Thursday, November 02, 2006

சன்டிவி கட்டண சேவை!

கட்டண அலைவரிசையாகிறது சன் டிவி

மும்பை, நவ. 2:

டிசம்பர் 2-ம் தேதி முதல் சன் டிவி கட்டண அலைவரிசையாக (பே சேனல்) மாறுகிறது. இத்தகவலை மும்பை பங்குச்சந்தைக்குத் தெரிவித்துள்ளது சன் டிவி.

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து அந் நிறுவன பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் புதன்கிழமை நல்ல விலைக்குக் கைமாறின.

சன் டிவி அலைவரிசையைப் பெற சந்தாதாரர் ஒருவருக்கு மாதத்துக்கு ரூ.12 என்ற வீதத்தில் கேபிள் ஆப்பரேட்டர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

செய்தி: தினமணி

No comments: