தலைப்புகள்-11/5
தலைப்புச் செய்திகள்:
தமிழ் நாளிதழ்களில் இன்று
நவம்பர் 5
தினத்தந்தி
* தமிழக வளர்ச்சிக்கு மத்தியஅரசு துணை-பிரதமர்
# தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்தார்.
* 5 லட்சம் பேருக்கு வேலை கருணாநிதி பேச்சு
# தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டு களில் வாகன தொழிலில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் -கருணாநிதி.
* தி.மு.க. எம்.எல்.ஏ. கைது கண்துடைப்பு -ஜெயலலிதா
# தி.மு.க. எம்.எல்.ஏ. கைது செய்யபட்டது கண் துடைப்பு நாடகம் என்று அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா கூறி உள்ளார்.
* காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் மழை நீடிக்கும்
# வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
* பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 4 பேர் பலி
# சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை வெடித்து சிதறியது. இதில் 4 பேர் பலி.
*
தினமணி
* கருணாநிதி வழிகாட்டுதலில் வெல்வோம்: சோனியா
* தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு உதவும்: பிரதமர்
* ஸ்ரீபெரும்புதூர் நினைவு இனி வேதனை தராது: சோனியா
* அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு சோம்நாத் பெயர்?
* தமிழக அரசின் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றுகிறார் மன்மோகன்: கருணாநிதி
* ராஜீவ் நினைவிடத்தில் பிரதமர், சோனியா, முதல்வர்
* திமுக எம்.எல்.ஏ. கைது கண்துடைப்பு நாடகம்: ஜெ.
தினமலர்
* ராக்கெட் குண்டுகள் கடத்தப்பட்ட வழக்கில்...திணறல்!- 700 குண்டுகள் இருக்கும் இடம் தெரியவில்லை
# ஐதராபாத் : சென்னையில் ராக்கெட் குண்டுகள் மற்றும் லாஞ்சர்களை உற்பத்தி செய்து வாங்கி, ஆந்திராவில் உள்ள நக்சலைட்டுகளுக்கு அனுப்பிய "ராக்கெட்' ரகுவும், அவனது மனைவி சுதாராணியும் ஆந்திர மாநிலம் வாரங்கல் போலீசாரிடம் நேற்று சரண் அடைந்தனர்.
*பரிதாபம்- பூரி ஜெகந்நாதர் கோவிலில் நெரிசலில் சிக்கி நான்கு பக்தர்கள் பலி - 25 பேர் படுகாயம் : நீதி விசாரணைக்கு ஒரிசா மாநில அரசு உத்தரவு
# புவனேஸ்வர் : பூரி ஜெகந்நாதர் கோவிலில் நேற்று காலை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி நான்கு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
*15 ஆண்டுகளுக்கு பின் ராஜிவ் நினைவிடத்தில் கருணாநிதி அஞ்சலி
# சென்னை : தமிழக முதல்வர் கருணாநிதி முதன் முறையாக ராஜிவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
தினகரன்
* சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்கள் நவீனமயம் - வாகன ஆராய்ச்சி மைய விழாவில் பிரதமர் அறிவிப்பு
* சூறாவளியில் சிக்கி மீண்ட மீனவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் சக்தி
* மழையால் ஏற்படும் பாதிப்பு எவ்வளவு? அரசுக்கு தினமும் அறிக்கை கலெக்டர்களுக்கு உத்தரவு
* சிங்கப்பூரில் நடந்த உண்மை சம்பவம் சினிமாவாகிறது
* சன்னிதானத்தில் பக்தர்கள் தள்ளுமுள்ளு பூரி ஜகன்னாதர் கோயிலில் நெரிசலில் சிக்கி 4 பேர் பலி
* சாம்பியன்ஸ் டிராபி பைனல் ஆஸி.&வெ. இண்டீஸ் இன்று மோதல்
No comments:
Post a Comment