தலைப்புகள்-11/4
தலைப்புச் செய்திகள்:
தமிழ் நாளிதழ்களில் இன்று:
நவம்பர் 4
தினத்தந்தி
* மன்மோகன் சிங், சோனியா சென்னை வந்தனர்
# 2நாள் சுற்றுபயணமாக சென்னை வந்த மன்மோகன்சிங், சோனியா காந்திக்கு கருணாநிதி தலைமையில் சிறப்பான வரவேற்பு.
* தி.மு.கழக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு கைது
# சென்னை மாநகராட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ பெண் வேட்பாளரை தாக்கியதாக தி.மு.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு கைது.
* புல்லட் ரெயில் பிரதமரிடம் கருணாநிதி மனு
# சென்னையில் இருந்து கோவை, மதுரைக்கு புல்லட் ரெயில் விட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமரிடம் கருணாநிதி மனு.
* மத்திய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
# இலங்கை ராணுவம் மூடிவைத்து உள்ள நெடுஞ்சாலையை திறந்து விடும்படி மத்தியஅரசு வற்புறுத்த டாக்டர்ராமதாஸ்
தினமணி
* காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பு: 2 நாள்களுக்கு மழை பெய்யும்
* சென்னையில் மன்மோகன் சிங், சோனியாவுக்கு உற்சாக வரவேற்பு
* மலேகாம் குண்டுவெடிப்பு: மூளையாக செயல்பட்ட ஷபீர் பேட்டரிவாலா கைது
* சிவனாண்டி சீனியாரிட்டியை ரத்து செய்யும் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
* பழம்பெரும் நடிகை ஈ.வி. சரோஜா காலமானார்
தினமலர்
* தமிழகம் முழுவதும் உஷார்! : இன்றும் கன மழை பெய்யும் * அணைகள் நிரம்பி வழிவதால் வெள்ள அபாயம்
# தமிழகம் முழுவதும் மேலும் இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏரிகளைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
* தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., கைதாகி மாலை விடுதலை
# சென்னை மாநகராட்சி 59வது வார்டு தேர்தல் மோதலின்போது ஏற்பட்ட வன்முறையில் பெண் என்றும் பாராமல் முன்னாள் கவுன்சிலர் தேவியை உருட்டுக்கட்டையால் பயங்கரமாக தாக்கிய புரசை எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு, தி.மு.க., வட்டச் செயலர் சின்னத்துரை ஆகியோரை போலீசார் காலை கைது செய்து மாலையே விடுவித்தனர்.
* சென்னை விமான நிலையத்தில் பிரதமர்,சோனியாவுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு
# பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாவும் வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருவருக்கும் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
* ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிப்பு
# "அகில இந்திய அளவில் ஆண்டுக்கு 4.5 லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை புதிதாக புற்றுநோயாளிகள் உருவாகின்றனர்' என மதுரை அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லுõரியின் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் கூறினார்.
தினகரன்
* சென்னை மாநகராட்சி தேர்தல் தகராறு திமுக எம்எல்ஏ கைது
மார்க்சிஸ்ட் புகார் மீது போலீஸ் நடவடிக்கை
* மோட்டார் சைக்கிள் திருடிய கோயில் பூசாரி சிக்கினார்
* நீலகிரியில் தொடர் மழையால் நிலச்சரிவு
* 5 மணி நேரத்தில் 23 காட்சிகள் அமிதாப் சாதனை
* அமெரிக்க ராணுவ உறவு தீமையைத் தரும் மார்க்சிஸ்ட் எச்சரிக்கை
* ஒருநாள் போட்டிகளில் ‘டாப் 10’ தொடக்க ஜோடி கேல் & சந்தர்பால் முன்னிலை
No comments:
Post a Comment