Saturday, November 04, 2006

ஈ.வி.சரோஜா மரணம்

பழம்பெரும் நடிகை ஈ.வி. சரோஜா காலமானார்

சென்னை, நவ. 4: பழம்பெரும் நடிகை ஈ.வி. சரோஜா (71) மாரடைப்பு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.

நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், வெள்ளிக்கிழமை மாலை இறந்தார். "என் தங்கை' திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், மதுரைவீரன், படிக்காத மேதை, வீரத்திருமகன், குலேபகாவலி, பாக்கிய லட்சுமி, கொடுத்து வைத்தவள் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார் ஈ.வி சரோஜா. இவரது கணவர் இயக்குநர் டி.ஆர். ராமண்ணா சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இரங்கல்: நடிகை ஈவி. சரோஜாவின் மறைவு தென்னிந்திய திரைப்படத்துறைக்கு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்

செய்தி: தினமணி

No comments: