Monday, March 26, 2007

கொழும்பு விமானப்படை தளத்தில் விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்

கொழும்பு விமானபடை தளம் மீது விடுதலைப்புலிகள் விமானம் மூலம் குண்டுவீச்சு- 3 பேர் பலி, ஹெலிகாப்டர்கள் நாசம்

கொழும்பு, மார்ச். 26-

இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்து வரும் உள்நாட்டு சண்டையில் கடந்த ஆண்டு வரை இரு தரப்பினரும் தரைவழி மோதல்களிலும் கடலிலும் தான் கவனம் செலுத்தி வந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சிங்களராணுவம் விமானப்படையை பயன் படுத்தி தமிழர்களின் கிரா மங்கள் மீது குண்டுகளை வீசி வருகிறது. இதில் பல கிரா மங்கள் அழிந்து விட்டன.

பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் சொந்த கிராமங்களை காலி செய்து வேறு இடங்களுக்கு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி சிங்கள ராணுவம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் முன்னேறி வருகிறது. குறிப்பாக கிபீர் வகை குட்டி விமானம் மூலம் சிங் களர்கள் நடத்தும் தாக்குதல் கொடூரமாக உள்ளது.

சிங்களர்களின் விமானப் படை தாக்குதல் அத்துமீறி போய் கொண்டிருப்பதால் விடுதலைப்புலிகள் மிகப் பெரிய பதிலடி கொடுப் பார் கள் என்று உளவுத்துறையி னர் கூறி வந்தனர். அதை உறு திப்படுத்துவது போல இன்று அதிகாலை விடுதலைப்புலி கள் முதன்முதலாக தங்கள் விமானப்படையைப் பயன் படுத்தி அதிரடி தாக்கு தலை நடத்தினார்கள். கொழும்பு அருகே காட்டுநாயக்காவில் உள்ள சிங்கள விமானப்படை தலைமை தளம் மீது இந்த தாக்குதல் நடந்தது.

நள்ளிரவு 12.45 மணிக்கு விடுதலைப்புலிகளின் 2 இலகு ரக விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தின. அந்த 2 விமானங்களும் இலங்கை விமானப்படை தளத்தை குறி வைத்து குண்டு மழை பொழிந்தன. பிறகு அந்த 2விமானங்களும் சக்தி வாய்ந்த 4 குண்டுகளை வீசி அதிரடி தாக்குதலை மேற்கொண்டன.

தாக்குதலுகுள்ளான விமா னப்படை தளத்தில் தான் ரஷிய தயாரிப்பான `மிக்'ரக சண்டை விமானங்களும் இஸ்ரேல் தயாரிப்பான கிபிர் ரக விமானங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. ஈழத்தமி ழர்கள் மீது குண்டு வீச இந்த விமானங்களைத்தான் இலங்கை பயன்படுத்தி வரு கிறது. அந்த விமானங்களை குறி வைத்து விடுதலைப்புலிகள் விமானங்களில் இருந்து குண் டுகளை வீசினார்கள்.

இதில் மிக், கிபிர் சண்டை விமானங்கள் கடும் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலின் போது விமானப்படை வீரர்கள் 3பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நீர்கொழும்பு மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

வான்புலிகளின் எதிர் பாராத தாக்குதலால் இலங்கை விமானப்படை வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மற்றொரு பகுதி யில்தான் கொழும்பு சர்வதேச விமான நிலையம் உள்ளது. வான்புலிகள் மீண்டும் தாக் கக்கூடும் என்ற பயத்தில் உட னடியாக கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டது.

இன்று காலை 8.30 மணி வரை விமானநிலையம் மூடப்பட்டிருந்தது. இதனால் கொழும்புக்கு வந்த 3 வெளிநாட்டு விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப் பட்டன. 8.30 மணிக்கு பிறகு கொழும்பு விமானநிலையம் திறக்கப்பட்டாலும் அதிகாரிகளும், ஊழியர்களும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

வான்புலிகளின் அதிரடி தாக்குதல் காரணமாககாட்டு நாயக்க ப குதி முழுவதும் இன்றுகாலை வரை புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் கொழும்பில் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கும் இது கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வான்புலிகள் தாக்குதல் நடத்தியதை சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் புலிகளின் செய்தித் தொடர்பாளர் தமிழ்ச்செல் வன் உறுதிப்படுத்தினார். காட்டு நாயக்க விமானப்படை தளத்தில் பார்க்கிங் பகுதியில் 4 குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவித்தார்.

விடுதலைப்புலி தளபதிகளில் ஒருவரான ராசையா இளந்திரையன் கூறியதாவது:-

வான்புலிகளின் 2 விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. காட்டு நாயக்க தலைமை முகாமை அழித்து விட்டு 2 விமானங்களும் பாதுகாப்பாக வன்னிபடை தளத்துக்கு திரும்பி வந்து விட்டன.

வான்புலிகள் தாக்குதலில் கிபிர், மிக் ரக விமானங்களுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளது. எதிர் காலத்திலும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும். வான்புலிகள் முதன் முதலாக இன்றுதான் தாக்குதலை தொடங்கி உள்ளனர். எமது மக்களை காப்பாற்றுவதற்காக, இலங்கை விமானப்படையை அழிக்கவே இன்றைய வான்தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்வாறு ராசையா இளந்திரையன் கூறினார்.

வான்புலிகள் தாக்குதலை ராணுவ செய்தித் தொடர்பாளர் அஜந்தாசில்வா ஒத்துக்கொண்டார்.

அவர் கூறியதாவது:-

வான்புலிகள் தாக்குதல் நடத்தியதும் வான் எதிர்ப்பு சாதனங்கள் இயங்கின. உடனே புலிகளின் 2 விமானங்களும் தப்பிச் சென்று விட்டன. எங்களது வான்படை மூலம் புலிகளின் விமானங்களை தேடி வருகிறோம்.

அவர்கள் நடத்திய குண்டு வீச்சு குறி தப்பி விட்டது. எனவே எங்களுக்கு அதிக சேதம் இல்லை. விமானப்படை தளத்துக்குள் எரிந்த தீயை உடனே அணைத்து விட்டோம். அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

வான்தாக்குதல் நடத் தப்பட்டதும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வான் தாக்குதல்கள் தொடரும் என விடுதலைப்புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கொழும் பின் அனைத்துப் பகுதிகளிலும் இரவுநேரங்களில் மின் விளக்குகளை எரிய விட வேண்டாம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தி இருக் கிறோம்.

இவ்வாறு அஜந்தாசில்வா கூறினார்.

Wednesday, March 21, 2007

பாப்உல்மர் மரணத்தில் சந்தேகம்

பாகிஸ்தான் பயிற்சியாளர் விஷம் கொடுத்து கொலையா?
விசாரணைக்காக பாகிஸ்தான் அணி ஜமைக்காவைவிட்டு வெளியேற தடை


ஜமைக்கா, மார்ச்.21-

பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி ஜமைக்காவில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் படுதோல்வி

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய நாடுகளிடம் அடுத்தடுத்து படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை போட்டிகளில் இருந்தே வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமான முறையில் இறந்தார்.

ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் உள்ள ஓட்டல் அறையில் அவர் வாந்தி எடுத்தும், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையிலும் மயங்கி கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மரணம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சந்தேகங்கள்

பாப் உல்மர் மர்ம சாவு குறித்து ஜமைக்கா போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் சந்தேகத்திற்கிடமான பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருடன் சாப்பிடும் பாப் உல்மர், சம்பவத்தன்று அவர்களுடன் சாப்பிடவில்லை என்று தெரிய வந்துள்ளது. அவர் மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.

பாப் உல்மர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் சென்றால் 15 நிமிடத்தில் ஆஸ்பத்திரியை அடைந்து விடலாம். ஆனால் அவரை ஒரு மணி நேரத்துக்கு பிறகே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அதுவரை அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், அவரது அறையில் ரத்தக்கறை படிந்திருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வாய்ப்பை ஜமைக்கா போலீசாரும் மறுக்க வில்லை. சம்பவத்தன்று பாப் உல்மரை சந்தித்தவர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷம் கொடுத்து கொலையா?

சூதாட்டக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பாகிஸ்தான் அணி வீரர்கள், வேண்டுமென்றே தோற்றதாகவும், இது பாப் உல்மருக்கு தெரிய வந்ததால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் அணியின் தோல்வியை தாளமுடியாமல், அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்றும் பல்வேறு ïகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பிரேத பரிசோதனை தாமதம்

இருப்பினும், பாப் உல்மர் சாவுக்கான காரணம், பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகுதான், உறுதியாக தெரிய வரும். கிங்ஸ்டன் நகரில் அமலில் உள்ள உள்ளூர் சட்டப்படி, மரணம் அடைந்தவரின் குடும்பத்தார் ஒப்புதலுடன்தான் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். ஆனால் பாப் உல்மரின் குடும்பத்தினர் தென்ஆப்பிரிக்காவில் கேப் டவுன் நகரில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்களால் உரிய நேரத்தில் வர இயலாத சூழ்நிலை உள்ளது.

எனவே, தாங்கள் வராமலேயே பிரேத பரிசோதனையை நடத்த ஜமைக்கா அதிகாரிகளுக்கு பாப் உல்மர் குடும்பத்தினர் அதிகாரம் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனையை கூடவே இருந்து கவனித்து, பாப் உல்மர் உடலை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கும்படி, பாகிஸ்தான் அணியின் மற்றொரு பயிற்சியாளரான முரே ஸ்டீவன்சனை பாப் உல்மர் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

பாப் உல்மர் குடும்பத்தினரை எதிர்பார்த்து காத்திருந்ததால், பிரேத பரிசோதனை தாமதமாகவே தொடங்கி உள்ளது. அதன் அறிக்கை இன்று வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் அணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்பிறகுதான், பாப் உல்மர் மரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழும் என்று தெரிகிறது.

வெளியேற தடை

பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. அதன்பிறகு நாளை பாகிஸ்தான் அணியினர் வெஸ்ட் இண்டீசில் இருந்து தாயகம் திரும்ப திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பாப் உல்மர் மரணம் குறித்த மர்மம் தீரும்வரை ஜமைக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஜமைக்கா போலீசார், பாகிஸ்தான் அணியினருக்கு உத்தரவிட்டுள்ளனர். அதனால் தாயகம் திரும்பும் திட்டத்தை சனிக்கிழமைக்கு பாகிஸ்தான் அணியினர் தள்ளி வைத்துள்ளனர்.

*தினத்தந்தி

-oOo-

பாப் உல்மர் மரணத்தில் நீடிக்கிறது மர்மம் பிரேத பரிசேதனை அறிக்கையில் போலீசார் சந்தேகம்

ஜமைக்கா : பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் உல்மரின் திடீர் மரணத்தில் மர்மம் இன்னமும் தொடர்கிறது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர் .இந்நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அவரை கடைசியாக சந்தித்தவர்கள் விசாரிக்கப்படுகின்றனர். உல்மர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து 15 நிமிட பயணத்தில் தான் ஆஸ்பத்திரி இருக்கிறது. ஆனால் அறையில் மயங்கிக் கிடந்த உல்மர், ஒரு மணி நேரம் கழித்து தான் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்விஷயமும் பாத்ரூமில் உறைந்து கிடந்த ரத்தமும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன. ஒருவேளை உல்மர் விஷம் கொடுக்கப்பட்டிருந்தால் அதில் கிரிக்கெட் சூதாட்ட புக்கிகளுடன் தொடர்பு கொண்டுள்ள பாக்., வீரர்களுக்கு நிச்சயம் தொடர்பு இருக்கும் என்றும், இது உறுதிப்படுத்தப்படும் வரை பாக்., வீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் அங்கு பிரச்னை கிளம்பியுள்ளது. நாளை (மார்ச் 22) வெ.இண்டீசைவிட்டு பாகிஸ்தான் அணி கிளம்புவதாக இருந்தது. போலீஸ் விசாரணையால் மார்ச் 24ம் தேதிதான் அந்த அணி புறப்பட முடியும் என தெரிகிறது.

*தினமலர்.

Friday, March 16, 2007

உச்சநீதிமன்ற நீதிபதி அழுகை!

உச்சநீதிமன்றத்தில் கதறி அழுத ஏ.ஆர்.லட்சுமணன்!

மார்ச் 16, 2007

டெல்லி: உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணனுக்கு மிகவும் அநாகரீகமான வகையில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதை உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்த லட்சுமணன், கண்ணீர் விட்டுக் கதறி அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் சிங் யாதவ் ஆகியோர் ரூ. 5,00 கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து முலாயம் சிங் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், முலாயம் சிங் மீதான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணன் இன்று நீதிமன்றத்தில் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.

தனக்கு இந்த வழக்கு தொடர்பாக ஒரு அனாமதேய கடிதம் வந்துள்ளது. எனது நீதிமன்ற வாழ்க்கையில் இப்படி ஒரு மோசமான மிரட்டலை நான் சந்தித்ததில்லை என்று கூறிய லட்சுமணன் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட லட்சுமணன், இந்த வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை. இதுகுறித்து தலைமை நீதிபதியிடம் தெரிவித்து விட்டேன் என்று கூறி விட்டு எழுந்து சென்றார்.

இன்னும் ஐந்து நாளில் லட்சுமணன் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் முலாயம் சிங் யாதவ் தரப்பிலிருந்து லட்சுமணனுக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறி அவர் நீதிமன்றத்தில் அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு என்ன மாதிரியான மிரட்டல் வந்தது என்பதைத் தெரிவிக்க லட்சுமணன் மறுத்து விட்டார்.

Thursday, March 15, 2007

சத்தீஸ்கரில் 50 போலீசார் கொலை

சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 50 போலீசார் பலி:
வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிசூடு

ராய்ப்பூர், மார்ச். 15-

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் ராணிபோட்லி எனும் காட்டுப்பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது.

அங்கு சத்தீஸ்கர் ஆயுதப்படை போலீஸ் பிரிவைச் சேர்ந்த 23 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு துணையாக 55 சிறப்பு போலீஸ் அதிகாரி கள் அங்கு இருந்தனர். பிஜப்பூர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளை ஒடுக்க இவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

நேற்றிரவு2.15 மணிக்கு நூற்றுக்கணக்கான நக்சலைட் டுக்கள் அந்த போலீஸ் நிலையத்தை சூழ்ந்தனர். போலீசார் உஷராவதற்குள் நக்சலைட்டுக்கள் நாலாபுறமும் நின்று அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். போலீஸ் நிலையத்துக்குள் கை எறி குண்டுகளை சரமாரியாக வீசினார்கள்.

பெட்ரோல் வெடிகுண்டுகளையும் வீசி எறிந்து அந்த போலீஸ்நிலையத்தை தகர்த்தனர். பிறகு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தனர்.

நக்சலைட்டுக்களின் இëந்த திடீர் அதிரடி தாக்குதலில் சத்தீஸ்கர் மாநிலஆயுதப்படை போலீசார் 50 பேர் உயிர் இழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

தாக்குதல் நடத்தி முடித்த பிறகு நக்சலைட்டுக்கள் அனை வரும் அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.போகும் போது அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்த அனைத்து ஆயுதங் களையும் அள்ளிச் சென்று விட்டனர்.

ஆயுதங்களை கைப்பற்றி விட்டு வெளியில் வந்ததும் நக்சலைட்டுகள் போலீஸ் நிலையத்தின் உள்ளேயும், போலீஸ் நிலையத்தை சுற்றியும் கண்ணி வெடிகளை வைத்து அவற்றை ரிமோட் மூலம் இயக்கி வெடிக்க வைத்தனர். இந்த கண்ணி வெடி தாக்குதலில் போலீஸ் நிலையம் தகர்ந்தது.

அதன் சுற்றுப்புறங்களும் கண்ணி வெடிகள் வெடித்ததால் போர்க்களம் போல மாறியது. படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்த போலீசார் கண்ணி வெடி தாக்குதல் காரணமாக போலீஸ் நிலையத்துக்குள்ளேயே பிணமானார்கள்.

சம்பவ இடத்துக்கு மத்திய போலீஸ் படை வீரர்கள் விரைந்தனர். ராணிபோட்லி போலீஸ் நிலையத்தின் இடிபாடுகளை அகற்றி பிணங்களை மீட்டனர். அங்கு வெடிக்காத சில கண்ணி வெடிகள் கிடந்தன. வெடி குண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அந்த கண்ணி வெடிகள் செயல் இழக்க செய்யப்பட்டன.

ராணிபோட்லி காட்டுப் பகுதியில் போலீஸ்காரர்களின் உடல்கள் சில இடங்களில் சிதறி கிடக்கின்றன. அவற்றை கணக்கிட்டு வருவதாகவும் அது முடிந்த பிறகே பலியான போலீசாரின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு என தெரிய வரும் என்று பிஜப்பூர் மாவட்ட காட்டிலாகா போலீஸ் ஜ.ஜி. ஆர்.கே.விஜ்.கூறினார்.

நக்சலைட்டுகளுக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதில் இருந்து பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுக்களின் வெறியாட்டம் அதிகரித்து விட்டது. போலீசாரை மட்டுமின்றி பொது மக்களையும் அவர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் நக்சலைட்டுகள் 1187 தடவை தாக்குதல் நடத்தி இருக் கிறார்கள். இதில் 676 பேர் கொல்லப்பட்டனர். இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை இல்லாதபடி அதிக போலீசார் பலியாகி விட்டனர்.

Tuesday, March 13, 2007

திமுக-கம்யூ நாடாளுமன்றத்தில் மோதல்

லோக்சபாவில் மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள்... ரகளை! *
மந்திரி டி.ஆர்.பாலுவை தாக்க பாய்ந்தனர் *
சென்னை கடல்சார் பல்கலைக்கு எதிர்ப்பு

சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய முற்பட்டபோது மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் பயங்கர ரகளையில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை தாக்க முற்பட்டு, அவர் கையில் இருந்த மசோதா ஆவணத்தைப் பறிக்க முயன்றனர்.

பாலுவை காப்பாற்றும் வகையில் மற்ற தமிழக எம்.பி.,க்கள் அரண் அமைத்ததால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம் அமைக்க, மத்திய அமைச்சரவையில் கடந்த ஆண்டே விவாதிக்கப்பட்டது. விவாதம் நடந்த போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமைச்சர் சரத்பவார் தவிர வேறு எந்த அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, கடந்த டிசம்பர் 18ம் தேதி, மத்திய அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான மசோதாவை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. லோக்சபாவில் எடுத்துக் கொள்ளப்படும் விவாதங்கள் அனைத்துமே, விவாதம் செய்வதற்கான முதல் வாரமே ஆலோசனை செய்யப்பட்டு, அலுவல் குறிப்பேட்டில் எழுதப்படுவது வழக்கம். இதேபோல், கடந்த வாரம் ஆலோசனை நடந்தபோது "கடல்சார் பல்கலைக் கழகத்தை சென்னையில் அமைப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்' என்று கூறப்பட்டு, அலுவல் குறிப்பேட்டில் எழுதப்பட்டது. அப்போதும் எந்த எம்.பி.,க்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அலுவல் குறிப்பேட்டில் கூறியபடி, லோக்சபாவில் இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்காக நேற்று நண்பகல் 12 மணியவில் அமைச்சர் பாலு எழுந்தார். அப்போது, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "திபுதிபு'வென சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடி வந்தனர். சபையில் திடீரென கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதனால் சபை 10 நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மதியம் 12.15 மணிக்கு சபை கூடியதும், மசோதா குறித்து அமைச்சர் பாலு பேச முற்பட்டார். அப்போது, மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் அனில் பாசு, சுமித் லாகிரி ஆகியோர் பின் வரிசையில் இருந்து படு வேகமாக ஓடி வந்தனர். முன் வரிசையில் நின்று கொண்டிருந்த பாலுவை நோக்கி ஆவேசமாக கத்தியபடியே ஓடி வந்து, பாலுவின் கைகளில் இருந்த மசோதா ஆவணங்களை பறிக்க முற்பட்டனர். இவர்கள் இருவரோடு சேர்ந்து மற்ற மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களும் பாலுவை தாக்க முயன்றனர். அப்போது, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம், அரண் போல கைகளை அகற்றி நின்று பாலுவைப் பாதுகாத்தார். மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள், பழனி மாணிக்கத்தை தள்ளி விட்டு பாலுவை நெருங்க முயற்சி செய்தனர். இதற்குள் தங்கபாலு ஓடி வந்து எம்.பி.,க்களை அப்புறப்படுத்தினார். தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் அங்கே கூடி, மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களை கடுமையாக எச்சரித்தனர். இரு தரப்பும் ஒருவரையொருவர் எதிர்த்து ஆவேசமாக வாக்குவாதம் செய்யவே, சபையை ஒத்தி வைப்பதாக கூறிவிட்டு சபாநாயகர் எழுந்து சென்று விட்டார். அதை கவனிக்காத மேற்கு வங்க எம்.பி.,க்களும், தமிழக எம்.பி.,க்களும் அவையில் ஒருவொரையொருவர் முட்டித் தள்ளத் துவங்கிய நேரத்தில், சபை பாதுகாவலர்கள் வேகமாக உள்ளே நுழைந்து, எம்.பி.,க்களை விலக்க முயன்றனர். மூத்த அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மற்றும் சிவராஜ்பாட்டீல் ஆகியோர் எம்.பி.,க்களை சமாதானப்படுத்தினர். அரைமணி நேரத்திற்கு பின், சபையில் அமைதி திரும்பியது.

காலை நடந்த அமளிக்கு பிறகு மதியம் 2.30 மணிக்கு லோக்சபா மீண்டும் கூடியது. அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த எம்.பி., பாசுதேவ் ஆச்சார்யா எழுந்து ஒரு அறிக்கை வாசித்தார். அவர் கூறியதாவது: இன்று (நேற்று) காலையில் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எங்கள் எம்.பி.,க்கள் சிலர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டதால் சம்பவம் நடந்து விட்டது. சபாநாயகர் இருக்கை அருகே வந்து விட்டனர். இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கட்சி சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நடவடிக்கையினால் சபையின் கண்ணியத்திற்கும், சபாநாயகர் இருக்கைக்கும் அவமரியாதை ஏற்பட்டிருந்தால் அதற்கும் வருந்துகிறேன். இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதால் எங்களது உணர்வுகள் காயப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசு இவ்விஷயத்தில் உரிய கவனம் செலுத்தும் என நம்புகிறேன். இவ்வாறு பாசுதேவ் ஆச்சார்யா கூறினார்.

சபை முன்னவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது: மதியம் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டால், அது குறித்து தங்களது கருத்தை தெரிவிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன. மசோதா அறிமுகம் ஆன பின் பார்லிமென்ட் நிலைக்குழு போன்றவற்றிற்கு அது செல்லும். அப்போது தங்களது எதிர்ப்பையும், விமர்சனத்தையும் தெரிவிக்க வாய்ப்புள்ளது. அதை விட்டு விட்டு சபையிலேயே இவ்வாறு நடந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் அத்வானி பேசினார். அதன்பின் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். இத்துடன் சபையில் பிரச்னை முடிவுக்கு வந்தது. தும்பை விட்டு வாலை பிடித்த கதை மும்பை, கோல்கட்டா மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களிலும் கடல் சார் கல்வி மையங்கள் உள்ளன. சென்னையில் "துறைமுக நிர்வாக கல்வி மையம்' உள்ளது. இவற்றை ஒருங்கிணைத்து கடல்சார் பல்கலைக் கழகம் அமைப்பது எனவும், அதை சென்னையில் அமைப்பது எனவும் அமைச்சர் பாலு முடிவு செய்தார். இந்த விவரத்தை 200506ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிலேயே நிதியமைச்சர் சிதம்பரம் அறிவிப்பு செய்திருந்திருந்தார். அதே ஆண்டு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்காக இந்த திட்டம் சென்றபோது அங்கு மகாராஷ்டிரா அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சரத்பவார் தலைமையிலான குழு, மும்பையில் தான் இந்த பல்கலைக் கழகம் அமைக்க வேண்டுமென குரல் எழுப்பியது. அப்போது பாலு, "அதற்கு தேவையான நிலத்தை தாருங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை' என்றார். நிலம் அளிக்க முடியாத நிலையை ஒப்புக் கொண்ட சரத்பவார், சென்னையிலேயே அமைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்தார். இதன் பின்னர் மத்திய அமைச்சரவையில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. ஜனாதிபதி உரையிலும் இவ்விஷயம் இடம்பெற்றது. இவ்வளவு தடைகளையும் கடந்து வந்த பின்னரே, கடல்சார் பல்கலைக் கழக மசோதாவை அமைச்சர் பாலு லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய முயன்றார். ஆனால் முன்னர் எந்த இடத்திலும் எதிர்ப்பு தெரிவிக்காத மார்க்., எம்.பி.,க்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தது, "தும்பை விட்டு வாலை பிடித்த கதை' ஆகி விட்டது.

நடப்பது "சிவில் வார்': அத்வானி வர்ணனை லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் அத்வானி பேசுகையில்,""இந்த சம்பவம் நடந்த போது நான் சபையில் இல்லை. சபையில் என்ன நடந்திருந்தாலும் அது மிகவும் துரதிர்ஷ்டவமானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள் "சிவில் வார்' (உள்நாட்டுக் குழப்பம்) உள்ளது. இந்த சூழ்நிலை முன் எப்போதும் இருந்ததில்லை. ஆளும் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் அதை அமைச்சரவை கூட்டத்திலேயே சரி செய்திருக்க வேண்டும். அமைச்சரவையில் ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்ட மசோதா இது. ஆனால் பார்லிமென்ட்டில் தாக்கலாகும் போது இப்படி நடக்கிறது என்றால் மத்திய அரசின் நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளதையே காட்டுகிறது. சபைக்குள் பாதுகாவலர்கள் வந்து சமாதானப்படுத்துவது முன்னெப்போதும் நடந்ததில்லை. வழக்கமாக ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே சண்டை நடப்பது வழக்கம். ஆனால் ஆளும் கூட்டணிக்குள்ளேயே சண்டை நடப்பது கேவலமாக உள்ளது. கூட்டணி தர்மத்தை இந்த அரசு மீறியுள்ளதையே காட்டுகிறது. இந்த கூட்டணி அரசை அவர்களே முடித்துக் கொள்வர்' என்று கூறினார். அத்வானியின் பேச்சுக்கு இடதுசாரி கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க.,வினர் அமைதி காத்தனர். வருத்தம் தெரிவித்த சபாநாயகர் லோக்சபாவில் நேற்று அமைச்சர் பாலுவை தாக்க முயன்ற சம்பவம் நடந்த பின்னர், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அறைக்கு தமிழக எம்.பி.,க்கள் விரைந்தனர். அவர்களிடம் பேசிய சபாநாயகர் நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார். இதன் பிறகு மார்க்சிஸ்ட் கட்சி மூத்த எம்.பி.,க்கள் பாசுதேவ் ஆச்சார்யா, ரூப்சந்த் பால் ஆகியோர் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Wednesday, February 28, 2007

பட்ஜெட்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு

மத்திய பட்ஜெட் தாக்கல்:
வருமானவரி உச்சவரம்பு உயர்வு

புதுடெல்லி, பிப். 28-

2007-08 ஆம் ஆண்டுக்கான மத்திய பட் ஜெட்டை நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் கூறப்பட்டி ருப்பதாவது:-

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2006-07-ல் 9.2 ஆக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இது சராசரியாக 8.6 சதவீதம் இருந்தது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11.3 சதவீதமாக உள்ளது.

சேமிப்பு விகிதம் 32.4 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 33.8 சதவீதமாகவும் தொடர்ந்து நீடிக்கும். 2007-ம் நிதி ஆண்டில் சராசரி பண வீக்க விகிதம் 5.2 முதல் 5.4 சதவீதம் வரையில் இருக்கும். பணவீக்கம் கட்டுப்படுத்தப் படும்.

2006-07 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் வங்கிக்கடன் விகிதம் 29 சதவீதமாக உயர்ந்ததது. கோதுமை, அரிசி தொடர்பாக எந்த புதிய ஒப்பந்தமும் செய்யப்பட மாட்டாது. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசன வசதி செய்யப்படும்.

ஊரகப்பகுதிகளில் தொலைபேசியை கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 54 கிராமங் களில் போன் வசதி செய்யப் பட்டுள்ளது. உடல் நலத்துக்கான நிதிஒதுக் கீடு 21.9 சதவீதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

கல்விக்கு 34.2 சதவீதமும் கூடுதல் நிதி ஒதுக்கீடு நடப்பாண் டில் கூடுதலாக 2 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள். 5 லட்சம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

மேல்நிலைப்பள்ளி கல்விக் கான உதவித்தொகை ரூ. 1837 கோடியில் இருந்து ரூ.3794 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.4680 கோடியில் இருந்து ரூ.5850 கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் புதிதாக 15 லட்சம் வீடுகள் கட்டப்படும். தேசிய ஊரக சுகாதார திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8207 கோடியில் இருந்து ரூ.9947 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத் துக்கு ரூ. 969 கோடி நிதிஒதுக்கப் படுகிறது.

நாடெங்கும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்து பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதை தடுக்க தேசிய அளவில் புதிய ஸ்காலர்ஷிப் திட்டம் அமல் படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் படிப்பைத்தொடர தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

போலியோவை முற்றிலு மாக விரட்ட ரூ.1290 கோடி வழங்கப்படும். உத்தர பிரதேசத்தில் 20 மாவட்டங் களிலும், பீகாரில் 10 மாவட்டங்களிலும் போலியோ ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.

பொது வினியோக முறை கம்ப்ïட்டர்மயமாக்கப்படும். இந்திய உணவுக்கழக செயல் பாடுகள் கம்ப்ïட்டரில் ஒருங்கிணைக்கப்படும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கு மட்டுமே வழங்கப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு ரூ.3271 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி.க்கான உதவித்தொகை நிதி ஒதுக்கீடு ரூ.440 கோடியில் இருந்து ரூ.611 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

சிறுபான்மை இன மாணவ-மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மெட்ரிக்கில் படிப்பவர்களுக்கு ரூ.72 கோடியும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்கு ரூ.48 கோடியும் வழங்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.12041 கோடியில் இருந்து ரூ.14365 கோடியாக உயர்த்தப்படுகிறது. அதோடு வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் புதிய தொழில்கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.

பெண்கள் மேம்பாட்டுக் கான நிதிஒதுக்கீடு ரூ.22,282 கோடியாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.2,25,000 கோடி பயிர்க்கடன்கள் வழங்க புதிய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 50 லட்சம் விவசாயிகள் பயன் பெறு வார்கள்.

2006-07-ல் விவசாயி களுக்கு ரூ.1,75,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இது ரூ.1,90,000 கோடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தேயிலை உற்பத்திக்கு புதிய உத்வேகம் கொடுக்க சிறப்பு நோக்க தேயிலை நிதி உருவாக்கப்படும். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தேசிய விவசாய இன்சூரன்ஸ் திட்டம் தொடர்ந்து நடை முறைப்படுத்தப்படும்.

மாநில அரசுகளின் உதவியுடன் சமூகநலத்திட்டங் கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு அங்கமாக 70 லட்சம் குடும்பங்கள் எல்.ஐ.சி. திட்டத்தில் இணைக்கப் படுவார்கள். இவர்களுக்கு 50 சதவீத பிரிமீயத்தொகையாக 200 ரூபாயை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.16,261 கோடி கடனாக வழங்கும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ரூ.9955 கோடியில் இருந்து ரூ.12,600 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. டெல்லி, கொல் கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங் களை இணைக்கும் தங்கநாற்கர சாலைத்திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை மேம் பாட்டுத்திட்டத்துக்கு ரூ.405 கோடி வழங்கப்படும்.

கைத்தறித்தொழில் மேம்பாட்டு நிதி ரூ.533 கோடியில் இருந்து ரூ.911 கோடியாக உயர்த்தப்படுகிறது. நெசவாளர்களுக்கான சுகா தார காப்பீட்டுத்திட்டம் இதர சிறு தொழில்களுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக நிதி ஒதுக்கீடு ரூ. 241 கோடியில் இருந்து ரூ.321 கோடியாக அதி கரிக்கப்படும்.

கயிறு தொழிற்சாலை நவீனப்படுத்த ரூ. 23.55 கோடி வழங்கப்படும். சுற்றுலாத் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.423 கோடியில் இருந்து ரூ.520 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

நலிவடைந்த பிரிவின ருக்கு கடன் வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. அவர்களது வீட்டுக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5000 கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வராத மாவட்டங்களுக்கு சம்பூர்ணா கிராம வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சொர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ.250 கோடியில் இருந்து ரூ.344 கோடியாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 12.5 பில்லியன் டாலர்களாக (ரூ.57 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. துறை ரீதியான முதலீடுகள் 6.8 பில்லியன் டாலர்கள் தேசிய மழைநீர் பிடிப்புபகுதி மேம்பாட்டு நிறுவன, திட்டங் களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.96 ஆயிரம் கோடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மூலதன செலவு ரூ.41,922 கோடியும் அடங்கும். நாட்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நிதிஉதவிகளும் செய்யப்படும்.

பிற்பட்ட மண்டல பகுதி களை மேம்படுத்துவதற்காக ரூ.5800 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்.

மும்பை நகரை உலகத்தரம் வாய்ந்த நிதி மையமாக மாற்ற உயர் அதிகாரக்குழு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.

உடல்ஊனமுற்றோருக்காக 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண இயற்கை மாற்றத்தின் விளைவை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று ஏற்படுத் தப்படும். பல்வேறு துறை களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.1,72,728 கோடியாக இருந்தது. 2007-2008-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ.2,05,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மத்திய திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,54,939 கோடி.

20 மாநிலங்களுக்கு ரூ.8575 கோடி கடன் பாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 450 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1,20,377 கோடியாக இருந்தது.

அடுத்த நிதி ஆண்டு முதல் தேசிய அளவில் பொருட்கள் மற்றும் சேவைவரி திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பு நிதி ஆண்டில் நிதிபற்றாக்குறை 3.7 சதவீதமாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை 2 சதவீதம். மொத்த செலவு ரூ.6,81,521 கோடியாக இருக்கும்.

விவசாயம் அல்லாத பொருட்கள் மீதான சுங்கவரி விகிதம் 12.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப் படுகிறது. சமையல் செய்ய பயன்படும் நிலக்கரி மீதானவரி விதிப்பு முழுமையாக நீக்கப் படுகிறது. குறைபாடுள்ள பொருட்கள் மீதான வரி விதிப்பு 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக் கப்படுகிறது.

பாலிஸ்டர் மீதான வரி 10-ல் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. விவசாய கருவிகள், உணவு பதப்படுத்தும் கருவிகளுக்கு வரி 7.5லிருந்து 5 சதவீதமாக குறைகிறது.

சில உணவுகளுக்கு வரி 30 லிருந்து 20 சதவீதமாக குறையும். சூரியகாந்தி எண்ணைக்கு வரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

குடைகளுக்கான உதிரி பாகங்கள், கைக்கடிகார டயல் ஆகியவற்றுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்த 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

விமான உதிரிப்பாகங் கள் இறக்குமதிக்கு 3 சதவீத இறக்குமதி வரிவிதிக்கப்படும். இரும்புதாது ஏற்றுமதிக்கு டன்னுக்கு ரூ.300 வரி விதிக்கப்படும்.

சிறு தொழில்களுக்கான சுங்கவரி விலக்கு ரூ.1 கோடியில் ரூ.1.5 கோடி யாக உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் பற்றிய விளம்பர படவரி 8 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறை கிறது.

பிளைவுட் மீதான சுங்கவரி 16 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்படுகிறது. கலப்பு உணவுகளுக்கு முழுமை யான வரி விலக்கு வழங்கப் படுகிறது.

பயோ-டீசல் மீதான சுங்க வரி முழுமையாக நீக்கப்படு கிறது. தண்ணீர் சுத்தி கரிக்கும் கருவிகள், அனைத் திற்கும் வரிவிலக்கு அளிக்கப் படுகிறது.

சிகரெட் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படுகிறது. புகையிலை இல்லாத பான் மசாலா மீதான சுங்கவரி 66 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைக்கப்படுகிறது. டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்க உள்ளதால் கவுரவ புத்தாநகரம், ஸ்ரீதாபாத், காவியாபாத், கோரகன், டெல்லியில் 2,3,4 நட்சத்திர ஓட்டல்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை வழங்கப்படும். 20 ஆயிரம் கூடுதல் அறைகள் தேவைப் படுவதால் வரி சலுகை நீடிக்கும்.

மாதசம்பளம் பெறுவோருக் கான வருமான வரியில் இந்த பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானவரி இல்லை. இந்த வருமான உச்சவரம்பில் மேலும் ரூ. 10 ஆயிரம் உயர்த் தப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை.

இந்த வருமானவரி விலக்குக் கான உச்சவரம்பு ரூ. 1,45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த வருமான வரி விலக்கு ரூ.1,95,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேருக்கு பயன்

மத்திய பட்ஜெட்டில் பல சேவை வரிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

இந்த வரி விலக்கு காரண மாக மத்திய அரசுக்கு ஆண் டுக்கு ரூ.800 கோடி இழப்பு ஏற்படும்.

இதுவரை உயர்தர குடி யிருப்போர் நலச் சங்கங் கள் மீது சேவை வரி விதிக் கப் பட்டிருந்தது. புதிய பட் ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கம்பெனிகளுக்கான கார்ப் பரேட் வருமான வரியில் சர்சார்ஜ் (ரூ.1 கோடிக்கு கீழ் உள்ளவர்களுக்கு) நீக்கப் படுகிறது.

பொது பட்ஜெட் 2007: முக்கிய அம்சங்கள்

. மகளிர் திட்டங்களுக்கு 22,282 கோடி ரூபாய்

. சிறுபான்மையினர் கழகத்துக்கு 63 கோடி ரூபாய்

. தங்க நாற்கரச் சாலைத் திட்டம் 2009ல் நிறைவு

. அந்நிய செலாவணி கையிருப்பு விபரம்

. சுகாதாரம், கல்வி மற்றும் பணவீக்கம் சிதம்பரம் பட்ஜெட்டின் முக்கிய இலக்குகள்

. வடகிழக்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

. வடகிழக்கு சாலை வசதிக்கு 405 கோடி

. கிராமப்புற மின்வசதிக்கு ரூ. 3983 கோடி

. தேயிலை, தேங்காய் வளர்ச்சி நிதி

. நிலமற்ற கிராமத்தினருக்கு இன்சூரன்ஸ்

. தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு கூடுதல் நிதி

. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம்

. கல்விக்கான நிதி 34 சதமாக அதிகரிப்பு

. விவசாயத்துக்கு 2,25,000 கோடி கடன்

. எஸ்சி, எஸ்டிக்களுக்கான திட்டங்களுக்கு கூடுதல் நிதி

. 15 ஆயிரம் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி

. எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க கூடுதல் நிதி

. போ#யாவை ஒழிக்க 1290 கோடி ஒதுக்கீடு

. கல்வித்துறை ஒதுக்கீடு 34.2 சதவீதமாக உயர்வு

. குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

. சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு உயர்வு

. கடந்த மூன்று ஆண்டுகளில் 8.6 சதவீத வளர்ச்சி

. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்துக்கு முன்னுரிமை

. விவசாயத்துக்கு புதிய நீர்ப்பாசணத் திட்டம்

. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர சிதம்பரம் உறுதி

. 8% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது

. விவசாயத்துக்கு முக்கியத்துவம்

. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பங்குச்சந்தை வீழ்ச்சி

. வடகிழக்கு சாலை வசதிக்கும் 405 கோடி

. பாதுகாப்பு துறைக்கு 96,000 கோடி ஒதுக்கீடு

. மின் ஆளுமை திட்டத்துக்காக ரு.719 கோடி ஒதுக்கீடு

. காமன்வெல்த் போட்டிகளுக்கு 150 கோடி நிதி

. வாட் வருவாய் 24.3 சதமாக அதிகரிப்பு

. வலுவான நிலையில் பொருளாதாரம்

. டிசம்பருக்குள் 12198 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள்

. ஜவுளியை நவீனப்படுத்த 911 கோடி நிதி

Tuesday, February 27, 2007

பஞ்சாப், உத்தராஞ்சல் - தேர்தல் முடிவுகள்

பஞ்சாப் சட்டசபை தேர்தல் அகாலி தளம் ஆட்சியை பிடித்தது:
காங்கிரஸ் படுதோல்வி

சண்டிகர், பிப். 27-

ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து கடந்த 13-ந் தேதி பஞ்சாப் மாநிலத் தில் சட்டசபை தேர்தல் நடந்தது.

பஞ்சாபில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் வன்முறை காரணமாக பியாஸ் தொகுதி தவிர மீதமுள்ள 116 தொகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு நடத்தப்பட்டது. இந்த 116 தொகுதிகளில் 1043 பேர் போட்டியிட்டனர்.

ஆளும் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் போட்டி யிட்டது. அவர்களை எதிர்த்து பா.ஜ.க.-சிரோமணி அகாலிதளம் கூட்டணி களம் இறங்கியது. இதனால் ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்பதில் கடும் போட்டி நிலவியது.

116 தொகுதிகளிலும் மின்னணு எந்திரத்தில் ஓட்டுப்பதிவு நடந்தது. இன்று (செவ்வாய்) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் பா.ஜ.க.-அகாலி தளம் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறியிருந்தன.

பஞ்சாப் தேர்தல் முடிவும் இன்று அதை உறுதி செய்தது. ஓட்டு எண்ணிக்கை தொடக்கம் முதலே பா.ஜ.க-அகாலி தளம் கூட்டணி பெரும்பா லான தொகுதிகளில் அதிக ஓட்டுக்கள் பெற்று முன்னணி யில் இருந்தது. காலை 9 மணிக்கெல்லாம் பஞ்சாபில் பா.ஜ.க.-அகாலிதளம் கூட் டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி விட்டது.

மதியம் 1 மணி நிலவரப்படி 116 இடங்களில் அகாலி தளம் கூட்டணி 65 இடங்களிலும் காங்கிரஸ் 46 இடங்களிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

பஞ்சாபில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. அங்குள்ள மூத்த தலைவர்கள் பலர் தோல்வியைத் தழுவி னார்கள். கடந்த தேர்தலில் காங்கிரஸ் 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்திருந் தது.

இந்த தடவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பாதி பேர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். கடந்த தேர்தலில் 44 இடங் களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பா.ஜ.க.-அகாலி தளம் கூட்டணி இந்த தடவை அந்த இட எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்து ஆட்சியைப் பிடித்துள்ளது.

அகாலி தளம் மூத்த தலை வர் பிரகாஷ்சிங் பாதல் லம்பி தொகுதியில் எளிதாக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் இந்தர்சிங் பாதலை 6 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

முதல்-மந்திரி அம்ரிந்தர்சிங் பாட்டியாலா தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் அகாலி தளம் வேட்பாளர் சுர்ஜித்சிங் சோகிலியை 32, 149 ஓட்டுக்கள் வித்தியாசத் தில் தோற்கடித்தார்.

காங்கிரஸ் மந்திரிகளில் ஜகஜித்சிங், ஜக்மோகன்சிங், சர்தூல்சிங் கர்னாம்தாஸ் ஜோகர், ரமேஷ் சந்திரதோக்ரா, ராகேஷ் பாண்டே ஆகிய 6 பேர் தோல்வி அடைந்தனர்.

அகாலி தளம் மூத்த தலை வர்களில் சிரோமணி குருத் வாரா கமிட்டி தலைவர் பிபி ஜகிர்கவுர், குல்தீப் சிங் வகேலா ஆகியோர் தோல்வியைத் தழு வியவர்களில் முக்கியமான வர்கள்.

பஞ்சாப் துணை முதல்- மந்திரி ரஜிந்தர் கவுர் (காங்) எலக்ரா தொகுதியில் அகாலி தளம் வேட்பாளர் பிரேம்சிங்கை 259 ஓட்டுக்களில் தோற்கடித்தார்.

அகாலி தளம் மீண்டும் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் முதல்-மந்திரியாக பிரகாஷ்சிங் பாதல் பதவி ஏற்பார். இதை பாதலின் மகன் சுக்பீர்சிங் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "முதல்-மந்திரியாக இருந்த அம்ரிந்தர்சிங் ஒரு சர்வாதி காரி போல ஆட்சி நடத்தினார். சர்வாதிகாரி போல வாழ்ந்தார். சர்வாதிகாரி போல நடந்து கொண்டார். அவர் ஒரு போதும் மக்கள் உணர்வுகளை உணரவில்லை. மக்களின் அந்த உணர்வுதான் ஓட்டுக்களாக மாறி உள்ளது'' என்றார்.

-oOo-

உத்தகாண்டம் மாநிலத்தில் பா.ஜனதா அபார வெற்றி:
கந்தூரி முதல்-மந்திரி ஆகிறார்

டேராடூன், பிப். 27-

உத்தரகாண்டம் மாநிலத்தில் என்.டி.திவாரி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 21-ந்தேதி அந்த மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 69 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி யது. பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் கூறி இருந்தன. தேர்தல் முடிவும் அது போலவே இருந்தது.

ஓட்டு எண்ணிக்கை தொடக் கத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் சம அளவில் முன்னணியில் இருந்தன. எனவே உத்தரகாண்டம் மாநி லத்தில் இழுபறி ஏற்படும் என்று எல்லாரும் முதலில் கருதினார்கள்.

10 மணி அளவில் காங்கிரசை விட பா.ஜ.க. கூடுதல் இடங்க ளில் முன்னணி பெற தொடங்கியது. மதியம் 12 மணிக்கு 69 இடங்களில் 38 இடங்களில் பா.ஜ.கவும், 14 இடங்களில் காங்கிரசும் மற்ற கட்சியினர் சுயேச்சைகள் 14 இடங்களில் முன்னணியில் இருந்தன.

உத்தரகாண்டம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.12.30 மணி அளவில் பாரதீய ஜனதா கட்சி 38 இடங்களில் வெற்றி பெறும் வகையில் இருந்தது. இதன் மூலம் உத்தரகாண்டத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

உத்தரகாண்டம் மாநில பா.ஜனதா மூத்த தலைவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர்.

உத்தரகாண்டம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. வயதான காரணத்தால் ஆளும் காங்கிரஸ் முதல்-மந்திரி என்.டி.திவாரி இந்த தடவை தேர்தலில் போட்டியிடவில்லை.

அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தகவல் தொடர்பு மந்திரி இந்திர ஹிரிதயேஸ். இவர் ஹல்டவாணி தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார். மூத்த தலைவர்கள் தோல்வி காரணமாக உத்தரகாண்ட மாநில காங்கிரசார் துவண்டு போய் உள்ளனர்.

கடந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருந்த காங்கிரஸ் இந்த தடவை 16 இடங்களுடன் திருப்திப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.

இந்தியாவின் 27-வது மாநிலமாக 2000-ம் ஆண்டு உருவான உத்தரகாண்டம் மாநிலத்தில் முதலில் நித்தி யானந்த சுவாமி தலைமையில் 9.11.2000 முதல் 30.10.2001 வரை பா.ஜ.க. ஆட்சி நடந்தது. பிறகு 30.10.2001 முதல் 2.3.02 வரை பகத்சிங் கோஷியாரி முதல்-மந்திரியாக இருந்தார்.

இதையடுத்து நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வென்று 2002-ல் என்.டி.திவாரி முதல்வராக இருந்தார். அவரிடம் இருந்த ஆட்சியை தற்போது பா.ஜ.க. மீண்டும் தட்டிப் பறித்து தன் வசமாக்கி உள்ளது.

உத்தரகாண்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய பா.ஜ.க. பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை டெல்லியில் கூடுகிறது. கூட்டத்துக்கு பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் தலைமை ஏற்கிறார்.

கூட்டத்தில் உத்தரகாண்டம் புதிய முதல்-மந்திரியாக புவன்சந்திர கந்தூரி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. இவர் கடந்த பா.ஜ.க. மத்திய மந்திரி சபையில் போக்குவரத்துத் துறை மந்திரியாக இருந்தவர். இவர் போட்டியின்றி முதல்வர் பதவிக்கு ஏகமனதாக தேர்வாகிறார்.

முதல்-மந்திரி பதவி ஏற்க போகும் பி.சி.கந்தூரி இன்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களுக்கு சேவை செய்ய எனக்கு கிடைத்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிëக்கிறது.

பா.ஜ.க.வின் பாரம்பரிய சேவையை அங்கீகரிக்கும் வகையில் மக்கள் மகத்தான ஆதரவு கொடுத்துள்ளனர். எனது தலைமையில் அமையும் அரசு நம்பகத் தன்மைக்கு முதலிடம் கொடுக்கும். ஊழலை ஒழிக்கவும், அரசு பணம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் முன்னுரிமை கொடுக்கப்படும்.

இவ்வாறு பி.சி.கந்தூரி கூறினார்.

தோல்வி குறித்து உத்தரகாண்டம் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "விலைவாசி உயர்வு எப்போதும் இருப்பதுதான். அதற்காக நாங்கள் தோல்வி அடையவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் என்.டி.திவாரி அரசு மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்துள்ளது. அந்த சாதனைகளை நாங்கள் மக்களிடம் சரியாக எடுத்துச் சொல்ல தவறி விட்டோம். ஆனால் பா.ஜ.க.வினர் விலைவாசி உயர்வை பூதாகர மாக்கி வென்று விட்டனர் என்றார்.

Monday, February 26, 2007

ரெயில்வே பட்ஜெட் - முழுவிவரம்

முதல் வகுப்பு-புறநகர், 2-வது வகுப்பு கட்டணம் குறைந்தது;
மாணவர்கள்-பெண்களுக்கு சலுகை


புதுடெல்லி, பிப். 26-

2007-08-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை பாராளு மன்றத்தில் இன்று ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவ் தாக்கல் செய்தார்.

பயணிகளை கவரும் வகையிலும், அவர்கள் பாது காப்பை கவனத்தில் கொண் டும் பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளதாக லல்லுபிரசாத் கூறினார். பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் இதை பிரதிபலிப்பதாக இருந்தன.

ரெயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இந்திய ரெயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு கட்டண வருமானம் இதே காலக்கட்டத்தில் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறிப்பாக சிமெண்ட்-சரக்கு போக்குவரத்து நாடெங்கும் 30 சதவீத அளவுக்கு அதிகரித் துள்ளது. தனியார் கண் டெய்னர்கள் 15 பேருக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலான பயணிகள் பயணம் செய்ய வசதியாக ஜெய்ப்பூர்-பிபவா இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட "டபுள் டெக்கர் ரெயில்'' விடப்படும். சரக்கு போக்குவரத்து மேம் படுத்தப்படும். 2008-ல் கூடுதலாக 6 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில் ரெயில்வே துறை நவீனப்படுத்தப்படும்.

இது ஏழைகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். ரெயில்வே துறை முழுமையாக சீரமைப்பு செய்யப்படும். பயணிகள் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரக்குபெட்டி பயணிகள் பெட்டிகள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.

முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 800 பயணிகள் பெட்டிகள் சேர்க்கப்படும். தற்போது முன்பதிவு செய்யப்படாத ரெயில்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய் பவர்களுக்கு கட்டை சீட்களே உள்ளன. அடுத்த நிதி ஆண்டு இந்த மரக்கட்டை இருக்கைகள் மாற்றப்பட்டு சொகுசாக பயணம் செய்வதற்காக மெத்தை இருக்கைகள் (குசன்சீட்) பொருத்தப்படும்.

தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இனிவிடப்படும் புதிய ரெயில் களில் முன்பதிவு செய்யாத 6 பெட்டிகள் இணைக்கப்படும்.ஊனமுற்றோருக்கு எளி தில் உதவும் வகையில் இனி ரெயில் பெட்டி வடிவமைப்பு களில் மாற்றம் கொண்டு வரப்படும்.

தற்போது ரெயில் பெட்டி களில் தூங்கும் வசதி கொண்ட படுக்கை சீட்டுகள் 72 உள்ளன. இனி இது 84 ஆக உயர்த்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரங்கள் நிறுவப்படும்.

டிக்கெட்டுக்களை முன் பதிவு செய்ய ரெயில்வே கால் சென்டர்கள் உருவாக்கப்படும். மத்திய அரசு தேர்வு மற்றும் ரெயில்வே அலுவலக தேர்வு எழுத செல்பவர்களுக்கு ரெயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப் படும்.

ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க சேரும் கூட்டத்தை தவிர்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் இனி பெட்ரோல் பங்குகளிலும் பணம் எடுக்கும் ஏடிஎம் மையங்களிலும், தபால் நிலையங்களிலும், ரெயில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும்.

பயணிகள் ரெயிலில் இனி காய்கறி வியாபாரிகளுக்கும், பால்காரர்களுக்கும் தனி பெட்டி இணைக்கப்படும். நாடெங்கும் விரைவில் 200 நவீன மாதிரி ரெயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

படுக்கை வசதியில் கீழ் இருக்கையை வழங்க பெண்களுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். மும்பை புறநகர் ரெயில் பயணிகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சரக்கு போக்கு வரத்துக்கான விசேஷ இருப்புபாதைகள் கட்டும்பணி 2007-08-ல் தொடங்கும். அதற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும்.

வரும் மார்ச் மாதத்துக்குள் நாடெங்கும் புதிதாக 225 ரெயில் நிலையங்கள் கட்டப் படும்.

ரெயில் போக்குவரத்து மற்றும் டிக்கெட் போன்ற விசாரணைகளுக்கு நாடு முழுவதும் 139 என்ற ஒரே மாதிரியான டெலிபோன் நம்பர் அறிமுகம் செய்யப்படும். ரெயில்வேத்துறை எக் காரணம் கொண்டு தனியார் மயமாகாது.

குறைந்த தூரங்களுக்கு இடையே அதிவேக ரெயில்கள் இயக்கப்படும். இருப்புப் பாதைகளை மின் மயமாக்குவது அதிகரிக்கப் படும். நாடெங்கும் முக்கிய நகரங்களின் புறநகர் ரெயில் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு பயணத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும்.

ரெயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை. பயணிகள் நலனுக்காக 32 புதிய ரெயில்கள் விடப்படும். ஏழைகள் பயன்பெறுவதற்காக 8 ஏழைகள் ரதம் புதிதாக அறிமுகம் செய்யப்படும்.

அனைத்து உயர் வகுப்பு கட்டணங்களும், ஏ.சி. வகுப்பு கட்டணங்களும் குறைக்கப்படும். எல்லா புறநகர் ரெயில்களின் கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்படும்.

அனைத்து ரெயில்களிலும் 2-ம் வகுப்பு கட்டணத்துக்கான கூடுதல் வரிவிதிப்பில் 20 சதவீதம் குறைக்கப்படும். இதனால் 2-ம் வகுப்பு கட்டணம் குறைகிறது. 23 ரெயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்.

உயர் வகுப்பு கட்டண குறைப்பு விவரம் வருமாறு:-

நெருக்கடி இல்லாத சாதாரண நாட்களில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 6 சதவீதம் குறைக்கப்படும். ஆனால் பிசியான சீசனில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 3 சதவீதம் குறைக்கப்படும். இது போல ஏ.சி. இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான கட்டணம் பிசியான சீசனில் 2 சதவீதம் குறைக்கப்படும். சாதாரண நாட்களில் இந்த வகுப்புக்கான கட்டண குறைப்பு 4 சதவீதமாக இருக்கும்.

ஏ.சி. சேர் கார் கட்டணம் பிசியான சீசனில் 4 சதவீதமும், சாதாரண நாட்களில் 8 சதவீதமும் குறைக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் கட்டண குறைப்பு அனைத்து சீசன்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பை தடுக்க ரெயில்களில் கேமரா- மெட்டல் டிடெக்டர்

ரெயில்களில் குண்டு வெடிப்பு, நாசவேலைகளை தடுக்க ரெயில் கதவுகளில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படும்.

கண்காணிப்பு கேமரா, டெலிவிஷன் ஆகியவையும் ரெயில் பெட்டிகளில் அமைக்கப்படும்.

ரெயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்.

ஏழை மக்களும் ஏ.சி. ரெயிலில் பயணம் செய்யும் வகையில் மேலும் 8 ஏழைகள் ரதம் ரெயிலை லல்லுபிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார். அதன் விவரம்:-

1.செகந்திராபாத்- யெஷ்வந்த்பூர் (வாரம் 3 முறை)

2. ஜெய்ப்பூர்-பந்த்ராஅகமதாபாத் வழியாக(வாரம் 3 முறை)

3. கொல்கத்தா- பாட்னா (வாரம் 3 முறை)

4. புவனேஸ்வர்-ராஞ்சி (வாரம் 3 முறை)

5. திருவனந்தபுரம்- லோக்மான்யா திலக் (வாரம் 2 முறை)

6. கொல்கத்தா- கவுகாத்தி (வாரம் 2 முறை)

7. புதுடெல்லி- டேராடூன் (வாரம் 3 முறை)

8. ராய்பூர்- லக்னோ (வாரம் 2 முறை)

ரெயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் தொகுப்பு:

*முதல்வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் குறைப்பு.

* புறநகர் ரெயில்களுக்கு பயணிகள் கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது.

*சூப்பர் பாஸ்ட் ரெயில் களில் 2-வதுவகுப்புகளில் கூடுதல் கட்டணம் (சர் சார்ஜ்) 20 சதவீதம் குறைக் கப்படுகிறது. இதனால் கட்டணம் குறைகிறது.

* பயணிகள் பெயர்களுக்கு பயணஅட்டை முறை அமு லுக்கு வருகிறது.

*23ரெயில் பாதைகள் நீட்டிக்கப்படுகிறது.

* 800 புதிய வேகன் கள் (பெட்டிகள்) சேர்க்கப் படுகின்றன.

* ரெயில்வே துறையில் தனியார் மயமாக்கல் இல்லை.

* முக்கிய ரெயில் நிலையங் களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

*காஷ்மீர் முதல் கன் னியாகுமரி வரை மின் மயமாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

*கூடுதல் ரெயில் என் ஜின்கள் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படும்.

* 32 புதிய ரெயில்கள், 8 ஏழைகள் ரதம் இந்த ஆண் டில் விடப்படும்.

* மும்பையில் புறநகர் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

*பாசஞ்சர் ரெயில்களில் வியாபாரிகள், பால் ஆகியவற்றை கொண்டு செல்ல தனி பெட்டிகள் விடப்படும்.

*மத்திய தேர்வாணை குழு தேர்வு(யு.பி.எஸ்.சி.) எழுத செல்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.

*பெட்ரோல் நிலையங்கள், மற்றும் ஏடிஎம் மையங்களில் ரெயில் டிக்கெட் விற் பனை.

* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72ல் இருந்து 84 ஆக உயருகிறது.

*2007-2008ம் ஆண்டை ரெயில்வே சுத்தமான ஆண்டாக கடைபிடிக்கும்.

*300 ரெயில் நிலையங்கள் மாதிரி ரெயில் நிலையமாக உயர்த்தப்படும்.

* முக்கிய நகரங்களில் 6000 தானியங்கி டிக்கெட் இயந்திரம் வைக்கப்படும்.

* ரெயில் பயணிகள் 139 என்ற எண்ணை டயல் செய்து உள்ளூர் கட்ட ணத்தில் தொலை பேசியில் பேசலாம்.

*உடல் ஊனமுற்றோ ருக்காக 1250 சிறப்பு பெட் டிகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன.

*முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு ஏ.சி. மற்றும் 2வது வகுப்பு படுக்கை வசதியில் முன்னுரிமை வழங்கப்படு கிறது.

*ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளின் எண் ணிக்கை 4ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும்.

*பயணிகளுக்கு இருக் கைகள் மெத்தை வசதி செய் யப்படும் மரஇருக்கைகள் இனி கிடையாது.

*கண்டெய்னர் போக்கு வரத்து 5 மடங்காக அதிக ரிக்கும்.

* 3 அடுக்கு கண்டெய்னர் ரெயில்கள் விடப்படும்.

* சிமெண்ட், ஸ்டீல் சரக்கு போக்குவரத்து 30 சதவிதம் அதிகரிக்கப்படும்.

* பயணிகளின் அனைத்து புகார்களும் 3 மாதத்தில் கவ னிக்கப்படும்.

# 2006-2007ல் ரெயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி லாபம்.

Saturday, February 24, 2007

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை

இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்கக் கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: அணுஆயுதங்களை தாங்கிச் சென்று இரண்டாயிரம் கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட "ஷாகீன்' ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை மூலமாக இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தரைப் பகுதியிலிருந்து தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் ஹட்ப் 6 (ஷாகீன் 2) ரக ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இந்த ஏவுகணை அணுஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. மேலும் இரண்டாயிரம் கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக சென்று தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. அந்நாட்டு ராணுவம் நேற்று ரகசிய இடத்திலிருந்து "ஷாகீன்2' ஏவுகணையை விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதித்தது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ""பாகிஸ்தான் ஏவுகணை திட்டத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த ஏவுகணை சோதனை,'' என்று தெரிவித்துள்ளது. ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்கும் திறனை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் மற்றும் பிரதமர் சவுகத் அஜீஸ் ஏவுகணை சோதனையை மேற்கொண்ட தொழில்நுட்ப அணியினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவ கூடுதல் தளபதிகளின் தலைவர் இசான் உல் ஹக் ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்டு சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் கூறுகையில், ""நாட்டின் பாதுகாப்பு தேவைகளுக்கு அரசு எப்போதும் முக்கியத்துவம் வழங்கும். நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ள இந்த ஏவுகணை திட்டம் மேலும் மேம்படுத்தப்படும்,'' என்றார்.

Friday, February 23, 2007

கடமை தவறும் பிள்ளைகளுக்கு ஜெயில்

மத்திய மந்திரி சபை கூட்டத்தில் அதிரடி முடிவு:
வயதான பெற்றோரை பாதுகாக்க தவறும் பிள்ளைகளுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை

புதுடெல்லி, பிப்.23-

வயதான பெற்றோரை அவர்களின் பிள்ளைகள் பராமரிப்பதை கட்டாயம் ஆக்கும் வகையிலான மசோதா ஒன்றை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, வயதான பெற்றோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்வகையில் அனைத்து மாநில அரசுகளும் தாலுகா அளவில் முதியோர் குறைதீர்ப்பு ஆணையம் அமைக்கவேண்டும்.

வயதான பெற்றோர் தங்களது பிரச்சினைகளை இந்த ஆணையத்தில் தாங்களே நேரிடையாக ஆஜராகி தங்களது குறைகள் குறித்து ஆணையத்தின் முன்பு விவாதிக்கலாம். மேலும் வழக்கறிஞர்களின் உதவியுடன்தான் வாதாட முடியும் என்ற நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின்கீழ், வயதான பெற்றோரை பராமரிக்காத வாரிசுகளுக்கு 3 மாத சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். வயதான பெற்றோரின் சுகாதாரம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆஸ்பத்திரிகளில் சிறப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது. வயதான பெற்றோரின் சொத்துக்களை அந்தந்த மாநில அரசின் காவல்துறை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்களால் எழுதப்பட்ட உயிலை மாற்றி அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களது தேவைகளுக்கு ஏற்ப வாரிசுகள் அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என இந்த புதிய மசோதா மூலம் வலியுறுத்தப்பட உள்ளது. மேலும் இவர்களுக்கு கிடைத்துள்ள பரிசு பொருட்களையும் தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் அளிக்கலாம் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய விற்பனை வரியை ஒரு சதவீதம் குறைப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மத்திய விற்பனை வரி 4 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைகிறது. ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து இந்த வரிகுறைப்பு அமலுக்கு வருகிறது.

இதற்காக, வரும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும். மத்திய விற்பனை வரி சட்டத்திலும், கூடுதல் உற்பத்தி வரி சட்டத்திலும் தேவையான திருத்தங்கள் செய்யப்படும். நாடு முழுவதும் மதிப்பு கூட்டு வரி (வாட்) அமல்படுத்தப்பட்டு இருப்பதால், மத்திய விற்பனை வரியை படிப்படியாக ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, வரிகுறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விலைவாசி உயர்வு, பணவீக்க அதிகரிப்பு ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட்டது. பின்னர் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

அத்தியாவசிய பொருட்களின் சப்ளையில் ஏற்பட்ட முட்டுக்கட்டையாலும், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வாலும்தான் பணவீக்கம் அதிகரித்தது. பொருட்களின் சப்ளையில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை அகற்றுவதன்மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம். தற்போது சர்க்கரை, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் சப்ளை அதிகரித்துள்ளது. ஆனால் மற்ற பொருட்களின் சப்ளை இன்னும் அதிகரிக்கவில்லை. விலைவாசியை குறைக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது.

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்வது பற்றி பாராளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையை மத்திய வேளாண்மை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. அதன்பிறகு இதுகுறித்து அந்த அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும். பின்னர் மந்திரிசபை தனது நிலையை அறிவிக்கும். தேவை அதிகரித்ததால்தான் சிமெண்ட் விலை உயர்ந்துள்ளது. அதை கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட முடியாது.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

சுங்கத்துறைக்காக ரூ.358 கோடியே 19 லட்சம் செலவில் 109 கப்பல்கள் வாங்குவதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 5 ஆண்டுகளுக்கு உதிரி பாகங்கள் வாங்குவதற்கும், வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதை மருந்து பொருட்கள் ஆகியவற்றை நமது நாட்டிலிருந்து கடல் வழியாக கடத்துவதை தடுப்பதற்கு, சுங்கத்துறைக்கு இக்கப்பல்கள் உதவும். வரும் 2009-ம் ஆண்டுக்குள் 109 கப்பல்களை வாங்கும் பணி முடிந்து விடும்.

இந்திய ரெயில்வே அமைக்க திட்டமிட்டுள்ள கிழக்கு சரக்கு ரெயில்பாதை, மேற்கு சரக்கு ரெயில்பாதை ஆகியவற்றுக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கிழக்கு சரக்கு ரெயில்பாதை ரூ.11,589 கோடி செலவிலும், மேற்கு சரக்கு ரெயில்பாதை ரூ.16,592 கோடி செலவிலும் அமைக்கப்படும்.

செமி கண்டக்டர்கள், எல்.சி.டி., சோலார் செல்கள், மற்றும் நவீன மைக்ரோ தொழில்நுட்ப, நானோ தொழில்நுட்ப கருவிகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதை ஊக்குவிப்பதற்காக, அவற்றுக்கு சிறப்பு சலுகை வழங்கும் திட்டத்துக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிர்வாக செலவாக தற்போது 2 சதவீதம் அளிக்கப்படுகிறது. இந்த நிர்வாக செலவை 4 சதவீதமாக உயர்த்த மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கூடுதல் ஆள் நியமனம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2001-2002-ம் ஆண்டுக்கான தேசிய சிறுபான்மையினர் கமிஷனின் 9-வது ஆண்டறிக்கையையும், அதன் நடவடிக்கை அறிக்கையையும் வரும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் ரூ.165 கோடி செலவில் இந்தியன் இன்ஸ்டிடிïட் ஆப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்.) அமைக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்படும்.

தூதரக பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள், விசா இல்லாமலேயே துருக்கி நாட்டுக்குள் நுழைவதற்கான ஒப்பந்தத்தை துருக்கி நாட்டுடன் செய்து கொள்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, தூதரக பாஸ்போர்ட் வைத்திருக்கும் துருக்கி மக்கள், இந்தியாவுக்கு விசா இல்லாமலேயே வரலாம்.

அன்னிய நேரடி முதலீடு

மேற்கு வங்காளத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், துணை நகரங்கள், வீடுகள் ஆகியவை அமைப்பதற்கு இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த சலீம் குரூப் ரூ.2,250 கோடி அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பாராளுமன்றத்தில் மைக்ரோ பைனான்ஸ் மசோதா தாக்கல் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

கொல்கத்தாவில் உள்ள தேசிய இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை மூடுவது என்றும், அதில் பணியாற்றும் ஊழியர்களை ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு பணிமாற்றம் செய்வது என்றும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Thursday, February 22, 2007

போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைகிறது

இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிகிறது!!:
அச்சத்தில் தமிழர்கள்!!!

பிப்ரவரி 22, 2007

ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர்.

நார்வே தூதுக் குழுவின் முயற்சியால், இலங்கை அரசுக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆரம்பம் முதலே இரு தரப்பும் போர் நிறுத்தத்தை முறையாக கடைப்பிடிக்கவில்லை. இரு தரப்பும் போர் நிறுத்தத்தை மீறி விட்டதாக மாறி மாறி புகார் கூறி வந்தன.

இந் நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் இலங்கையில் பெரிய அளவில் போர் மூளக் கூடிய அபாயம் அதிகரித்துள்ளது. இதை உறுதிப்படுத்துவது போல இலங்கை கடலோரப் பகுதிகளில் கடல் படையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடல்படை ரோந்துக் கப்பல்களும் அதிக அளவில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வரும் அகதிகள் எண்ணிக்கை சுத்தமாக நின்றுள்ளது. தமிழகத்திற்கு வரத் திட்டமிட்டுள்ள தமிழர்கள் காட்டுப் பகுதியில் தங்கியுள்ளனர்.

இலங்கையில் நிலவும் இந்தப் பீதி தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல அச்சப்பட்டு மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர். மீன் பிடிக்கச் சென்றால் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்பதால், இந்திய கடற்படை தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

இலங்கை பதட்டத்தை மனதில் கொண்டு தமிழக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடலோரக் காவல் படையின் கட்டுப்பாட்டில் கொணட் வரப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தைத் தகர்க்க புலிகள் திட்டம்:

இதற்கிடையே கொழும்பு துறைமுகத்தைத் தாக்கி தகர்க்க தமிழக கடலோரப் பகுதிகளில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 15 தற்கொலைப் படை படகுகளை விடுதலைப் புலிகள் ஆயத்த நிலையில் வைத்திருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே விடுதலைப்புலிகளின் கடல் புலி பிரிவுக்குச் சொந்தமான படகை, பயங்கர ஆயுதங்களுடன் இந்திய கடலோர காவல் படை பிடித்தது. அதில் இருந்த 2 விடுதலைப் புலிகள் உள்பட 5 பேரை கடலோரக் காவல் படை பிடித்து தமிழக கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தது.

இநத சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்பபடுத்தப்பட்டது. இந்த நிலையில்,தமிழக கடலோரப் பகுதிகளில் கடல்புலிகள் பிரிவுக்குச் சொந்தமான 15 வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்தப் படகுகளைக் கொண்டு கொழும்பு துறைமுகத்தைத் தாக்கித் தகர்க்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்திய, இலங்கை எல்லையில் இந்தப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு காட்டு நாயகே சர்வதேச விமான நிலையத்தில் புகுந்த விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை, விமானங்களை குறி வைத்துத் தாக்கியது. அதே போல தற்போது கொழும்பு துறைமுகத்தில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த கடல் புலிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.

தாக்குதல் நடத்த, 15 தற்கொலை படகுகளும் புலிகள் அமைப்பின் தலைமையின் உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. எந்த இடத்தை தாக்க வேண்டும் என்று சாடிலைட் போன் மூலம் வரும் உத்தரவுக்காக இவர்கள் காத்துள்ளனர். சிக்னல் கிடைத்தவுடன் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

அதேசமயம், நமது இலக்கு கொழும்பு துறைமுகம்தான், தமிழர்கள் மீதோ. இந்திய நிலைகள் மீதோ எந்த தாக்குதலும் நடத்த க்கூடாது என்று கடல் புலிகளுக்கு, புலிகள் தலைமையகம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத்தான் கடந்த வாரம் கோடியக்கரை அருகே இந்தியக் கடலோரக் காவல் படையினர், புலிகளின் படகை மடக்கிய போது விடுதலைப்புலிகள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் சரண் அடைந்துவிட்டனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல் வெளியானதைத் தொடர்நது, தமிழக கடலோரப் பகுதிகளில் முழு அளவில் உஷார் நிலையில் இருக்குமாறு உளவுத்துறை மத்திய, மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.

ஆயுதக் கடத்தல்: மேலும் 6 பேர் கைது:

இதற்கிடையே, மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் வெடிபொருட்கள், அலுமினியக் குண்டுகளை கடத்தியது தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளார்.

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 டன் அலுமினிய குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார் நேற்றுமுன்தினம் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக செல்வராஜ், குணசேகர பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில் அலுமினிய தகடுகள், பவுடர்கள் போன்றவற்றை வாங்கி கொடுப்பதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் அருகே உள்ள பொந்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முரளி, பூமி, கண்ணன், பெரியசாமி, கர்ணன், முருகநாதன் ஆகிய 6 பேரை இன்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு விடுதலைப்புலிகளுடன் நேரிடையாக தொடர்பு இருக்கிறதா? அல்லது ஏஜெண்டுகள் மூலமாக வெடிபொருட்களை அனுப்புகிறார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புலிகளை விசாரிக்க விரும்பும் இலங்கை கடற்படை:

இதற்கிடையே, ஆயுதக் கடத்தல் தொடர்பாக இந்திய கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ள 3 விடுதலைப் புலிகளை தாங்களும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என இலங்கை கடற்படை இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக விடுதலைப் புலிகளிடம் நடைபெறும் விசாரணையில் கடற்படையையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியத் தூதரகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்திய அதிகாரிகளிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

கிளிநொச்சி பள்ளி மீது குண்டு வீச்சு:

இந்தநிலையில், வன்னி பகுதியில் இலங்கை விமானப்படையின் கேபிர் ரக விவீமானங்கள் விடிய விடிய குண்டு வீசித் தாக்கியதில், பல தமிழர் வீடுகள் தரைமட்டமாயின.

கிளிநொச்சி அருகே பள்ளிக்கூடம் மீது குண்டு வீசியதில், அங்கிருந்த மாணவர்கள் தப்பி ஓடினர். மருத்துவமனை மற்றும் சந்தை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

Wednesday, February 21, 2007

வெடிகுண்டுகளுடன் பிடிபட்ட படகு தகர்க்கப்பட்டது

பிடிபட்ட புலிகள் படகு நடுக்கடலில்...தூள்!:
8 நாள் புதிருக்கு விடையாக அழிப்பு

சென்னை:எட்டு நாட்களுக்கு முன் பாக் ஜலசந்தி அருகே பிடிபட்ட விடுதலைப் புலிகளின் படகு நடுக்கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தூள் தூளாக தகர்க்கப்பட்டது.

அப்படகின் பக்கவாட்டுச் சுவர்களில், வெளியில் தெரியாத வகையில் 500 கிலோ அதிபயங்கர வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாலும், அதை வெளியில் எடுக்க முடியாது என்ற காரணத்தினாலும், அப்படகு நேற்று பகல் 11 மணிக்கு நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டது..

இந்தியா, இலங்கைக்கு இடையே நடுக்கடலில், பாக் ஜலசந்தி அருகே கடலோர காவல் படையின் "ரமாதேவி' என்ற கப்பல் பத்து நாட்களுக்கு முன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது, நடுக்கடலில் பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்படகில் ஐந்து பேர் இருந்தனர். அவர்களை கேட்ட போது, "இன்ஜின் பழுதாகி விட்டது; சரி செய்து கொண்டிருக்கிறோம்' என்று கூறினர். இதையடுத்து, கடலோர காவல் படையினர் சென்று விட்டனர். மறுநாளும் அதே இடத்தில் அப்படகு இருந்தது கடலோர காவல் படைக்கு சந்தேகத்தை எழுப்பியது. உடனே, அப்படகை கடலோர காவல் படையினர் சோதனையிட முடிவு செய்து, படகிற்கு சென்ற போது அதிர்ந்தனர். படகில் ஏ.கே., 56 ரக துப்பாக்கி, அத்துப்பாக்கிக்கு தேவையான 124 குண்டுகள், ஐந்து கையெறி குண்டுகள், சாட்டிலைட் போன், டெட்டனேட்டர், மனித வெடிகுண்டுக்காக பயன்படுத்தப்படும் தற்கொலை ஜாக்கெட், எட்டு பேரல்களில் திரவ ரசாயனம் ஆகியவை இருந்தன.பிடிபட்ட படகை, கடலோர காவல் படையினர் சென்னைக்கு எடுத்து வந்தனர். அப்படகில் இருந்தவர்களும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். கடலோர காவல் படை நடத்திய விசாரணையில், இப்படகில் இருந்தவற்றை கடலூரில் ஒப்படைக்க வந்ததாக தெரிவித்தனர். கடலோர காவல் படையினரிடம் இருந்து பிடிபட்ட ஐந்து பேரையும் "கியூ' பிரிவு போலீசார், மத்திய உளவுப் பிரிவினர் மற்றும் சென்னை நகர போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். இதில் பிடிபட்ட ஐந்து பேரில் நான்கு பேர் இலங்கை தமிழர்கள் என்பதும், அதில் இரண்டு பேர் விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. கடற்புலிகள் பிரிவில் செயல்படும் அருமைநாயகம் புருஷோத்தமன், சிவபத்மநாபன் ஆகியோர் தான் முக்கியமானவர்கள் என்பதால், இவர்களிடம் கடந்த ஒரு வாரமாக தீவிர விசாரணை நடந்து வந்தது.

மனித வெடிகுண்டாக மாறி வெடிக்கச் செய்யும் தற்கொலை ஜாக்கெட் படகில் இருந்தது தான் "கியூ' பிரிவு போலீசுக்கு கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை படுகொலை செய்ய வைத்தது மனித வெடிகுண்டு தான். அந்த வகையில், 14 கிலோ எடையுடைய தற்கொலை ஜாக்கெட்டை எடுத்துக் கொண்டு இந்திய கடலோரப் பகுதிகளில் சுற்றித் திரிந்தது ஏன்? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தான் அதிபயங்கர தகவல் கிடைத்தது. புலிகள் வந்த படகு புத்தம் புதிய படகு. பைபரால் செய்யப்பட்டது. படகில் பக்கவாட்டு சுவர் பகுதிகளில் 500 கிலோ எடையுள்ள வெடி மருந்து பொருட்கள் பதுக்கி, அதை பைரறக தகடால் சீல் வைத்திருப்பதாக தெரிவித்தனர். இத்தகவல் நேற்று முன்தினம் பிற்பகலில் தெரிவித்ததும், "கியூ' பிரிவு போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்படகை உடனே சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டது. கடலோர காவல் படையின் வெடிகுண்டு நிபுணர் படை ஓடி வந்தது. படகை சோதனையிட்ட போது, படகில் வெடி மருந்து இருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அந்த வெடி மருந்து பொருட்களை எடுக்கவே முடியாது; துறைமுகத்தில் வைத்து செயலிழக்கவும் செய்ய முடியாது. அப்படி செய்தால், சென்னை நகரத்துக்கே பெரும் ஆபத்து ஏற்படும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்து விட்டனர்.

இது தொடர்பாக மத்திய, மாநில உள்துறை அதிகாரிகளும் கடலோர காவல் படையின் உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். நடுக்கடலுக்கு படகை இழுத்துச் சென்று வெடிக்கச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. உடனே படகை வெடிக்கச் செய்வது தொடர்பான தகவலை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் தெரிவித்து விட்டு, அதற்கான உத்தரவும் பெறப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கடலோர காவல் படையின் "அவ்வையார்' கப்பல் மூலம் புலிகளின் படகு இழுத்துச் செல்லப்பட்டது. பகல் 10.15 மணிக்கு "அவ்வையார்' கப்பல் நின்றது. புலிகளின் படகு மற்றொரு ரப்பர் படகு மூலம் இழுத்துச் செல்லப்பட்டது. சென்னையிலிருந்து 20 கடல் மைலுக்கு (37 கிலோ மீட்டர்) அப்பால் படகை எடுத்துச் சென்று நிறுத்தினர். புலிகளின் படகிற்கு ரப்பர் படகு மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் சென்றனர். புலிகளின் படகில் இருந்த வெடி மருந்துகளுடன் கிரானைடு இணைக்கப்பட்டது. அதை "டைம் டிவைசர்' மூலம் வெடிக்கும்படி செய்யப்பட்டது. 40 நிமிடங்கள் கழித்து புலிகளின் படகு வெடிக்கும் வகையில் வெடிகுண்டு நிபுணர்கள் செய்துவிட்டு, ரப்பர் படகு மூலம் "அவ்வையார்' கப்பலுக்கு வந்து விட்டனர். அப்படகு பகல் 11 மணிக்கு வெடித்து சிதறியது. நெருப்பு பிழம்பாக நடுக்கடலில் அக்காட்சி தெரிந்தது. புலிகளின் படகு வெடித்து சிதறியதை கடலோர காவல் படையின் அதிகாரிகள் பல மைல்களுக்கு அப்பால் இருந்தபடி பார்த்தனர். போலீஸ் காவலில் இருக்கும் விடுதலைப்புலிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

படகில் வந்த புலிகள் நெஞ்சுரம் படைத்தவர்கள்: கடலோர காவல் படையிடம் பிடிபட்டவர்களில் இரண்டு பேர் புலிகளின் அமைப்பில் தீவிர பயிற்சி பெற்றவர்கள். அருமைநாயகம் புருஷோத்தமன், சிவபத்மநாபன் ஆகிய இருவரும் தான் இப்படகை எடுத்துக் கொண்டு, புலிகளுக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்வது வழக்கம். அவர்களை இலங்கை கடற்படையினர் பிடிக்க முற்பட்டால், படகை வெடிக்கச் செய்து, இலங்கை வீரர்களை அழிக்கச் செய்து விடுவார்களாம். இந்திய கடற்படை பிடித்ததால், எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் பணிந்து விட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். தவிரவும் சிறிதும் சோர்வோ, தயக்கமோ இன்றி அவர்கள் இருவரும் விசாரணையின் போது சிரித்தபடியே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லியது; அதிகாரிகளை ஆச்சரியத்துக்கு கொண்டு போனது. "அவர்களின் மூளையில் இலங்கைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடக்கும் போர், இதுவே இறுதியானது என்ற வகையில் நன்றாக பதிந்து விட்டது' என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். "இரண்டு பேரும் அழுத்தமானவர்கள் மட்டுமல்ல; கடும் நெஞ்சுரம் படைத்தவர்களாகவே இருக்கின்றனர்' என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டி.என்.டி., என்றால் என்ன?:புலிகளின் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருளின் பெயர் டி.என்.டி., என்று அழைக்கப்படுகிறது. "ட்ரை நைட்ரோ டொலுவீன்' என்பதின் சுருக்கம் தான் டி.என்.டி. இது ஆரம்பத்தில் சாயப்பொருளாகத் தான் பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப் போரில் இதை வெடிபொருளாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். மஞ்சள் நிற திடப்பொருளான டி.என்.டி., மிகுந்த விஷத்தன்மை கொண்டது. அமெரிக்க ராணுவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுவது டி.என்.டி., தான். இப்பொருள் வெடிக்கும் போது, மனிதனுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படும். கல்லீரல் கடுமையாக பாதிக்கும். நுரையீரலிலும், கல்லீரலிலும் ரத்தம் வரும். மூச்சுத்திணறல் ஏற்படும். ஆண் தன்மை மங்கிப் போகும். உடலில் டி.என்.டி., பட்டால் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக தோல் மாறிவிடும். தோல் மீது பட்டதும் எரிச்சல் ஏற்படும். டி.என்.டி., தண்ணீரில் கரையாது. தண்ணீரை உறிஞ்சவும் செய்யாது. ஈரமான இடத்தில் கூட டி.என்.டி.,யை வெடிக்க வைக்க முடியும். அதற்காகத்தான் படகில் டி.என்.டி., வெடிபொருளை கொண்டு வந்து வெடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

மாநகராட்சி தேர்தல் முடிவுகள்

சென்னை மாநகராட்சி மறு தேர்தல் முடிவு
59 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி
தே.மு.தி.க - 5
பா.ஜனதா - 2
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு - 1


சென்னை, பிப்.21-

சென்னை மாநகராட்சி மறுதேர்தலில் 59 வார்டுகளில் தி.மு.க. கூட்டணியும், தே.மு.தி.க. 5 வார்டுகளிலும், பா.ஜனதா 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.

மாநகராட்சி மறுதேர்தல்

சென்னை மாநகராட்சி 100 வார்டுகளுக்கு மறுதேர்தல் நடத்த மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இந்த மறுதேர்தலை அ.தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகள் புறக்கணித்தன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட 33 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதியுள்ள 67 வார்டுகளுக்கும் கடந்த 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் 30 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தது. ஓட்டுபதிவு முடிந்ததும் ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

தி.மு.க.அணி வெற்றி

இரவு 11.30 மணி அளவில் 67 வார்டுகளுக்கும் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. 32 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், பா.ம.க. 9 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தே.மு.தி.க 5 இடங்களையும், பா.ஜனதா 2 இடங்களையும், மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு ஒரு இடத்தையும் கைப்பற்றின.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அவருக்கு அடுத்த படியாக ஓட்டு பெற்றவர்கள் வார்டு வாரியாக விவரம் வருமாறு:-

வார்டு எண் 2

ஆர்.டி.சேகர் (தி.மு.க.) - 7849, வடிவேலு (சுயே) - 3567, காஞ்சனா (பகுஜன் சமாஜ்) - 304.

வார்டு எண் 4

எம்.எம்.சாமி (தி.மு.க.) - 2254, தனுஷ்கோடி (தே.மு.தி.க.) - 1984.

வார்டு எண் 6

சின்னபொண்ணு (தி.மு.க.) - 2912, டில்லியம்மாள் (தே.மு.தி.க.) - 2451.

வார்டு எண் 9

புனிதவள்ளி (தி.மு.க.) - 4211, விஜி (தே.மு.தி.க.) -1611.

வார்டு எண் 12

முத்துகிருஷ்ணன் (தி.மு.க.) - 1767, நாராயணசாமி (தே.மு.தி.க.) - 1206, ஷாஜகான் (சி.பி.எம்.) - 1190.

வார்டு எண் 14

தேவகி (தி.மு.க.) - 6341, தமிழ்ச்செல்வி (தே.மு.தி.க.) - 3698.

வார்டு எண்-18

ஸ்ரீதர்(தி.மு.க.)-2,639, திருநாவுக்கரசு(தே.மு.தி.க.)-607.

வார்டு எண் 19

ராஜேந்திரன் (பா.ம.க.) - 2455, சவுந்தரபாண்டியன் (தே.மு.தி.க.) - 2057

வார்டு எண் 22

சுரேஷ் ஜெயக்குமார் (தி.மு.க.) - 4049, மேகமணி (தே.மு.தி.க.) - 1777, நாகராஜன் (பா.ஜ.க.) - 697

வார்டு எண் 23

ஜெயசங்கர் (தி.மு.க.) - 2367, குணசீலன் (தே.மு.தி.க.) - 704, வெங்கட்ராவ் (பா.ஜ.க.) - 404

வார்டு எண் 26

சுபாஷ் சந்திரபோஸ் (தி.மு.க.) - 3461, கார்மேகம் (தே.மு.தி.க.) - 1811, குமார் (பா.ஜ.க.) - 192.

வார்டு எண் 27

சர்தார் (தே.மு.தி.க.) - 3098, ஜெய்னுலாபுதீன் (தி.மு.க.) - 1922.

வார்டு எண் 31

செங்கை செல்லப்பா (காங்) - 3017, கிருஷ்ணமூர்த்தி (தே.மு.தி.க.) - 2707.

வார்டு எண்-35

சேகர்(தே.மு.தி.க.)-3,455, நெடுமாறன்(தி.மு.க.)-3326, பாண்டியன்(மார்க்சிஸ்டு கம்ï)-2706, ஜெயகுமார்(பா.ஜ.க.)-220

வார்டு எண் 36

திருவேங்கடம் (காங்) - 5407, ஜி.வி.பெருமாள் (தே.மு.தி.க.) - 4162.

வார்டு எண்-37

துரைராஜ்(தி.மு.க.)-3,083, பரிமளாசுரேஷ்பாபு(தே.மு.தி.க.)-1,426, கோபிகிருஷ்ணன்(பா.ஜ.க.)-341.

வார்டு எண் 40

கன்னியப்பன் (தி.மு.க.) - 4461, பாலமுருகன் (பகுஜன்சமாஜ்) -4142, குணசேகர் (தே.மு.தி.க.) - 3082,

வார்டு எண்-42

பிரபு (விடுதலை சிறுத்தைகள்) - 2919, மதியரசன் (தே.மு.தி.க.) - 2418, சத்தியமூர்த்தி (பா.ஜ.க.) - 403.

வார்டு எண் 45

உஷா (தே.மு.தி.க.) - 2639, சாந்தலட்சுமி (பா.ம.க.) - 2005, ரேணுகாதேவி (சி.பி.எம்) - 1314.

வார்டு எண் 48

மு.சரவணன் (தே.மு.தி.க) - 1638, எஸ்.வி.சங்கர் (காங்) - 1428, கண்ணதாசன் (பகுஜன் சமாஜ்) - 780

வார்டு எண் 49

முத்துகுமார் (பா.ஜ.க.) - 1726, மணிபால் (காங்) - 1475, லோகம்மாள் (தே.மு.தி.க.) - 241,

வார்டு எண்-52

ஹேமாவதி(காங்)-2,200, செல்வி(தே.மு.தி.க.)-1,045.

வார்டு எண் 54

மொத்த வாக்குகள்-11,382, நாகராஜன்(தி.மு.க.)-6,924 ,லிங்கதுரை(பா.ஜ.க.)-295, ஜெயசந்திரன்(தே.மு.தி.க.)-4,057.

வார்டு எண்-55

செஞ்சி தங்கராஜ் (பா.ம.க.) - 2368, மதியழகன் (தே.மு.தி.க.) - 1610.

வார்டு எண்-57

காஞ்சிதுரை(தி.மு.க.)-2,485, தாஸ்(தே.மு.தி.க.)-1,067, ஜெயசங்கர்(பா.ஜ.க.)-621.

வார்டு எண்-59

தேவி(எ)தேவகி(மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு)-2,803, சேகர்(தி.மு.க.)-1,739, பவுல்ராஜ்(தே.மு.தி.க.)-711.

வார்டு எண் 61

முகமது யாசின் (தி.மு.க.) - 1874, சம்பத் (தே.மு.தி.க.) - 1224, கார்த்திகேயன் (பா.ஜ.க.) - 238.

வார்டு எண் 63

மோகன் (தி.மு.க.) - 6321, பிரபாகரன் (தே.மு.தி.க.) - 6835, மாசானமுத்து (பா.ஜ.க.) - 573

வார்டு எண் 64

பி.கே.சேகர் (பா.ம.க.) - 5068, டெல்லி பாபு (தே.மு.தி.க.) - 2926, குமரேசன் (பா.ஜ.க.) - 1261.

வார்டு எண் 65

இளங்கோவன் (தி.மு.க.) - 7370, அன்புராஜ் (தே.மு.தி.க.) - 5070.

வார்டு எண் 66

புஷ்பலதா (தி.மு.க.) - 11,167, கிரிஜா (சுயே.) - 884.

வார்டு எண் 67

ஏழுமலை (பா.ம.க.) - 3308, ரமேஷ் (தே.மு.தி.க.) - 2504, டெல்லிபாய் (பா.ஜ.க.) - 181.

வார்டு எண்-69

சாந்திபாய்(தி.மு.க.)-1,896, லட்சுமி(தே.மு.தி.க.)-1,782, சரஸ்வதி(மார்க்சிஸ்ட் கம்ï)-1115.

வார்டு எண் 71

சிவலிங்கம் (தி.மு.க.) - 1922, ஞானசவுந்தரி (சுயே) - 918, விஜயரங்கன் (தே.மு.தி.க.) - 578.

வார்டு எண் 73

விஜயலட்சுமி (பா.ஜ.க.) - 1854, சரஸ்வதி (காங்கிரஸ்) - 1819 ,சித்ரா (தே.மு.தி.க.) - 1337.

வார்டு எண் 77

திராவிடநாடு முனுசாமி (தி.மு.க.) - 4198, சிவராமன் (தே.மு.தி.க.) - 770, சதாசிவம் (பா.ஜ.க.) - 299.

வார்டு எண் 78

லாசர் (காங்) - 7792, செல்வம் (சுயே) - 955, சிவசங்கர் (பா.ஜ.க.) 838.

வார்டு எண்-82

பிரபாகரன்(தி.மு.க.)-5,703, ரமேஷ்(தே.மு.தி.க.)-1,126.

வார்டு எண் 83

எம்.நாகராஜன் (காங்) - 4933, கமாலுதீன் மஜீத் (தேசியவாத காங்கிரஸ்) - 1044, சிவநேசன் (பா.ஜ.க.) - 243.

வார்டு எண்-88

வாசுதேவன்(காங்)-6,075, முகமது தப்ரீஸ் (தே.மு.தி.க.) - 848.

வார்டு எண் 89

வனஜா (காங்) - 5368, மஞ்சுளா (தே.மு.தி.க.) - 643, சிவசித்ரா (பா.ஜ.க.) - 1102.

வார்டு எண் 95

ஆர்.துரை (தி.மு.க.) - 4069, ராமநாதன் (பா.ஜ.க.) - 580.

வார்டு எண்-97

கோவிந்தசாமி(காங்)-3,126, பாபு(தே.மு.தி.க.)-1,434, ஜெயசந்திர பாபு(பா.ஜ.க.)-55.

வார்டு எண்-102

பாலகிருஷ்ணன்(பா.ம.க.)-561, மகேஷ்(தே.மு.தி.க.)-354, தனசேகர்(பா.ஜ.க.)-227.

வார்டு எண் 103

ராஜாத்தி (தி.மு.க.) - 1752, சரளா (சி.பி.எம்) - 1045, வசந்தி (தே.மு.தி.க.) - 234, பத்மினி (பா.ஜ.க.) - 54.

வார்டு எண் 105

ருக்மாங்கதன் (காங்கிரஸ்) - 1596, மணிகண்டன் (தே.மு.தி.க.) - 720, குமரேசன் (பா.ஜ.க.) - 309.

வார்டு எண் 106

ஆளூர் மஜித் (தி.மு.க.) - 2938, அப்துல்காலிக் (தே.மு.தி.க.) - 1490.

வார்டு எண்-122

சுப்பிரமணி(தி.மு.க.)-2,733, லோகநாதன்(தே.மு.தி.க.)-2,278.

வார்டுஎண்-124

சுசீலா கோபாலகிருஷ்ணன்(காங்)-2,902, ஆனந்தன்(தே.மு.தி.க.)-1,300, ஸ்ரீதரன்(பா.ஜ.க.)-697.

வார்டு எண் 125

பிரகாஷ் (பா.ம.க.) - 6774, பாலாஜி (தே.மு.தி.க.) - 1065, கணேசன் (பா.ஜ.க.) - 598.

வார்டு எண் 126

ஏழுமலை (தி.மு.க.) - 5688, மலர்மன்னன் (தே.மு.தி.க.) - 672, சாய்ராமன் (பா.ஜ.க.) - 159.

வார்டு எண்-130

தனசேகரன்(தி.மு.க.)-4,674, செல்வமணி(தே.மு.தி.க.)-2,688.

வார்டு எண் 131

வெங்கடேசன் (பா.ம.க.) - 6913, முத்து (தே.மு.தி.க.) - 2918.

வார்டு எண் 132

வில்லியம் (காங்) - 6193, ரவிக்குமார் (தே.மு.தி.க.) - 2026.

வார்டு எண் 133

கவிதா (தி.மு.க.) - 6082, ஆர்.அமுதா (தே.மு.தி.க.) - 714.

வார்டு எண்-142

ஜெயராமன்(பா.ம.க.)-2,198, குருசாமி(தே.மு.தி.க.)-591, சரோஜா(மார்க்சிஸ்டு கம்ï)-651, அசோக்குமார்(பா.ஜ.க.)-540.

வார்டு எண் 143

குப்பன் (தி.மு.க.) - 2753, மணி (பா.ஜ.க.) - 868, பாலமுருகன் (தே.மு.தி.க.) - 721.

வார்டு எண் 144

மங்கள்ராஜ் (காங்) - 6701, குணசேகரன் (தே.மு.தி.க.) - 667, ஏழுமலை (பா.ஜ.க.) - 284.

வார்டு எண்-145

உமாசாசவி (விடுதலை சிறுத்தைகள்) -4923, மகாலட்சுமி (தே.மு.தி.க.) -1707.

வார்டு எண் 147

அன்பழகன் (தி.மு.க.) - 4381, நாகப்பன் (தே.மு.தி.க.) - 1045, லட்சுமி சுரேஷ் (பா.ஜ.க.) - 812.

வார்டு எண் 149

ஜமுனா கேசவன் (பா.ம.க.) - 4514, பிரேமா (தே.மு.தி.க.) - 1675, தனலட்சுமி (பா.ஜ.க.) - 649.

வார்டு எண் 150

வேலு (தி.மு.க.) - 8306, ஜமால் முகைதீன் (தே.மு.தி.க.) - 1526

வார்டு எண் 151

எம்.வேலாயுதம் (காங்) - 2917, வாசுதேவன் (தே.மு.தி.க.) - 1040, ராஜ்குமார் (பா.ஜ.க.) - 627.

வார்டு எண் 152

முருகேசன் (காங்) - 5633, ராஜா (தே.மு.தி.க.) - 1327

வார்டு எண் - 153

கிஷா குமாரி (தி.மு.க.) - 31386, மைதீன் பீவி (தே.மு.தி.க.) - 1930

வார்டு எண் 154

மீனாட்சி வெங்கட்ராமன் (காங்) - 4622, புஷ்பலதா (தே.மு.தி.க.) - 4526.

வார்டு எண் 155

சாந்தி (காங்) - 6825, சுமதி (தே.மு.தி.க.) - 3154.

Tuesday, February 20, 2007

கர்நாடகாவில் காவிரிப் போராட்டங்கள்

*கர்நாடகத்தில் தமிழக பஸ் மீது தாக்குதல்
*தமிழ் நாளிதழ்களுக்கு தடை
*ஐடி ஊழியர் போராட்டம்


பிப்ரவரி 19, 2007

ஓசூர்: பெங்களூரிலிருந்து ஓசூர் திரும்பிக் கொண்டிருந்த தமிழக அரசு விரைவுப் பேருந்து கல்வீசித் தாக்கப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்து கர்நாடகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. பெங்களூரில் நடந்து வந்த போராட்டம் சற்றே ஓய்ந்ததைத் தொடர்ந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு பேருந்துகள் மற்றும் பிற வாகனப் போக்குவரத்து கடந்த சில நாட்களாக பிரச்சினையின்றி நடந்து வந்தது.

இந் நிலையில் நேற்று பெங்களூர் சென்ற தமிழக அரசுப் பேருந்து கல்வீசித் தாக்கப்பட்டது.

ஓசூரிலிருந்து பெங்களூருக்கு அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்றது. அதை மணிவாசகம் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை பெங்களூர் சென்ற அந்தப் பேருந்து மீண்டும் ஓசூர் திரும்பியது.

பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். லக்கசந்திரா என்ற இடத்தில் பேருந்து வந்தபோது ஒரு கும்பல் வழிமறித்து கல்வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, பேருந்தில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். பின்னர் அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றி ஓசூருக்கு அனுப்பினர். டிரைவர் மணிவாசகம் கண்ணாடி உடைந்த நிலையில் பேருந்தை ஓசூருக்கு ஓட்டி வந்தார்.

இச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. மாவட்ட எஸ்.பி. தேன்மொழி எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தமிழக எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சாமியார்கள் போராட்டம்:

இதற்கிடையே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்øத்ச சேர்ந்த சாமியார்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இதுகுறித்து பெட்டாபுரா ஸ்ரீ சென்னபசவ தேசிகேந்திர சுவாமிஜி மற்றும் அத்வைத் மடாதிபதி சிவலிங்கேந்திர சுவாமிஜி ஆகியோர் மைசூ>ல் செய்தியாளர்களிடம் பேசுகையில், சீக்கிய, கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் இந்து மதத் தலைவர்கள், பல்வேறு மடத் தலைவர்கள் என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மதத் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மைசூருக்கு வரவுள்ளனர்.

20ம் தேதி அனைவரும் பங்கேற்கும் பாதயாத்திரை நடைபெறவுள்ளது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முடிவடையும்.

அங்கு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்து தயாரிக்கப்பட்டுள்ள மனுவை ஆட்சித் தலைவ>டம் வழங்கவுள்ளோம்.

கர்நாடக விவசாயிகள் நலனைப் புறக்கணிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்பட்டால் டெல்லிக்குச் சென்று குடியரசுத் தலைவர் மாளிகை முன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் கூறினர்.

ஸ்ரீ ரவிசங்கரும் ...

இப்போராட்டத்தில் ஆர்ட் ஆப் லிவிங் நிறுவனத் தலைவரும், ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி, ஆதிசுன்சுனகிரி மடாதிபதி பாலகங்காதர சுவாமி, சுட்டூர் மடாதிபதி சிவாத்ரி தேசிகேந்திர சுவாமி, உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி உள்ளிட்டோர் முக்கிய மடாதிபதிகள், ஆன்மீகத் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே, மைசூர், மாண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

மாண்டியா மாவட்டத்தில் மட்டூர், கே.ஆர்.பேட்டை, ஸ்ரீரங்கப்பட்டனா, மாண்டியா ஆகிய நகரங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூர்மைசூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மாண்டியாவில் காவிரி பாதுகாப்பு சமிதி சார்பில் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் நாளிதழ்கள் நிறுத்தம்:

மைசூரில், இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழ் நாளிதழ்களை வினியோகிப்பதை நிறுத்தி வைக்க மைசூர் செய்தித்தாள் வினியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சாப்ட்வேர் என்ஜினியர்கள் போராட்டம்:

இந் நிலையில் பெங்களூர் மகாத்மா காந்தி சாலையில் கன்னட சாப்ட்வேர் என்ஜினியர்கள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினர். சுமார் 600 பேர் இந்தப் போரட்டத்தில் பங்கேற்றனர்.

Monday, February 19, 2007

டெல்லி-லாகூர் ரயிலில் குண்டு: 66 பலி

டெல்லியில் இருந்து பாகிஸ்தான் சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் சாவு: தீவிரவாதிகள் நாசவேலை

பானிபட், பிப். 19-

டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு வாரத்துக்கு 2 தடவை பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி முதல் இந்த ரெயில் சேவை நடந்து வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அத்தாரி வரை இந்த ரெயில் ஓடுவதால் "அத்தாரி எக்ஸ்பிரஸ்'' என்றும் அதன் பிறகு பாகிஸ்தானுக்குள் ஓடும் ரெயில் "சம்ஜ×தா எக்ஸ்பிரஸ்'' என்றும் இந்த ரெயில் அழைக்கப்படுகிறது.

பழைய டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்றி ரவு 10.40 மணிக்கு இந்த ரெயில் அத்தாரி நோக்கிப் புறப்பட்டது. 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. அதில் மொத்தம் 610 பயணி கள் இருந்தனர். பெரும்பா லானவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களா கும்.

நள்ளிரவு 1.50 மணிக்கு அரியானா மாநிலம் பானிபட் அருகே ரெயில் சென்று கொண்டிருந்த போது கடைசி பெட்டிகளில் திடீரென குண்டு வெடித்தது.
இதையடுத்து கடைசி 2 பெட்டிகளில் தீ பிடித்தது. ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்த காரணத்தால் கடைசி 2 பெட்டி முழுக்க தீ பரவி நாலாபுறமும் பற்றி எரிந்தது.

அயர்ந்து தூங்கிக் கொண் டிருந்த பயணிகள் திடீரென தங்களை சுற்றி தீ எரிவதை கண்டு அலறினார்கள். இதை யடுத்து சிவா கிராமம் பகுதியில் ரெயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.

2 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்தனர். இதற்கிடையே கடைசி 2 பெட்டியையும் துண்டித்து தீயை அணைக்க சிலர் முயன்ற னர். அதற்கு பலன் கிடைக்க வில்லை

நாலாபுறமும் தீ எரிந்ததால் கடைசி 2 பெட்டிகளில் இருந்த பயணிகளில் சிலர் மட்டுமே தப்ப முடிந்தது. மற்றவர்கள் தீயில் கருகினார்கள். 66 பேர் ரெயில் பெட்டிக்குள்ளேயே கருகி உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் பாகிஸ் தான் நாட்டுக்காரர்கள்.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் முதன் முதலாக இந்த குண்டு வெடிப்பு நாச வேலை மூலம் பாகிஸ்தானி யர்களையே கொன்று குவித் துள்ளனர்.
சுமார் 50 பயணிகள் தீகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு பானிபட் நகரில் உள்ள சிவில் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களில் சில ரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சுமார் 1 மணி நேர போராட் டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. அதன் பிறகு 2 பெட்டிகளும் துண்டிக்கப்பட்டு தனியாக கொண்டு செல் லப்பட்டது. 2 பெட்டிகளுக் குள் பிணமான 64 பேர்களின் உடல்கள் கரிக்கட்டையாகி விட்டன.

உயிரிழந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் யார் என்றே தெரியாத அளவுக்கு உடல்கள் உருக்குலைந்து சாம்பலாகி விட்டன.

சம்பவ இடத்துக்கு போலீ சாரும் வடக்கு மண்டல ரெயில்வே உயர் அதிகாரி களும் சென்று தீவிர விசா ரணை நடத்தினார்கள். அப் போது 3 சூட்கேஸ்களில் வெடிகுண்டுகள், தீ பிடிக்கும் திரவங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். அதில் 2 வெடிகுண்டுகள் ரெயிலுக் குள்ளும், ஒரு வெடிகுண்டு தீவானா ரெயில் நிலையப் பகுதியிலும் கிடந்தன.

தேசிய பேரழிவு பதிலடிப் படை வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், அரியானா மாநில தடயவியல் நிபுணர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் ஒருங்கிணைந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். பானிபட் மாவட்டம் முழுக்க அதிரடி தேடுதல் வேட்டையும் நடத்தப் பட்டது.

முதல் கட்ட விசாரணையில் இது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் சதி வேலை என்று தெரிய வந்துள்ளது. பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கொடூர திட்டத்துடன் அவர்கள் நன்கு திட்டமிட்டு கடைசி 2 பெட்டியில் குண்டு வெடிப்பை நிகழ்த்தி தீ பிடிக்க செய்துள்ளனர்.

ரெயிலில் குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டதாக தீவானா ரெயில் நிலைய கேட் கீப்பர் கூறினார். அவர் உள்பட பயணிகளிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சம்பவ இடத்துக்கு மத்திய மந்திரிகள் சிவராஜ் பாட்டீல், லல்லுபிரசாத் யாதவ், வேலு, உள்துறை செயலாளர் வி.கே.தக்கல், தேசிய பாதுகாப்பு படை இயக்குனர் ஜே.கே.தத், வடக்கு மண்டல ரெயில்வே பொது மேலாளர் வி.என்.மாத்தூர் உள்பட உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். ரெயிலுக்கு குண்டு வைத்த தீவிரவாதிகளை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தீவிர விசாரணைக்கு பிறகு அத்தாரி எக்ஸ்பிரஸ் ரெயில் 5 பெட்டிகளை மட்டும் விட்டு விட்டு 11 பெட்டிகளுடன் இன்று அதிகாலை 3 மணிக்கு எல்லை நோக்கி புறப்பட்டுச் சென்றது.