Sunday, November 05, 2006

சதாமுக்கு தூக்கு

துஜெய்ல் படுகொலை வழக்கு : ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை

பாக்தாத்: கடந்த 1982ம் ஆண்டு துஜெய்ல் நகரில் 148 பேர் படுகொலை செய்தது தொடர்பாக ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனை சாகும் வரை தூக்கிலிட நீதிபதி ரவுப் ரசித் அப்துல் ரகுமான் உத்தரவிட்டார்.

மேலும் 30 நாட்களுக்குள் சதாமுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றவும் அவர் உத்தரவிட்டார். விவரம் வருமாறு ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் மற்றும் ஏழு பேருக்கு எதிராக கடந்த 1982ம் ஆண்டு துஜெய்ல் நகரில் 148 பேர் படுகொலை செய்தது தொடர்பாக பாக்தாத் சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததுது. வழக்கு விசாரணை முடிந்து விட்ட நிலையில் தீர்ப்பை நீதிபதி வெளியிட்டார் . இதில் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனை சாகும் வரை தூக்கிலிட நீதிபதி உத்தரவிட்டார்.

சதாம் உசேனுடன் சேர்த்து பார்ச்ன் இப்ராஹிம் மற்றும் ஹமித் அல் பய்தருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது . ஈராக் முன்னாள் துணை அதிபர் தகா யாசின் ரமதானுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக பாத் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 10 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்ததீர்ப்பையடுத்து ஈராக்கில் பதட்டம் நிலவுகிறது. மக்கள் சாலைகளில் சதாமுக்கு ஆதரவாகவும், அமெரிக்கா மற்றும் ஈராக் அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கூச்சல் எழுப்பினர். ஈராக்கில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் இந்த தீர்ப்பை கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டனர்.

செய்தி: தினமலர்

No comments: