பலத்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் உருண்டன பாறாங்கற்கள்
# குன்னூர்:கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, குன்னுõர் மேட்டுப்பாளையம் சாலையில் 12 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாறைகள் உருண்டு பாதையில் நின்றிருந்த லாரிகள் மீது விழுந்ததால், இரண்டு லாரிகள் மண்ணில் புதைந்தன. மூன்று பேர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒருவர் உடல் மீட்கப்பட்டது. குன்னுõர்மேட்டுப்பாளையம் இடையேயான போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது.

* இந்தியா பாக்., வெளியுறவு செயலர்களின் பேச்சுவார்த்தை துவங்கியது *காஷ்மீர், பயங்கரவாதம் உட்பட பல பிரச்னைகள் குறித்து அலசல்
# புதுடில்லி:நான்கு மாத இடைவெளிக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு செயலர்களின் இரண்டு நாள் பேச்சு வார்த்தை டில்லியில் நேற்று துவங்கியது. காஷ்மீர், பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்தும், இருநாடுகளுக்கு இடையே நம்பிக்கையை வலுப்படுத் தும் நடவடிக்கைகள் குறித்தும் நேற்று பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* காளிமுத்து மரணம் ஏன்? ஜெயலலிதா புது விளக்கம்
# சென்னை: ""மறைந்த காளிமுத்துவை நான் அண்ணனாக மதித்தேன். ஆனால், அவர் மீது பொய் வழக்கு போட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி அவரை சாகடித்தது கருணாநிதி,'' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

* இந்திய விமானப்படை எப்போதும்"பெஸ்ட்' * தென்பிராந்திய பயிற்சி தளபதி பெருமிதம்
# சென்னை: ""எந்த காலத்திலும் பாகிஸ்தானை விட இந்திய விமானப் படை அனைத்திலும் சிறந்தே விளங்குகிறது,'' என்று இந்திய விமானப் படையின் தென்பிராந்திய பயிற்சி பிரிவு தளபதி ஜி.எஸ்.சவுதிரி தெரிவித்தார்.

* யு.எஸ்., பறக்க ஜெட் தயாராகுது
# புதுடில்லி: கடும் போராட்டத்துக்கு பின்னர், இந்தியாவின் முதன்மையான தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ்க்கு, அமெரிக்க வானில் பறக்க அனுமதி கிடைக்கும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

* வங்கதேச எதிர்க்கட்சி போராட்டத்தில் வன்முறை: ஒருவர் படுகொலை
# தாகா: வங்கதேசத்தில் தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இதில், ஒருவர் கொல்லப் பட்டார். மேலும் 60 பேர் காயமடைந்தனர்.

* உலக கோப்பைக்கு யுவராஜ் வருவாரா?* தெ.ஆப்ரிக்க தொடரிலிருந்து நீக்கம்
# புதுடில்லி: இந்திய அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்திலிருந்து யுவராஜ் சிங் நீக்கப்பட்டுள்ளார். எனினும் உலக கோப்பை தொடரில் அவர் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Monday, November 13, 2006

நுழைவுத் தேர்வு ரத்தாகும்!

கருணாநிதியிடம் வல்லுநர் குழு அறிக்கை: நுழைவு தேர்வு ரத்து ஆகிறது

சென்னை, நவ. 13-

மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

`கிராமப்புற மாணவர் களும், அரசுப்பள்ளி மாணவர்களும் நுழைவுத் தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து, இந்த முறையை ரத்து செய்வது தொடர்பாக அண்ணா பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

செய்த: மாலைமலர்

இந்த குழு நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பாக சென்னை, மதுரையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரிடம் கருத்து கேட்டது. அப்போது பெரும்பாலானோர் "நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறினார்கள்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள், நகர்புற மாணவர்கள் உள்ளிட்ட ஒருசிலர் மட்டும் நுழைவுத் தேர்வு வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். நுழைவுத் தேர்வு பற்றிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்தது.

இந்த நிலையில் ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழு, நுழைவுத் தேர்வு பற்றிய அறிக்கையை இன்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கியது.

அப்போது அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த குழுவின் பரிந்துரைப்படி நுழைவுத் தேர்வு ரத்தா கிறது. அதற்கான சட்டமும் வரும் சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2006 மே மாதம் ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றிய போது-தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தரக்கூடியதாகவும், அதிகப் பொருட் செலவை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழைக் குடும் பங்களைச் சேர்ந்த மாண வர்களுக்கு நுழைவுத் தேர்வில் சம வாய்ப்பு இல்லை என்ற நிலை இருப்பதாலும் நுழைவுத் தேர்வினை ரத்து செய்வது குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறி விக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 7.7.2006 அன்று அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் இது குறித்து ஆராய்ந்து பரிந் துரைகளை வழங்க ஒரு வல்லுநர் குழு அமைக்கப் பட்டது.

வல்லுநர் குழு இன்று பரிந்துரைகளை முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் அளித்தது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படலாம் என்ற வல்லுநர் குழுவின் பரிந் துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறை கள் அமைச்சரவைக் கூட் டத்தில் விவாதிக்கப்படும்.

டிசம்பர் 4 அன்று தொடங்கப்படும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் உரிய சட்ட முன் வடிவினைக் கொண்டு வந்து அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி: தினமலர்

தலைப்புகள்-11/13

தினமலர்

* தமிழகத்தில் நுழைவு தேர்வை ரத்து செய்ய அனந்த கிருஷ்ணன் குழு பரிந்துரை
# சென்னை : தமிழகத்தில் தொழிற் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய அனந்த கிருஷ்ணன் குழு பரிந்துரை செய்துள்ளது.

* தனித்து போட்டி * காங்கிரசில் இப்போதே ஒலிக்கத் துவங்கி விட்டது கோஷம் *மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் கலக்கம்
# புதுடில்லி:மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அடுத்த லோக்சபா தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருந்தாலும், தனித்து போட்டி என்ற கோஷம் இப்போதே காங்கிரஸ் கட்சிக்குள் எழ தொடங்கி விட்டது.

* சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களை கடத்த சதி அமெரிக்க உளவுத்துறையின் எச்சரிக்கையால் பரபரப்பு * ஐரோப்பிய விமானங்களில் விடிய விடிய சோதனை
# சென்னை:இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களை பயங்கரவாதிகள் கடத்தப் போவதாக வந்த தகவலை தொடர்ந்து சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட மூன்று விமானங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதே போன்றதொரு எச்சரிக்கை நடவடிக்கை டில்லி, மும்பை விமான நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

* மத்திய அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு * வீரப்ப மொய்லி யோசனை
# புதுடில்லி:""மத்திய அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்'' என்று வீரப்ப மொய்லி கூறினார்.மத்திய அரசு பணிகளில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க மாஜி கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி தலைமையில் உயர் மட்ட கமிட்டி மத்திய அரசு நியமித்துள்ளது.

* புதிய ஜென் மாடல் கார்கள்
# புதுடில்லி:மாருதி உத்யோக் நிறுவனம், புதிய ஜென் மாடல் கார்களை விரைவில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

* வங்கதேசத்தில் எதிர்க்கட்சி போராட்டம் ரயில் மற்றும் பஸ்களுக்கு தீ வைப்பு
# தாகா:வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் ரயில் மற்றும் பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லுõரிகள் இயங்கவில்லை. வங்கதேசத்தில் விரைவில் பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளது.

* முகமது யூசுப் சதத்தில் பாக்., முன்னிலை! * எடுபடவில்லை வெ.இண்டீஸ் பந்துவீச்சு
# லாகூர்:லாகூர் டெஸ்டில் துõள் கிளப்புகிறது பாகிஸ்தான்.நேற்று முகமது யூசுப் சூப்பர் சதம் அடிக்க, முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. தற்போது 59 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் ரசாக் போன்றோர் இருப்பதால் வலுவான ஸ்கோரை எட்ட வாய்ப்பு உள்ளது. ஆடுகளம் படுமந்தமாக இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு எடுபடாமல் போனது.

மாலைமலர்

* கருணாநிதியிடம் வல்லுநர் குழு அறிக்கை: நுழைவு தேர்வு ரத்து ஆகிறது
* விமானங்களை கடத்த சதி: மிரட்டல் விடுத்தது யார்? உளவுத்துறை தீவிர விசாரணை
* டெல்லி கடைகள் `சீல்'வைப்பை எதிர்த்து மத்திய அரசு அப்பீல்
* ஆண்டிப்பட்டியில் பஸ் மறியலில் ஈடுபட்ட தங்கதமிழ்செல்வன் எம்.பி. உள்பட 100 அ.தி.மு.க.வினர் கைது
* காளிமுத்துவை நான் மிரட்டவில்லை: கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்
* திருமண மண்டப இடிப்பு பிரச்சினை: விஜயகாந்த்-மந்திரி டி.ஆர்.பாலு மோதல்
* போலீஸ் வேட்டை தீவிரம்: சென்னையில் 5 நாளில் 2000 ரவுடிகள் கைது
* ம.தி.மு.க.வை நிர்மூலம் செய்ய கருணாநிதி திட்டம்: வைகோ குற்றச்சாட்டு
* கிராம மக்களுடன் சிறப்பு ரெயிலில் வருகை: 4 பஞ்சாயத்து தலைவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்
* இலங்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் எம்.பி. உடல் புதன்கிழமை அடக்கம்; கொழும்பில் இன்று முழு அடைப்பு

Sunday, November 12, 2006

வேலையற்றோர் உதவித்தொகை

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 2 லட்சம் இளைஞர்களுக்கு நிதியுதவி
தமிழகம் முழுவதும் திட்டம் தொடங்கியது

திருச்சி. நவ.12: வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. திருச்சியில் இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். மாவட்டங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டு பூர்த்தியான இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக உறுதி அளித்திருந்தது. அந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.150, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.200, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.300 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்.

உதவி பெறுவோரின் வங்கிக் கணக்கில் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்தத் தொகை சேர்க்கப்படும். மாநிலம் முழுவதும் 2 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும். இதற்காக அரசு மாதம் ரூ.4 கோடி செலவிடும்.

திருச்சி நேரு விளையாட்டரங்கில் நடந்த திட்டத் தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

"இந்த விழாவைப் பார்க்கும்போது, அண்ணா சொன்ன பொன்மொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. 'சாலை ஓரத்தில் வேலையற்றதுகள். வேலையற்றதுகள் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள், அரசே, அதுதான் காலக்குறி?' என்பதுதான் அந்த பொன்மொழி.

சாலையோரத்தில் படுத்துக்கொண்டு மௌனப்புரட்சி செய்துகொண்டிருக்கும் வேலையற்றவர்கள் கொதித்து எழுந்தால் அரசு கவிழும். அந்த சுழல்காற்றில் நீங்கள் எல்லாம் சுழற்றி எறியப்படுவீர்கள் என்பதே அதன் அர்த்தம். அதை நெஞ்சில் பதிய வைத்துதான், இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

இவ்வாறு உதவித்தொகை வழங்குவதன் மூலம் வேலையில்லாத நிலை ஏற்படுமா? என்றால் அது முடியாது. இது ஆறுதல் உதவிதான். இதை உதவித்தொகை என்றோ, கருணைத்தொகை என்றோ அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. இது அரசின் கடமைத்தொகை.

இந்தத் தொகையைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று, அரசின் திட்டங்களைப் பெற்று வீட்டையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்று இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதை இங்கே குறிப்பிட்டார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எந்த ஒரு ஆட்சியிலும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் அது வியப்புக்குரிய ஒன்றுதான்.

தமிழக அரசு போலவே மத்திய அரசும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இப்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நமது கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது."

செய்தி: தினகரன்

தலைப்புகள்-11/12

தினமலர்

* மிரட்டல்!* இலங்கையில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் * சிங்களர்களை தாக்க புதிய அமைப்பு எச்சரிக்கை
# கொழும்பு : இலங்கையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 1983ம் ஆண்டு துவங்கி பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு கலவரத்தால் 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது போன்றதொரு உள்நாட்டு கலவரம் மீண்டும் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக, சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

* "தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் தொகை' திருச்சியில் முதல்வர் கருணாநிதி உருக்கம்
# திருச்சி : ""வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அளிக்கும் உதவித் தொகை முதல்வர் வழங்கும் தொகை அல்ல. தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் தொகையாக கருத வேண்டும்,'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

* போலி ஆவணங்களுடன் விமான நிலையத்தில் மூவர் * பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்பதால் பரபரப்பு *மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
# சென்னை : பயங்கரவாதிகள் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதட்டத்துடன் அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருக்கும் வேளையில், போலி விசா மற்றும் பாஸ்போர்ட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய வந்த வெளிநாட்டைச் சேர்ந்த மூவரால் சென்னை விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது.

* போரை விட அச்சுறுத்தலாக உள்ளது எல்லை தாண்டிய பயங்கரவாதம் : பிரணாப் முகர்ஜி ஆவேசம்
# புதுடில்லி : ""நாடுகளுக்கு இடையேயான போர்களை விட, எல்லை கடந்த பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இப்பிரச்னையைச் சமாளிக்க, சர்வதேச சமூகத்தினரின் குறிக் கோளுடன் கூடிய ஒத்துழைப்பு தேவை,'' என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

* தொடர் மழையால் தக்காளி விலை உயர்வு *வெளி மாநில ஏற்றுமதியும் பாதிப்பு
# வாழப்பாடி : வாழப்பாடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பெய்த மழையால், தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், வெளி மாநிலங்களுக்கான ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

* டாக்டர்களுக்கு பேருதவி புரியும் கூகுல் வெப்சைட்
# லண்டன் : நோயாளிகள் மட்டுமல்லாது டாக்டர்களும் நோய்கள் தொடர்பாக தங்களுக்கு வேண்டிய தகவல்களைத் தேடுவதற்கு "கூகுல் வெப்சைட்டை' பயன்படுத்துகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* சாதிக்க தவறும் முன்னணி வீரர்கள்!* டிராவிட் குற்றச்சாட்டு
# பெங்களூர் : ""டாப் ஆர்டர் பேட்ஸ் மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே, தொடர்ச்சியான தோல்விக்கு வழிவகுத்து விட் டது. உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பாக முன்னணி வீரர்கள் இழந்த பார்மை மீட்க வேண்டும். ,'' என எச்சரிக்கிறார் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட்.

Saturday, November 11, 2006

தலைப்புகள்-11/11

தினத்தந்தி

* இலங்கையில் தமிழ் எம்.பி. சுட்டுக் கொலை
# இலங்கையில் தமிழ் எம்.பி.யான நடராஜா ரவிராஜ், மர்ம மனிதர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

* திருமண மண்டபம் இடிப்பு :விஜயகாந்த் புகார்
# எனது கட்சியை அழிப்பதற்கே, திருமண மண்டபத்தை இடிக்க போவதாக அறிவித்துள்ளனர்-விஜயகாந்த் புகார்.

* இலங்கை பிரச்சினை :மன்மோகன்சிங் உறுதி
# இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மன்மோகன்சிங் உறுதி.

* இட ஒதுக்கீடு வழக்கு :ஜெயலலிதா குற்றச்சாட்டு
# இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை நடத்தியதாக மத்திய, தமிழக அரசு மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு.

* "நான் பிரதமர் ஆவது உறுதி''-லல்லு பிரசாத் அறிவிப்பு
# "நான் பிரதமர் ஆவது உறுதி'' என்று மத்திய ரெயில்வே மந்திரி லல்லு பிரசாத் கூறினார்.

தினமலர்

* அகதிகளை தாக்கிய ராணுவத்திற்கு புலிகள் பதிலடி * கொழும்பு நகரில் தமிழ் எம்.பி., சுட்டுக் கொலை
# கொழும்பு : இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆதரவு எம்.பி., நடராஜா ரவிராஜ் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தியதில் எம்.பி.,யின் பாதுகாவலரும் கொல்லப்பட்டார். அதே நேரத்தில் திரிகோணமலை கடற்பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் விடுதலைப் புலிகள் இடையே நடந்த மோதலில் இரண்டு தரப்பையும் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டனர்.

* நுழைவுத்தேர்வு உண்டா?: அரசு முடிவு என்ன? 13ம் தேதி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
# சென்னை : நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்த அனந்தகிருஷ்ணன் கமிட்டி வரும் 13ம் தேதி முதல்வரிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறது. அதனடிப்படையில் நுழைவுத் தேர்வு விஷயத்தில் மாணவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

* மனித நேயமற்று சுடுகாட்டில் வீசப்பட்ட முதியவர் சாவு
# மேலூர் : மேலூர் அருகே சுடுகாட்டில் வீசிப்பட்ட முதியவர் இறந்து போனார். இறந்த அவர், தன் தம்பியை கொலை செய்த குற்றவாளி என அடையாளம் தெரிந்தது.

* இந்திய அமெரிக்க உடன்பாட்டுக்கு ஆதரவு திரட்ட ஜனநாயக கட்சியினருடன் அதிபர் புஷ் ஆலோசனை
# வாஷிங்டன் : இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்கு செனட் சபையில் ஒப்புதல் பெற அதிபர் புஷ் தனிப்பட்ட ஆர்வம் காட்டி வருகிறார். இது குறித்து ஜனநாயக கட்சி தலைவர்களுடனும் அவர் பேசியுள்ளார்.

* ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை: "சாம்சங்' நிறுவனம் ஒப்பந்தம்
# சென்னை : சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் "சாம்சங்' நிறுவனம் 450 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற் சாலை துவங்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

* அமைதி ஒப்பந்தத்தின் வெற்றியை கொண்டாடிய மாவோயிஸ்ட்கள்
# காத்மாண்டு : நேபாள அரசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை கொண்டாடும் பொருட்டு மாவோயிஸ்ட்டுகள் சார்பில் நேற்று வெற்றி பேரணிகள் நடத்தப்பட்டன.

* மகாத்மா, நேரு வரிசையில் நானா...!* சச்சின் ஆச்சர்யம்
# மும்பை : மகாத்மா காந்தி, நேரு ஆகியோரது வரிசையில் தனது பெயரையும் சேர்த்துள்ளது மிகப் பெரும் கவுரவம் என சச்சின் தெரிவித்துள்ளார்.

வல்லிக்கண்ணன்

பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர் வல்லிக்கண்ணன்

திருநெல்வேலி, நவ. 11: சிறுகதை, நாவல், திறனாய்வு என இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த பன்முகத்தன்மை கொண்டவர் மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன். இறுதிமூச்சு வரை இலக்கியத்துக்காகவே வாழ்ந்தவர். இலக்கியத்தின் மீது கொண்ட தீவிரப் பற்றால், மணவாழ்க்கையை மறுத்து, எளிமையாக வாழ்ந்தவர்.

சிறுகதைகளின் உச்சத்தை தொட்ட நெல்லைச் சீமையின் அழியாப் புகழ் பெற்ற இலக்கியகர்த்தா. புதுமைப்பித்தனின் சம காலத்தவர்.

திருநெல்வேலி அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் பிறந்த இவர், இளமைப் பருவம் முதல் இலக்கிய தாகம் உடையவராக இருந்தார். அதன் காரணமாக, தனது பெயரைக்கூட ஊரின் பெயரை நினைவுகூரும் வகையில் வல்லிக்கண்ணன் என மாற்றிக் கொண்டார்.

தமக்கிருந்த இலக்கிய தாகத்துக்கு வடிகால் தேடவும், அதற்காக ஏதேனும் ஒரு பத்திரிகையில் பணியாற்றும் ஆர்வத்துடனும் தான் பார்த்து வந்த அரசு வேலையை உதறிவிட்டு நடந்தே சென்னை சென்றார். அங்கு "காந்தி', "கிராம ஊழியன்' உள்ளிட்ட பத்திரிகைகளில் பணி செய்தார்.

புதுமைப்பித்தனுடன் தொடர்பு வைத்திருந்த வல்லிக்கண்ணன், பல குறு நாவல்கள், சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

குடும்பச் சூழலில் இருந்து விலகி இருந்த இவர், அவரது சகோதரர் இறந்த பிறகு அந்தக் குடும்பச் சுமையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவர் எழுதிய ""புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்'' என்ற திறனாய்வு நூலுக்கு 1978-ல் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இந்த விருதைப் பெற்ற ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த இரண்டாவது நபர் வல்லிக்கண்ணன். இதே ஊரைச் சேர்ந்த ரா.பி. சேதுப்பிள்ளை முதல் விருதைப் பெற்றவர் ஆவார்.

தாமிரபரணி பிரியர்: சென்னையில் வசித்து வந்த வல்லிக்கண்ணன், சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்த உடன் பஸ் அல்லது ரயில் நிலையத்தில் இருந்து நேராக தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பாராம்.

செய்தி : தினமணி

விஜயகாந்த் மண்டப அரசியல்

எனது கட்சியை அழிப்பதற்காக திருமண மண்டபத்தை இடிக்கிறார்கள்
விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை, நவ.11-

எனது கட்சியை அழிப்பதற்காகவே, திருமண மண்டபத்தை இடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர் என்று விஜயகாந்த் குற்றம் சுமத்தி உள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமண மண்டப விவகாரம்

சட்டசபை தேர்தலுக்கு முன்னர் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு இப்போதைக்கு எனது திருமண மண்டபத்தை இடிக்கும் திட்டம் இல்லை என்றார். பின்னர் விஜயகாந்த் மாற்று திட்டம் கொடுத்தால் பரிசீலிப்போம் என்றார். அப்போதே நான் இடித்துக் கொள்ளுங்கள் என்று தான் கூறினேன்.

இந்த நிலையில் ஜனவரி 1-ந் தேதி எனக்கு எந்த வாழ்த்தும் அனுப்பாத டி.ஆர்.பாலு புத்தாண்டு வாழ்த்து அனுப்பினார். அந்த வாழ்த்தின் பின்பக்கத்தில் கோயம்பேடு பாலம் மற்றும் நெடுஞ்சாலையின் வரைபடம் இருந்தது. அந்த வரைபடத்தை வைத்து, ஓய்வு பெற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை திட்ட அமைப்பாளர் ஒருவரை கொண்டு மாற்று திட்டத்தை தயாரித்தேன்.

அதன்படி எனது திருமண மண்டபம் பகுதியில் மேம்பாலம் வரவில்லை. அந்த பகுதியில் தரைவழிப் பாதை தான் செல்கிறது.

தேர்தல்கள் முடிந்தபின்

அதனை நிராகரித்து விட்டதாக இப்போது பதில் அனுப்பியிருக்கிறார்கள். அதிலும் என்ன காரணம் என்று கூறவில்லை. தொழில்நுட்பம் ஒத்துவரவில்லை என்று கூறியுள்ளனர். அவர்களது மனது தான் ஒத்துவரவில்லை. இத்தனை மாதம் கழித்து, சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அனைத்தும் முடிந்த பின்னர் இப்போது இடிப்பதாக கூற காரணம் என்ன?

மத்திய கைலாஷ் பகுதியில் கோவிலை இடிக்காமல் கோவிலுக்கு பின்னால் பாதையை கொண்டு செல்லவில்லையா? ஏன் கோவிலை இடிக்க வேண்டியது தானே? மதுரை மற்றும் பல இடங்களில் சாலை விரிவாக்கத்திற்காக கோவில்களை இடிக்கவில்லையா?

விமான நிலைய விரிவாக்கம்

உளுந்தூர்பேட்டையில் ரெயில்வே மேம்பாலம் வேண்டும், லட்சக்கணக்கான வாகனங்கள் பாதிக்கிறது என்று பல ஆண்டுகளாக கேட்கிறார்கள், அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படவில்லை. மண்டபத்தை இடித்துவிட்டு குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வீடு தரப்போகிறார்களா? வாகனங்கள் செல்லும் தரைவழிப்பாதை தானே, மாற்றி அமைத்தால் என்ன குறைந்துவிடும். கிழக்கு கடற்கரை சாலை பல இடங்களில் வளைந்து செல்லவில்லையா?

மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக பொழிச்சலூரில் இடம் தேவை என்ற போது எதிர்ப்பு கிளம்பியது. அங்கு குடியிருப்பவர்கள் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தான் என்பது தெரியவந்ததும் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். மத்திய அரசு அந்த இடத்தை கேட்கிறது. ஆனால் தமிழக அரசு அதனை கையகப்படுத்தி தரும் திட்டத்தை கைவிட்டு விட்டது.

அதே போல சென்னைக்கு வெளியே துணை நகரம் அமைக்கப்போவதாக கூறினார்கள். தி.மு.க.வின் கூட்டணி கட்சி எதிர்ப்பு தெரிவித்ததும் அதனை கைவிட்டு விட்டார்கள். இவர்களுக்கு தேவை என்றால் ஒன்று, தேவையில்லை என்றால் ஒன்று.

கட்சியை அழிக்க சதி

சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வாங்கினோம். அதைவிட உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் வாக்குகள் வாங்கியிருக்கிறோம். இதனால் விஜயகாந்தை வளரவிடக் கூடாது. கட்சியையே அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மண்டபத்தையும், கட்சி அலுவலகத்தையும் இடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தி.மு.க.வுக்கு அடுத்த படியாக எனது அலுவலகத்துக்கு தான் கூட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக பெரிய மண்டபம் இருக்கிறது. எனவே நம்மைப் போலவே தே.மு.தி.க.வும் கூட்டம் நடத்துவதா என்ற எண்ணம். இந்த கட்டிட இடிப்பு விவகாரம் திட்டமிட்ட சதிச் செயல். தேர்தலுக்கு முன்பே இதை கூறியிருக்கலாமே?

தவறான தகவல்

மதிப்பீடு எவ்வளவு என்று கேட்டார்கள். எவ்வளவு எடுக்கப்போகிறீர்கள் என்று தெரிந்தால் தானே மதிப்பு எவ்வளவு என்று கூறமுடியும். நஷ்டஈடு அதிகப்படுத்தி கேட்டார்கள் என்று டி.ஆர்.பாலு தவறான தகவல்களை கூறியிருக்கிறார். முறையான வரைபடமும், எவ்வளவு பாகத்தை எடுக்கப் போகிறீர்கள் என்றும் தான் கேட்டோம். அதற்கு இதுவரை பதில் இல்லை.

மக்கள் இந்த விவகாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இவற்றை எல்லாம் கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிமன்றம் செல்வீர்களா?

நிருபர் கேள்வி:- அடுத்த நடவடிக்கை என்ன, நீதிமன்றத்தை நாடுவீர்களா?

பதில்:- யாரிடமும் பேசி பயனில்லை. உள்ளாட்சி தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். நீதிமன்றத்தை நாடினோம். என்ன நடந்துவிட்டது.

வண்டிச்சக்கரம் போன்றது

கேள்வி:- சட்டசபையில் இந்த பிரச்சினையை எழுப்புவீர்களா?

பதில்:- சட்டசபையில் பேசி மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது. வங்கியில் கூட கடன் தர மறுத்ததால் என் உழைப்பு மற்றும் மற்றவர்களிடம் கடன் வாங்கி கட்டியது. நான் ஏன் இதனை இழக்க வேண்டும். மத்தியில், மாநிலத்தில், உள்ளாட்சியில் என அனைத்திலும் அவர்கள் இருக்கும் தைரியத்தில் பேசுகிறார்கள். காலம் வண்டிச் சக்கரம் போன்றது. சுழன்று கொண்டே இருக்கும். இப்படியே போய் விடாது.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் சுந்தர்ராஜன், இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி: தினத்தந்தி

Friday, November 10, 2006

தலைப்புகள்-11/10

தினத்தந்தி

* சட்டம்-ஒழுங்கு திருப்தியாக உள்ளது - கருணாநிதி
# தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு திருப்தியாக உள்ளது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

* ஈராக்கில்இருந்து ராணுவம் வாபஸ் ஆகாது - புஷ்
# அமெரிக்க தேர்தலில் எங்கள் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதால் ராணுவத்தை வாபஸ் பெறமாட்டோம் என்று புஷ் தெரிவித்தார்.

* இலங்கையில் ராணுவ படகு மூழ்கடிப்பு
# விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில், இலங்கை ராணுவ படகு மூழ்கடிப்பு. இன்னொரு படகு தீப்பிடித்து எரிகிறது.

* சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவலா?
# விமான நிலையங்களை தகர்க்கப் போவதாக வந்த தகவலையடுத்து சென்னையில் தீவிரவாதிகளின் சதியை முறியடிக்கஆலோசனை.

* புதிய சினிமா பற்றி ரஜினிகாந்த் தகவல்
# ரஜினிகாந்த் ராவணனாக நடிக்கப்போவதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்று ரஜினிகாந்த் கூறினார்.

தினமணி

* இலங்கைத் தமிழர் பிரச்சினை- மத்திய அரசு அணுகுமுறையில் மாற்றம் தேவை: கருணாநிதி
* இலங்கைக்கு மைசூர் பருப்பு, பாசிப்பயறு: மத்திய அரசு முடிவு
* அல்-காய்தா மிரட்டல்: விமான நிலையங்களில் அதிகபட்ச உஷார் நிலை
* 'அமெரிக்க விசா'- இனி 1 வாரத்தில் நேர்காணல்
* ஆஸி.வீரர்களின் நாகரீகமற்ற செயலே அது!- பவார்
* நேபாள அரசு-மாவோயிஸ்டு இடையே அமைதி ஒப்பந்தம்

அமெரிக்க விசா

அமெரிக்க விசா கோரி விண்ணப்பம் அளிப்பவருக்கு இனி 1 வாரத்தில் நேர்காணல்

புதுதில்லி, நவ. 10: அமெரிக்கா செல்ல விரும்புவோர் அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களில் விசா கோரி விண்ணப்பம் அளித்தால் இனி ஒரு வாரத்தில் அவருக்கு நேர்காணல் நடத்தப்படும்.

மேலும் விசா கட்டணம் 30 சதவீதம் குறையும் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் சி முல்போர்ட் தெரிவித்தார்.

தில்லியில் நிருபர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:

அமெரிக்க விசா கோரி விண்ணப்பம் அளிப்பவர்கள் இதுவரை 6 மாதம் வரை காத்திருக்கும் நிலை இருந்தது. தற்போது கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் இனி ஒருவார காலத்துக்குள் அவர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார். இந்த காத்திருப்பு காலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். சீரமைப்பின் இன்னொரு பகுதியாக விசா கட்டணம் வியாழன் முதல் 50 டாலர் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் விசா கட்டணம் பழைய கட்டணத்தில் இருந்து 30 சதவீத அளவுக்கு குறையும் என்றார் அவர்.

செய்தி: தினமணி

Thursday, November 09, 2006

தலைப்புகள்-11/9

* பள்ளி மீது இலங்கை ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் பலி! * மட்டக்களப்பில் தமிழ் அகதிகள் மீது கொடூர தாக்குதல்
# கொழும்பு : இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பு பகுதியில் பள்ளி ஒன்றின் மீது இலங்கை ராணுவத்தினர் நேற்று பீரங்கி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் அந்த பள்ளியில் அகதிகளாக தங்கியிருந்த 40 பேர் கொல்லப்பட்டனர். நுõற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

* மீண்டும் ஆரம்பம் * டில்லியில் சட்ட விரோத கடைகளுக்கு "சீல்' வைப்பது * பலத்த பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
# புதுடில்லி : டில்லியில் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் கடை களுக்கு "சீல்' வைக்கும் பணி, நேற்று மீண்டும் துவங்கியது.டில்லியில் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் 40 ஆயிரம் மேற்பட்ட கடைகளுக்கு "சீல்' வைக்கும் பிரச்னை, பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

* ஜெ., வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் நான்கு மணி நேரத்தில் கைது
# சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டின் முன்புறமுள்ள இரும்பு கதவை இருசக்கர வாகனத்தில் சென்று முட்டித் தள்ளியவர், "மகளின் மருத்துவ செலவுக்கு பணம் தரவில்லை' என்று கூறி அசிங்கமாக திட்டினார். அங்கிருந்த கமாண்டோ போலீசாரிடமிருந்து தப்பியவரை நான்கு மணி நேரத்தில் சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர்.

* அமெரிக்க பார்லி., தேர்தலில் அதிபர் புஷ் கட்சிக்கு அடி * பெருவாரியான இடங்களை அள்ளியது ஜனநாயக கட்சி
# வாஷிங்டன் : அமெரிக்க பார்லிமென்ட் மற்றும் மாகாண கவர்னர் தேர்தல்களில் அதிபர் புஷ் கட்சியான குடியரசு கட்சிக்கு பெருத்த அடி விழுந்துள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 12 ஆண்டுகளுக்கு பிறகு பார்லிமென்ட் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது. மாகாண கவர்னர் பதவிகளிலும் பெரும்பான்மையானவை இக்கட்சி வசமே வந்து விட்டன. செனட் சபையில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

* இந்தியாவின் நான்கு பெருநகர ரயில் நிலையங்கள் உலகத் தரம் வாய்ந்த நிலையங்களாக மாற்றப்படும் : லாலு அறிவிப்பு
# "உலகத்தரம் வாய்ந்த ரயில்வே நிலையமாக சென்னை, மும்பை உட்பட நான்கு பெருநகர ரயில்வே நிலையங்களும் மாற்றப்படும் 'என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.

* நேபாள அரசு மாவோ.,க்கள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து * இடைக்கால அரசு அமைக்கவும், தேர்தல் நடத்தவும் இருதரப்பும் முடிவு
# காத்மாண்டு : நேபாள அரசுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நீண்ட இழுபறிக்கு பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து கடந்த பத்தாண்டுகளாக வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்த நேபாள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வரும் டிச., 1ம் தேதிக்குள் இடைக்கால அரசு அமைக்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பவாரிடம் "ஸாரி' கேட்க தயார்! * பாண்டிங் பகிரங்க அறிவிப்பு
# சிட்னி : சரத் பவார் விவகாரத்தில் புதிய திருப்பமாக ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்பகிரங்க மன்னிப்பு கேட்க முன் வந்துள்ளார். தனது செயல் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், சரத் பவார் உள்ளிட்ட இந்திய நிர்வாகிகளிடம் வருத்தம் தெரிவிக்க தயாராக இருப்பதாக பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 08, 2006

காளிமுத்து காலமானார்

அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து மரணம்

நவம்பர் 08, 2006

சென்னை: முன்னாள் சபாநாயகரும், அதிமுக அவைத் தலைவருமான கா.காளிமுத்து இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

கமுதி அருகே உள்ள ராமுத்தேவன் பட்டியில் பிறந்த காளிமுத்துவுக்கு நிர்மலா, மனோகரி என இரு மனைவியர். இவர்களில் நிர்மலா சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். அவர் இறந்ததிலிருந்தே காளிமுத்து மனம் உடைந்து காணப்பட்டார். அதுவே அவரது உடல் நலிவுக்கும் முக்கியக் காரணமானது.

சில மாதங்களுக்கு முன் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் உடல் நிலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். இதைத் தொடர்ந்து சட்டசபைக்கு தேர்தல் வந்தபோது மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக அவரை ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக காளி¬த்துவால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

இதைத் தொடர்ந்து அவர் தொடர் ஓய்வில் இருந்து வந்தார். இந் நிலையில் சமீபத்தில் காளிமுத்துவுக்கு உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரையில் சிகிச்சை மேற்கொண்ட அவர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கவலைக்கிடமான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காளிமுத்து மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.

காளிமுத்து மறைந்த செய்தியை அறிந்ததும் அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்தனர். காளிமுத்துவின் உடல் முதலில் செனடாப் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அண்ணா நகரில் உள்ள இன்னொரு வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

காளிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான ராமுத்தேவன் பட்டிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி, ஜெ இரங்கல்:

காளிமுத்துவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கப் பற்றாளராக விளங்கியவர் காளிமுத்து. பின்னர் மொழிப் போரில் ஈடுபட்டு தியாகியாக மாறினார். எழுத்து பேச்சு ஆகியவற்றில் திறம் பெற்று விளங்கியவர்.

அமைச்சர், எம்.பி, சபாநாயகர் ஆகிய பதவிகளை ஏற்று செயல்பட்டவர். நட்புக்கும், நல்ல தோழமைக்கும் ஏற்றவராக அவர் விளங்கினார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த துயரத்தையும், இரங்கல்களையும் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

காளிமுத்துவின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை

மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து 1942ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் (இப்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள) ராமுத்தேவன் பட்டியில் பிறந்தவர். இவரது தந்தை பெயரும் காளிமுத்துதான்.

எம்.ஏ., பி.எச்.டி படித்துள்ள காளிமுத்து மாணவப் பருவத்திலேயே சிறந்த பேச்சாளராக விளங்கினார்.

பேச்சுத் திறமை காரணமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் மேடை மணி என்று பாராட்டப்பட்டவர்.

ஆரம்பத்தில் இருந்தே திராவிட இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த காளிமுத்து, இந்தி எதிர்ப்புப் போரிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் திமுகவில் இருந்த காளிமுத்து முதல் முறையாக 1971ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்தபோது அதில் இணைந்தார்.

1977, 1980 ஆகிய தேர்தல்களில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 1984ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆனார்.

எம்.ஜி.ஆரின் மிக நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த காளிமுத்துவை அமைச்சராக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். அவரது அமைச்சரவையில் நிரந்தர அமைச்சராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் உள்ளாட்சித் தறை, வேளாண்மைத் துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றினார். அதிமுக துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜானகி அணியில் இருந்த காளிமுத்து பின்னர் திமுகவுக்குத் திரும்பினார். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கடலாடி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

அந்தத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். கடலாடியில் காளிமுத்துவுக்காக பிரச்சாரம் செய்த கருணாநிதி, ''தம்பி நீ கடலாடி வா.. துறைமுகத்தில் காத்திருக்கிறேன்'' என்று பேசினார். ஆனால், காளிமுத்து தோற்றார்.

திமுகவில் சில காலம் இருந்த காளிமுத்து பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு மாறினார்.

இம்முறை காளிமுத்துவுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் கொடுத்து சபாநாயகர் பொறுப்பில் அமர வைத்தார் ஜெயலலிதா. 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

2001ம் ஆண்டு முதல் 2006 வரை அவர் சபாநாயகர் பொறுப்பை வகித்தார். சட்டசபை ஆயுட்காலம் மு¬டிவடையும் தருவாயில் அப்பொறுப்பிலிருந்து காளிமுத்துவை விலக்கி அதிமுகவின் அவைத் தலைவராக நியமித்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.

அதிமுக ஆட்சியை இழந்த பின்னர் காளிமுத்து மீது இரண்டு வழக்குகளை ஊழல் தடுப்புப் போலீஸார் பதிவு செய்தனர். எம்.எல்.ஏ. விடுதி வளாகத்தில் உள்ள இரண்டு கேண்டீன்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான வழக்குகள் அவை.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியவாதியாகவும் தமிழ் ஆர்வலராகவும் திகழ்ந்தவர் காளிமுத்து. மிகச் சிறந்த பேச்சாளர். அவரது பேச்சுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருந்தது. மேலும், உதாரணங்களைச் சொல்லிப் பேசுவதிலும் வல்லவர்.

''கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது'', ''கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் பிடிப்பானா'' என்பது உள்ளிட்ட அவர் சொல்லிய பல உதாரணங்கள் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகப் பிரியரான காளிமுத்து நூல்களைப் படிப்பதையே முக்கியப் பொழுதுபோக்காக கொண்டவர். அவரது வீட்டிலும் மிகப் பெரிய நூலகம் உள்ளது. 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

செய்தி: தட்ஸ்தமிழ்

தலைப்புகள்-11/8

தினமணி

* கடைகளை மூடும் நடவடிக்கையை தடுக்கக் கோரி பிரதமரை சந்திக்க தில்லி கவுன்சிலர்கள் முடிவு
* பிப்.22 வரை "எய்ம்ஸ்' இயக்குநராக வேணுகோபால் நீடிக்க தடையில்லை
* ஜெஸிகா லால் கொலை வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றமுடியாது: தில்லி உயர்நீதிமன்றம்
* ரயில் நிலையங்களில் "காய்கறி சாலட்': லாலுவின் புதிய அறிமுகம்
* ஐசிசி தரப் பட்டியலில் தோனிக்கு 6-வது இடம்
* ஜப்பானில் சூறாவளி: 9 பேர் சாவு
* புதுச்சேரி: அதிகரித்து வரும் ஏற்றுமதி பொருள்கள்
* பெங்களூர்: தீவிரவாதிகள் உடுருவல்: சிவராஜ் பாட்டீலுடன் குமாரசாமி ஆலோசனை
* இலங்கை: பெரும் தாக்குதல் நடத்த புலிகள் ஆயத்தம்: ராணுவம் புகார்
* சதாமைத் தூக்கிலிட்டால் தூதரகங்களை தாக்குவோம்: பாத் கட்சி மிரட்டல்
* தென் மாவட்டங்களில் பலத்த மழை- ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
* டிசம்பர் 4-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
* மீனவர்கள் நலனில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை: ஜெ. குற்றச்சாட்டு
* இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டும்: விஜயகாந்த்
* சரத்குமார் தனிக்கட்சி தொடங்க ரசிகர்கள் கோரிக்கை